சிமிர்னா சபையின் காலம் Jeffersonville, Indiana, USA 60-1206 1மிகுந்த மகிமை பொருந்திய பிதாவே, எங்களுடைய ஜீவனில் நாங்கள் அழியாமையைப் பெற்றிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் தேவனின் ஜீவனானது, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அக்கினி மயமான நாவுகளாகப் பிரிந்து அமர்ந்து, அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்; அதினால் ஆவியானவர் அவரவருக்கு தந்தருளினதின்படியே அவர்கள் வெவ்றே பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். ஓ, பிதாவே, நீர் உம்மையே சபையின் நடுவில் பங்கிட்டுக் கொடுத்தீர் என்பதற்காக நாங்கள் எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம். ''நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்'' என்று எங்கள் கர்த்தர் கூறியதில் வியப்பொன்றுமில்லை. எவ்வளவாய் பரலோகத்தின் தேவன் தன் ஜனங்களுக்குள் ஜீவிக்கிறார்'' இன்னும் கொஞ்சம் காலத்தில் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், ஏனெனில் நான் உங்களோடும், உங்களுக் குள்ளும், உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களிலும் இருக்கிறேன்'' என்று கூறினீர். ஒவ்வொரு சபைக்காலத்திலும் நீர் இங்கே, நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராக இருந்து வந்திருக்கிறீர். நீர் நடப்பிக்கிற கிரியைகளின் மூலமாக நாங்கள் உம்மை அறிகிறோம். “விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் தொடரும்''. 2கர்த்தாவே, அனைத்துக் காலங்களின் உச்சக்கட்டத்தை நாங்கள் காண்கையில், காலமானது ஓடி முடிவடையப் போகிறது, அப்பொழுது நித்தியமானது உதிக்கிறது. பிதாவாகிய தேவனே, இன்றைக்கு, அந்த மீதியானவர்களுக்குள் நாங்கள் ஜீவித்துக் கொண்டிருப்பதைக் குறித்து அறிந்து கொள்வதில் மகிழ்வெய்து கிறோம். எங்களுடைய ஜீவியத்தை கருத்தாய் காவல் செய்து, நாங்கள் கொண்டிருக்கும் நோக்கங்களையும், இலக்கையும் பார்த்து, பரிசுத்த ஆவியானவர் எங்களை கையிலெடுத்துக் கொண்டிருக் கிறதையும் பார்க்கிறோம், தேவனே, தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் இன்றிரவில், நாங்கள் வாழும் இச்சபைக் காலங்களைப் பற்றி உணர்ந்து கொள்ளவும், கர்த்தராகிய இயேசுவினிடத்தில் வேகமாக ஓடிப் போகவும் செய்யும், ஏனெனில், ''கர்த்தருடைய நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்'' என்று மிகவும் தெளிவாக எழுதப்பட்டுள்ளதே. ஓ தேவனே, இன்றிரவில் வந்து எங்களை அபிஷேகியும், கர்த்தாவே, மனங்குழம்பி, அலைந்து திரிகிறவர்களை கொண்டு வாரும், ஓ, கர்த்தாவே, இந்த எளிய ஆடுகளைக் கண்ணோக்கிப் பாரும், அவர்களுக்கு எவ்விடங்களிலிருந்தும் மேய்ப்பர்களின் அழைப்புகள் வரப்பெற்று கொண்டிருக்கிறார்கள். எனவே எதை விசுவாசிப்பது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆடுகளின் பெரிய மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அவர்கள் செவி கொடுக்கச் செய்ய வேண்டுமென ஜெபிக்கிறேன், பிதாவே. அவருடைய மகத்தான ஆவியானவர் இன்றிரவில், ''என் பிள்ளையே, என்னிடம் ஓடி வா, நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன், அது உன்னை உன்னுடைய நித்திய ஊருக்கு போவதற்காக முத்திரையிட்டு விடும்'' என்று அவர்களிடம் பேசட்டுமே. நேரமானது விரைவாக முடிந்து விடப்போவதை நாங்கள் காண்கையில், அவர்கள் அடிபட்டு, அலையுண்டு ஓடுகிறதாக இருக்க வேண்டாம். இதை அருளும், பிதாவே. பிரசங்கியின் மூலம் பேசியருளும், கேட்கிறவர்களுடய செவிகள் வாயிலாக செவி கொடுத்தருளும், நாங்கள் யாவருமே செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். (அமருங்கள்). இன்றிரவில் நாம் இரண்டாவது சபைக் காலத்தைப் பற்றி படிக்கப் போகிறோம். அநேகர் குறிப்பெடுத்துக் கொண்டிருக் கிறதை நான் காண்கிறேன். எனவேதான் இவைகளை ஒவ்வொரு தடவையும் தெளிவாகக் கொடுக்க விரும்புகிறேன். 3இரண்டாவது சபைக் காலமானது, சிமிர்னா சபைக் காலம் என்று அழைக்கப்பட்டது. எபேசு சபைக் காலம் முடிந்த வுடனேயே சிமிர்னா சபைக் காலம் ஆரம்பித்து விட்டது. எபேசு சபைக் காலம் கி.பி.55 முதல் 170 வரை நீடித்தது. சிமிர்னா சபைக் காலம் கி.பி.170 முதல் 312 முடிய நீடித்தது. இந்தச் சபை உபத்திரவப்படுத்தப்பட்ட சபையாகும். உபத்திரவத்திலிருந்து வந்து இந்த சபை இரத்த சாட்சிகளின் கிரீடத்தை அணியும். அந்தக் காலத்தில் தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு ஜீவ கிரீடத்தைத் தருவதாக தேவன் வாக்களித்துள்ளார். 4ஒவ்வொரு சபைக்காலத்திற்கும் தேவன் தம் கரத்தில் ஏந்தியள்ள ஒரு நட்சத்திரம் உண்டு. அந்த நட்சத்திரம் அந்தந்த சபைக்கு அளிக்கப்பட்ட செய்தியாளனுக்கு (தூதனுக்கு) அடை யாளமாகத் திகழ்ந்தது. எபேசு சபைக் காலத்திற்குரிய தூதன், நான் நன்கு அறிந்திருக்கிறதின்படி, பவுல் அப்போஸ்தலன்தான். (அந்த ஒவ்வொரு தூதர்கள் இன்னார் என்று வேதத்தில் பெயர் குறிப்பிடப்படவில்லை). எபேசுவில் சபையை நிறுவியவன் பவுல்தான், அவனே அந்த சபைக் காலத்திற்குரிய ஊழியக்காரனு மாவான். அவனுடைய ஊழியம் சபைக்கு ஒளியைக் கொண்டு வந்தது. அப்பொழுது பரிசுத்த யோவான் பவுலுக்குப் பிறகு ஊழியத்தை மேற்கொண்டான். அதன் பிறகு, பாலிகார்ப் என்பவர் தொடர்ந்து உள்ள காலத்தில் வந்தார். 5சிமிர்னா சபையின் காலத்திற்கு, நான் அறிந்து கொண்ட அளவுக்கு, ஐரேனியஸ் என்பவர் தான் தூதன். ஏன் பாலிகார்ப்பை நான் இச்சபைக்குரிய தூதனாக தெரிந்து கொள்ளாமல், ஐரேனி யஸை தெரிந்து கொண்டேன் என்பதற்கான காரணத்தை நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன். அநேக சபை குருமார்களும், வேதபோதகர்களும், அந்த தூதன் பாலிகார்ப்தான் என்று எண்ணுகிறார்கள். பாலிகார்ப் பரிசுத்த யோவானின் சீஷன் என்பது உண்மையே. பாலிகார்ப் தன்னுடைய சாட்சியை, தான் இரத்த சாட்சியாக மரித்ததின் மூலம் முத்திரையிட்டார், அவரை அவர்கள் அவரது இருதயத்தின் கீழ் கத்தியால் குத்திக் கொன்றார்கள். அவர் ஒரு மகத்தான மனிதர்தான், குறிப்பிடத்தக்க மனிதர்கள்தான், தேவமனிதர்கள்தான், இனிமையானவர் கூட. நமக்குக் கிடைத்த மகத்தான கிறிஸ்தவர்களுக்குள் அவர் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய வாழ்க்கைக்கு எதிராக நீங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. ஐரேனியஸை நான் தெரிந்து கொண்டதின் காரணம் என்ன வெனில், பாலிகார்ப்பைவிட, ஐரேனியஸ் பரிசுத்த வேதத்திற்கு மிகவும் அதிகமாக நெருக்கமாக இருந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஸ்தாபனத்தை உண்டாக்குகிறதான ரோமானிய யோசனைக்கு பாலிகார்ப் இணக்கமாக இருந்தார். ஐரேனியஸோ மிகவும் உறுதியுடன் அதை எதிர்த்தார். அவர் முழுவதுமாக அதை வெளிப்படையாகக் கண்டித்தார். அதன்பிறகு, நிசாயா ஆலோசனை சங்கம் கூடிய பொழுது, நாம் யாவரும் அறிந்திருக்கிறபடி, அங்கே அந்த விஷயம் விவாதத்திற்கு வந்தது; மிகப் பெரிய தீர்வு செய்து கொள்ள வேண்டிய விஷயமாக அவர்களுக்கு இருந்தது என்னவெனில், தேவன் மூன்று நபர்களா, அல்லது ஒருவரா என்பது தான். தேவன் தேவனாகவே இருக்கிறார், அவர் ஒரு ஆள்தான் என்ற அந்தக் கருத்தின் பட்சத்தில் ஐரேனியஸ் நின்றார். 6நான் இப்பொழுது “நிசாயாவுக்கு முந்தின காலத்தின் பிதாக்கள்'' (Ante-Nicene Fathers) என்ற புத்தகத்தின் வால்யூம் 1ன் பக்கம் 412ல் இருந்து ஒரு சிறிய மேற்கோளை வாசிக்கட்டும். நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது ''நிசாயாவுக்கு முந்தின காலத்தின் பிதாக்கள்'' என்ற புத்தகத்தின் 1வது வால்யூம் 412வது பக்கம். இப்புத்தகத்திற்கு மூன்று வால்யூம்கள் உண்டு. நீங்கள் அவை முழுவதையுமே வாசிக்கலாம். அநேக அத்தியா யங்கள் அதில் உண்டு. நான் இப்பொழுது இதின் கடைசிப் பாகத்தில், கடைசி இருபது, முப்பது வசனங்களை வாசிக்கிறேன். அவைகள் யாவும் நான் வாசிக்காமல் அதன் ஒரு பாகத்தை மட்டும் வாசிப்பேன். ''அவர் வேறு என்னவெல்லாமாக அழைக்கப்பட்டாரோ, அவையெல்லாம், அந்த ஒருவருக்கே கொடுக்கப்பட்ட பட்ட மாகும். (பாருங்கள், அவர்கள் அவரை பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று அழைத்தனர் அவை யாவும் பட்டங்களே தவிர, நாமங்கள் அல்ல என்று இவர் இங்கே கூற முற்படுவதைப் பாருங்கள். இன்றைக்கு நாம் போதிப்பதற்கு அது சரியாக இருக்கிறதே), 'உதாரணத்திற்கு'' (அதன்பிறகு விவரக் குறிப்பு காணப்படுகிறது) (ஆங்கிலத்தில்) : “வல்லமையுள்ள ஆண்டவர், யாவர்க்கும் பிதாவாகிய கர்த்தர், சர்வ வல்லமையள்ள தேவன், உன்னதமானவர், சிருஷ்டிகர், உருவாக்கியவர் போன்றவை. இவைகள் யாவும் தொடர்ந்து வருகிற வெவ்வேறு நபர்களுக்குரிய பட்டங்களும், பெயர்களும் அல்ல, இவை ஒருவராயிருக்கிற அவருக்கே உரித்ததாகும்'' (ஆமென்). ”ஒரே நாமத்தினால் ஒரே தேவனாகிய பிதாவானவர், பிழைத்திருக்கும்படியான தயவை யாவற்றுக்கும் அளித்திருக்கிறார்.'' 7ஐரேனியஸும், “இந்தப் பட்டங்கள் யாவும் ஒரே நாமத் திற்குள்ளாக அதற்குரியதாகவே இருக்கிறது; அது ஒரு தேவனுக் குரியதாகும், அவைகள் யாவும் பட்டங்களாக மாத்திரம் இருந்து, அவர் என்னவாக இருக்கிறாரோ அதைப் பற்றிக்கூறுபவைகளாக மட்டுமே இருக்கின்றன'' என்று கூறியுள்ளார். அவர் சாரோனின் ரோஜா, அது அவருக்குரிய பட்டமாகும். அவர் என்னவாக இருக் கிறாரோ அதைப் பற்றி கூறுகிறது இப்பட்டம். அவர் விடிவெள்ளி நட்சத்திரம், அவர் அல்பாவும், ஓமெகாவுமாயிருக்கிறார். இவைகளெல்லாம் அவர் என்னவாக இருக்கிறாரோ அதைப் பற்றிக் கூறும் அவருடைய பட்டங்கள் மட்டுமே. அவர் பிதா, அவரே குமாரன், அவரே பரிசுத்த ஆவியானவர். ஆனால் ஒரே யொரு தேவன்தான் உண்டு. ஒரேயொரு தேவன், அவர் நாமமும் ஒன்றே. இவ்வாறாக ஐரேனியஸ் வேதவாக்கியத்தைக் குறித்த சரியான வியாக்கியானத்தைப் பெற்றிருந்தார். இந்தக் காரணத் தினால்தான் நான் ஐரேனியஸ் சரியாக இருந்தார் என்று கருது கிறேன். 8இன்னொரு விஷயத்தையும் நான் உங்களுக்கு வாசித்துக் காட்ட விரும்புகிறேன். அது, ''எவ்வாறு அது சம்பவித்தது?'' என்ற புத்தகத்திலிருந்து இப்புத்தகம் வரலாற்றாளர்களால் எழுதப் பட்டதாகும். ஆர்.சி.ஹேஸல்டன் என்பவர் ஆதிகாலத்து சபைகளைப் பற்றி எழுதிய சரித்திரம்தான், “எவ்வாறு இது சம்ப வித்தது'' என்ற புத்தகமாகும். அப்புத்தகத்தின் 180ம் பக்கத்தில், ”கி.பி.177 முதல் கி.பி.202 முடிய உள்ள ஐரேனியஸின் காலத்தில் இருந்த ஆவிக்குரிய வரங்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நான் மேற்கோள் காட்டுவதன் நோக்கம் என்னவெனில், இச்செய்தி ஒலிநாடாவில் பதியப் பட்டுக் கொண்டிருக்கிறது, பாருங்கள். மேலும் புத்தக வடிவிலும் இது வரப்போகிறது. ''ஐரேனியஸின் காலத்தில், பிரான்ஸ் தேசத்தில் இருந்த அநேக அப்போஸ்தல சபைகளில், பரிசுத்த ஆவியின் எல்லா வரங்களுமே இருந்தன''. ஐரேனியஸ் அவர்களுக்கு போதித்து வந்திருந்தபடியினால் நிலைமை அவ்வாறு இருந்தது, பாருங்கள். பிரான்ஸில் உள்ளலையான் பட்டணத்தில், “லையான் பட்டணத்தில் இருந்த ஐரேனியஸின் சபையின் உறுப்பினர்கள் யாவருமே அன்னிய பாஷைகளில் பேசினார்கள். யாராவது மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்படுவது காண்பது ஏதோ அசாதாரணமான நிகழ்ச்சியல்ல. எல்லாவிடங்களிலும் சுவிசேஷ சபைகளில் பிணியாளிகள் சொஸ்தமடைதல் என்பது அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது.'' ஐரேனியஸ் எப்படி போதிக்க வேண்டுமென்று அறிந் திருந்தார். 'அற்புதங்கள் அடிக்கடி நடைபெற்றன. உண்மையில், ஐரேனியஸ் காலத்து சபைகள், தேவனுடைய அதியற்புத பிரத்தியட்சமாகுதலைப் பெற்றிராமல் ஒருபோதும் இருக்கவில்லை. அப்பிரத்தியட்சமாகுதல், ஒன்று தரிசனத்தில் மூலமாகவோ, அல்லது இயற்கையின் பூதங்கள் செயல்படுவது நிறுத்தி வைக்கப்படுவதின் மூலமாகவோ அல்லது ஒரு அற்புதத்தின் மூலமாகவோ நடைபெற்றன. இவையெல்லாம், அன்றைக்கு இருந்த சுவிசேஷக் கிறிஸ்தவர்களுக்கு, தாங்கள் தேவனுக்குப் பிரியமான சீஷர்கள் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டவே நடைபெற்றன. ஆனால் கடந்தகால வரலாற்றைப் பார்க்கையில், முதலாவது ரோமச் சபையில், எப்பொழுதாகிலும் மரித்தவனை உயிரோடெழுப்பிய ஒரு சம்பவத்தைப் பற்றிய நிரூபணம் கூட சேகரிக்க நம்மால் முடியவில்லை'' என்று கூறுகிறார். இவ்வரலாற்றை எழுதினவர்கள் எந்தவொரு அணியைச் சார்ந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்களல்ல, அவர்கள் வரலாற்றாளர்களானபடியால், உண்மைகளைத் தெரிவிப்பதிலேயே நாட்டம் கொண்டவர்கள். 9எனவேதான் நான் ஐரேனியஸ் சிமிர்னா சபைக்குரிய தூதன் என்று விசுவாசிக்கிறேன். ஏனெனில், பவுலும் ஏனைய அப்போஸ்தலர்களும் ஒப்படைத்துச் சென்ற அதே விசுவாசத்தையும், அதே வேத உபதேசங்களையும் கொண்டவராக ஐரேனியஸ் இருந்தார். வேதவாக்கியத்தின் அடிப்படையைக் கொண்ட அதே வேத உபதேசங்களைப் போதித்தல் ஒவ்வொரு தடவையும், அதே விதமான கிரியைகளையே பிறப்பிக்கும். தேவனுடைய நியமத்தை எளிமையாக விசுவாசித்து, அதை அப்படியே எழுத்துக்கு எழுத்து நிறைவேற்றினீர்களானால், சபைகள் என்ன சொல்லுகின்றன என்பது பற்றி அக்கறையில்லை, அது கூறுகிறதின்படி அப்படியே பின்பற்றினால், ஆதியில் நடந்த அதே கிரியகைள் இப்பொழுது ஏற்படும். அதைத்தான் ஐரேனியஸும் செய்தார். 10பாலிகார்ப் அருமையான மனிதர் என்று நான் உணருகிறேன். ஆனால், நிக்கொலாய் மதஸ்தர் எவ்வாறு ஸ்தாபன முறைமைகளை உண்டாக்கிட முனைந்தார்களோ, அதேபோல் இவரும் அவ்விதமான கிரியைகளின் பட்சத்தில் மிகவும் அதிகமாக சார்ந்தவராக இருந்தார் என்பதை நான் உங்களுக்கு கூறுகிறேன். சபையை அவர்கள் ஸ்தாபன ரீதியாக ஆக்கி, அவ்விதமான முறையில் சகோதரத்துவத்தைக் கொண்டு வந்து யாவரையும் ஒன்றாக இணைக்க அவர்கள் கிரியை செய்தனர். இது மனித ஞானத்தின்படி சரியாக தோன்றலாம். ஆனால், பாருங்கள், ஆவியானவர் மானிட அறிவுக்கு மிகவும் தொலைவில் இருக்கிறார். அறிவு பூர்வமாக நீங்கள் சிந்தித்தால் ஆவியின் சிந்தைக்கு விரோதமான சிந்தை கொண்வடர்களாக ஆகிவிடுவீர்கள். ''என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல...''. எனவே, அவரை திட்ட வரைபடத்திற்படி (Blueprint) பின்பற்றுவது ஒன்று தான் நாம் செய்ய வேண்டியதாயிருக்கிறது. 11நான் இங்கிருந்து இன்றிரவில் சிக்காகோ போகிறதாக வைத்துக் கொள்வோம். நான் இங்கிருந்து வெளியேறி, ஒரு திசை காட்டும் கருவியை வைத்துக் கொண்டு 'சிக்காகோ இந்தத் திசையில் இருக்கிறது, சரி நான் புறப்படுவேன்'' என்று சொன்னால், ஜெபர்சன்வில்லை விட்டுக்கூட புறப்பட முடியாது. பாருங்கள்? நான் சரியாக சிக்காகோ போக வேண்டுமானால் வழிகாட்ட எனக்கு ஒரு சாலை வரைப்படம் தேவை. அதின்படி போனால் அங்கே பாதையானது ஒழுங்காக தன் வழியே செல்லும், அதில் ஒரு மோட்டார் வாகனத்தில் பயணம் புறப்பட்டுப் போனால், ஆறு அல்லது ஏழு மணி நேரத்தில் சிக்காகோ போய் சேர்ந்து விடலாம். ஆனால் உள்ள பாதையை சுருக்கிக் கொண்டு போக முடியாது. விமானமும் தன் ஆகாய மார்க்கத்தில் தன் பாதையை சுருக்கிக் கொள்ள முடியாது, அதற்குரிய உயரத்தில், அதற்குரிய பாதையில், அதற்குரிய மார்க்கதிதில்தான் பறந்திட வேண்டும். ஒருவழியானது உண்டாக்கப்பட்டிருக்கிறது, தேவனுக்கு ஒரு வழி உண்டு. தேவன், தன் சபைக்கென, தன் ஜனங்களுக்கென, ஒரு வழியை வைத்திருக்கிறார். அவ்வழியானது, ஒரு போதம், போப்புகள், கார்டினல்கள், ஆர்ச் பிஷப்புகள், அல்லது ஜெனரல் ஓவர்சீர்கள் ஆகிய மனிதர்களால் ஆளுகை செய்யப்பட வேண்டுமென்று அவர் நோக்கங் கொள்ளவில்லை. ஜீவனுள்ள தேவனுடைய சபையை எழுப்பிக் கொண்டு வர, பரிசுத்த ஆவியானவரே அதற்கு போதகராக இருக்கிறார். பரிசுத்தமெல்லாம் ஒரு கார்டினல், அல்லது ஒரு மதகுருவுக்கு ஏகபோகமாக உரிமையாகி, அவர்களை பரிசுத்த மனிதர்கள் என்று சபையில் அழைப்பதற்காக அது இல்லை. பிரசங்கியார், மேய்ப்பர், டீகன்மார், தர்மகர்த்தா ஆகியோருக்கு எந்த அளவுக்கு பரிசுத்த ஆவியினிடத்தில் உரிமை உள்ளதோ, அதே அளவுக்கு சபையின் ஜனங்களுக்கும் உள்ளது. 12அது நிக்கொலாய் மதஸ்தர் என்று அழைக்கப்பட்டதன் காரணம் என்னவெனில்... நேற்று இரவு அதைப் பற்றிப் பார்த்தோம். அவ்வார்த்தையை பதம் பிரித்து பொருள் கண்டோம். அது கிரேக்க மொழியிலுள்ள. “நிக்கோ'' என்றால் வென்று கீழே தள்ளுதல்'' என்று பொருள். எதை வென்று கீழே தள்ளுதல்? நிக்கொ -லெய்டேன் லெய்டி - அதாவது, ''சபையின் ஜனங்களை வென்று மேற்கொண்டு விடுதல்'' என்று பொருள். அவ்வாறு அவர்களை வென்று கீழே தள்ளி, அவர்களுக்குள் ஒரு மனித ஒழுங்கை, நியமத்தை திணித்து, மதகுருமார்கள் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தி, இவர்கள் ஒன்று கூடி எவ்வாறு போதிக்க வேண்டுமென்று முடிவு கட்டுகிறார்களோ, அதற்கேற்ப ஜனங் களுக்கு போதிப்பது என்ற விதமாக நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் ஆரம்பித்தன. நிசாயா ஆலோசனை சங்கத்தில் இவ்வாறு தான் இவ்விஷயம் அரங்கேறியது. ஏனிெனல் அதேவிதமான மக்கள் நிசாயாவில் நடந்த ஆலோசனை சங்கத்தில் இவ்வாறுதான் இவ்விஷயம் அரங்கேறியது. ஏனெனில் அதேவிதமான மக்கள் நிசாயாவில் நடந்த ஆலோசனை சங்கத்தில் ஒன்றுகூடி இவ்வாறு ஒருமனிதன நியமத்தை நிர்ணயித்தார்கள். வியாழக்கிழமை இரவில் நிசாயா ஆலோசனை சங்கத்தைப் பற்றி பார்க்கப் போகிறதினால், நான் இதைப் பற்றி இன்று அதிகம் பேசப் போகிறதில்லை. ஆனால் அங்கே தான் ரோமன் கத்தோலிக்க சபையானது உருவாக்கப்பட்டது. பவுல், ஐரேனியஸ், பரிசுத்த மார்ட்டின் ஆகியோரின் ஊழியத்தில் கிடைத்த ஆத்துமாக்களைக் கொண்ட குழுவிலிருந்து சிலரை வேறு பிரித்துக் கொண்டு கத்தோலிக்க சபை உருவாயிற்று. அவர்கள் அஞ்ஞான மார்க்கத்திலிருந்து மனந் திரும்பி கிறிஸ்தவர்களானார்கள். அவர்கள் சபைக்கு பழைய ஏற்பாட்டு முறைமையிலான ஊழிய முறைமைக்குள் மீண்டும் இழுத்துக் கொண்டு வர விரும்பினர். பழைய ஏற்பாட்டில் எப்படி, பிரதான ஆசாரியர்கள் வம்சவழி ரீதியாக தேர்ந்தெடுக் கப்படுகின்றனரோ, அதே போல் அப்போஸ்தலப் பட்டத்திற்கு வாரிசு தேர்ந்தெடுத்தல் என்று கொண்டு வந்து, போப்பை அந்த ஸ்தானத்தில் வாரிசாக வைத்து, ஒரு போப்பிற்குப் பிறகு அடுத்த போப்பை வாரிசு முறையில் தேர்ந்தெடுத்து, இவ்வாறாக அடுத்தடுத்து போப்புகளை தேர்ந்தெடுக்கிற முறையைக் கொண்டு வந்தனர். இவ்வேதாகமம் முழுவதிலும் நாம் ஆராய்ந்து பார்த்தால், அது எப்படி வேத விரோதமானது என்றும், தேவன் அதை ஆரம்பமுதலே எவ்வாறு கடிந்து கொண்டு கண்டனம் செய்தார் என்பதையும் நீங்கள் காணலாம். இது சத்தியமா யிருக்கிறது. ''நான் இதை வெறுக்கிறேன்'' என்று தேவன் கூறுவதைப் பற்றி, நேற்றிரவில் பிரசங்கித்த சபைக் காலத்தைப் பற்றிய செய்தியில் கேட்டோம். சபையும் இதை வெறுத்தது. 13சபையானது மனிதனால் நடத்தப்பட வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம் அல்ல. தேவனே தன் சபையை நடத்திச் செல்கிறார், அவர் ஆவியின் வரங்களைக் கொண்டு சபையை நடத்திச் செல்கிறார். ஆவியில் சீர்திருத்தம் கொண்டு வரவே தேவன் சபையில் ஆவிக்குரிய வரங்களை அளித்திருக்கிறார். அவருடைய சபையில் ஐந்து ஊழிய உத்தியோகங்கள் அவருக்கு உள்ளது. அவைகளில், முதலாவது, அப்போஸ்தலர்கள், அதாவது மிஷனரிகள் ஊழியம். மிஷனரி அல்லது அப்போஸ்தல ஊழியமானது, இருக்கிற அழைப்புகளிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும். 'மிஷனரி' என்ற வார்த்தைக்கு அனுப்பப்பட்டவன்' என்று அர்த்தமாம். 'அப்போஸ்தலன்' என்ற வார்த்தைக்கும் 'அனுப்பப்பட்டவன்' என்னும் அதே அர்த்தம்தான். அவர்கள் ஏன் தங்களை மிஷனரி என்று அழைக்கப்படுவதையே தெரிந்து கொண்டார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. எப்படியாயினும், அவர்கள், அப்போஸ்தலர்களே. அப்போஸ்தலர்கள், தீர்க்க தரிசிகள், போதகர்கள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள் ஆகிய இந்த ஐந்தும் அவருடைய சபைக்கென தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட உத்தியோகங்களாகும். அதன் பின்பு, ஒவ்வொரு உள்ளூர் சபையிலும் ஒன்பது வரங்கள் மக்கள் மத்தியில் வருகிறது, அவை, விவேகம், ஞானம், சுகமளித்தல், அற்புதங்களைச் செய்தல், அன்னிய பாஷைகளில் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் செய்தல் போன்றவை... இவ்வரங்கள் யாவும் உள்ளூர் சபைகளில் இயங்குகின்றன. சபையி லுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் உரிய தனிப்பட்ட ஊழியம் ஒன்றுண்டு. அந்த தனிப்பட்ட ஊழியமானது மற்ற ஊழியத்தோடு இணைந்தே போகிறது. இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை பக்திவிருத்தியடைவதற்காகவே இவ்வூழியங்கள் உள்ளன. 14இந்த கோடுகளை நான் இங்கே வரைந்துள்ளேன். முதல் சபை எபேசு, பிறகு சிமிர்னா, பெர்கமு, தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, லலோதிக்கேயா. இவை தொடர்ந்து செல்கையில், இந்த முதலாம் சபைக்கு ஆவியின் பரிபூரணம் உண்டாயிருந்தது, ஆனால் இந்த சபைக்காலத்தின் முடிவில் அவையெல்லாம் வெளியே தள்ளப்பட்டது என்று நாம் காண்கிறோம். அடுத்த சபைக்காலம் கொஞ்சம் வெளித்தள்ளியது; அடுத்தது இன்னும் கொஞ்சம், அதற்கடுத்து இன்னும் கொஞ்சம், இவ்வாறு கடைசியில் ஒரு சிறு துளி மட்டுமே இருக்கக் கூடிய அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. தியத்தீரா சபையின் காலத்தைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம், ''உன்னிடம் சில காரியங்கள் உண்டு'' என்று அவர் கூறினார். 15தியத்தீராவுக்குப் பிறகு, தேவன், மார்ட்டின் லூத்தர் என்ற பெயருள்ள ஒரு ஜெர்மானியரை எழுப்பினார், அவர் சபையை மீண்டும் தன் நிலைக்கு திருப்பினார். அது மீண்டும் கொஞ்சம் சரியாக இயங்க ஆரம்பித்தது. அவர் விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்பதைப் பற்றி பிரசங்கித்தார். அதற்குப் பிறகு, ஜான்வெஸ்லி வந்து, பரிசுத்தமாகுதல் பற்றி பிரசங்கித்தார். இப்பொழுது இங்கேயுள்ள ஏழாவது சபைக் காலத்தில் மீண்டும் அவர்கள் அற்புத அடையாளங்களைக் கொண்டிருந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறுதல் என்ற நிலைக்கு நேராக திரும்பி வந்தார்கள். 1500 ஆண்டுக்காலம் சபையானது இருண்ட காலங்களுக்குள் இருந்து வந்திருக்கிறது. சபைக் காலத்தில் மிகவும் நீளமான, மிகவும் இருண்டதாக சபைக்காலம் அங்கே இருக்கிறது. நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானம் பெறுதல் ஆகியவற்றின் காலங்களில் தான் முறையே படிப்படியாக சபையானது இருண்ட காலங்களிலிருந்து வெளியே வர ஆரம்பித்தது. “இந்த காலத்தின் முடிவில், சிறுபான்மையோர் பிழிந்தெடுக்கப்படுவார்கள். ஏனெனில், பெந்தெகொஸ்தேயில் இருந்ததுபோலுள்ள அதே சபையானது கடைசியில் தோன்றி, ஆதியில் செய்தது போலவே கிரியை செய்வார்கள். (ஓ தேவனே, நான் அந்த விஷயத்திற்குப் போகிற வரையிலும், பேசாதபடி என் வாயை மூடிக் கொண்டிருக்கட்டும்). நீங்கள் பார்த்தீர்களா? ஆனால் அதை நான் காண முடிகிறது. நீங்கள் அதைக் காணும் வரை பார்த்திருங்கள். இக்கடைசி சபைக் காலத்திற்குரிய தூதன் ஸ்தாபனங்களை வெறுக்கிறவனாக இருப்பான் என்பதை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். ஆவியானவர் பிள்ளைகளை எழுப்பு வார். அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. இப்பொழுது நமக்கு.... 16நீங்கள் இங்கே கவனித்துப் பாருங்கள். ஆதியில் அது எவ்வளவு மகத்தானதாக இருந்தது, போகப்போக அடுத்து வந்த காலங்களில் எப்படி அது ஒடுங்கிப் போய் கடைசியில் (இருண்ட காலத்தில்) முற்றிலும் அற்றுப் போகிற நிலைக்கு வந்தது. பிறகு, மீண்டும் அது ஆரம்பிக்கிறது. ஐந்தாவது சபைக்காலத்தில் லூத்தர் அதை வெளியே இழுத்தார்; நீதிமானாகுதல் என்ற செய்தியின் மூலம் அதன் பிறகு, பரிசுத்தமாகுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானம் ஆகிய செய்திகள் வந்தன. கடைசி சபைக் காலத்தில், ஒளியானது முழுவதும் நீங்கிப் போகிறது போலுள்ள அளவுக்கு நிலைமை மிகவும் மோசமடைகிறது. அங்கே மிகச் சிறிய அளவுக்கு உண்மையான சபை சுருங்கிப் போய், அதினால் தேவன், எங்கே உள்ளதும் போய்விடக்கூடாதே, இரட்சிப்பதற்கு மாம்சமானவர் ஒருவரும் இல்லாமற் போகக்கூடாதே என்று கருதி, அதற்காக அவர் தன்னுடைய கிரியையை தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நிமித்தம் சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு விடுவார். அப்பொழுதுதான் நீங்கள் சரியாக கடைசி காலத்தில் இருப்பீரகள். இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 17நாம் இப்பொழுது சிமிர்னா சபையின் காலத்தைப் பற்றி பார்க்க துவங்கப் போகிறோம். முதலாவதாக, நான் இதைப் பற்றி சற்று பாகம் பாகமாக பிரித்து தாளில் எழுதி வைக்க விரும்பு கிறேன். இரண்டாவது சபைக் காலத்தின் பெயர் சிமிர்னா ஆகும். இந்த இரண்டாவது சபைக்காலத்தின் நட்சத்திரமாக, அதாவது அச்சபைக்குரிய தூதனாக, ஐரேனியஸ் விளங்கினார் என்று நான் விசுவாசிக்கிறேன். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். (நீங்கள் அதை அரை மனதோடு நம்பினாலும் சரி, முழுவதுமாக நம்பினாலும் சரி). ஐரேனியஸ் தூதனாக இருந்தார், ஏனெனில், அவரது ஊழியம் ஃப்ரான்ஸ் (கோல்) தேசத்தையே அசைத்தது. அங்கே சபைகளை அவர் நிறுவினார், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொண்டு அச்சபைகள் அந்நிய பாஷைகளில் பேசவும், மரித்தோரை எழுப் பவும், பிணியாளிகளை குணமாக்கவும், மழையை நிறுத்தவும், தினந்தோறும் அற்புதங்களை செய்து கொண்டும் இருந்தன. ஜீவனுள்ள தேவன் தங்கள் மத்தியில் ஜீவிக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ஐரேனியஸ் தேவனுடைய மனுஷனா யிருந்தார்; அதினால்தான் அப்பேர்ப்பட்ட கிரியைகளை செய்தார். நிக்கொதேமு இயேசுவைப் பற்றி 'ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான்'' என்றான். 18சிமிர்னா பட்டணத்தில் வாணிபம் சிறப்புற்றிருந்தது. மேற் கத்திய நாடுகளுக்கும், லீதியாவுக்கும், அவற்றின் பொருட்களுக்கு சிமிர்னா ஒரு வர்த்தகச் சந்தையாக விளங்கியது. ஆசியாவிலுள்ள மூன்றாவது பெரிய நகரமாகவும், பெரிய துறைமுக நகரமாகவும் சிமிர்னா விளங்கியது. சிமிர்னா பட்டணத்தின் செல்வம், ஆலயங் கள், கட்டிடங்கள், கல்விச் சாலைகள், மருத்துவம், விஞ்ஞானம் இவை குறிப்பிடத்தக்க அளவுக்கு இருந்தது. சிமிர்னாவில் வாழ்ந்த யூதர்கள், அப்பட்டணத்து மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித் தார்கள். பாலிகார்ப்தான் சிமிர்னாவின் முதல் கண்காணியாவார் (பிஷப்). பாலிகார்ப்பும் ஏனைய உத்தம ஊழியக்காரர்களும், சிமிர்னாவின் விசுவாசிகளுக்குள் தேவனைப் பற்றும் ஆழமான விசுவாசத்தை நிலைநாட்டினார்கள். ஆதிகாலத்து சபையின் பிதாக்கள் சிமிர்னாக்காரர்களுக்கு சத்தியத்தைப் பற்றி நல்லா ஆலோசனைகளைக் கூறினார்கள். இச்சபைக் காலத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர் சிமிர்னா, சிமிர்னா என்றால் ''கசப்பு'', ''வெள்ளைப்போளம்'' என்று அர்த்தமாம். கசப்பு மரணத்தை எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் அச்சபைக் காலத்து மக்கள் உபத்திரவப்படுத்தப்பட்டு மரித்தனர். 19அச்சபை உபத்திரவத்தை அனுபவித்த ஒன்றாகும். 'உபத்திரவப்படுத்தப்பட்டவர்கள்'' என்று தேவன் அவர்களை அழைத்தார். தேவன் அவர்களுடைய உபத்திரவங்களைப் பார்த்துக் கொண்டிருந்து, அதைத் தாங்கிக் கொள்ள கிருபை அளித்தார். அவர்களுடைய உபத்திரவங்களை பார்த்துக் கொண்டிருந்து, மரணத்தின் மேல் ஜெயங்கொடுத்தார். அவர்களுடைய வறுமை யைப் பார்த்து விட்டு, தன்னிடத்தில் ஐசுவரியவான்களாய் விளங்கச்செய்தார். சிமிர்னா சபையானது, உபத்திரவம் என்னும் அக்கினி சூளையினுள் கடந்து சென்று பலியாக எரிந்து, அதினால் தேவனுக்கு சுகந்த வாசனையாக திகழ்ந்தனர். சிமிர்னாவின் சபையிலுள்ள மீதியாயிருக்கிறவர்களைப் பற்றியே நான் கூறுகி றேன். அந்த பழைய சிமிர்னா சபையையல்ல, அதிலுள்ள மிதியாயிருக்கிறவர்களைப் பற்றி கூறுகிறேன். அவர்கள் 10 நாட்கள் உபத்திரவப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. அப்பத்து நாட்கள் உபத்திரவம் என்பது, அவர்களுக்கு ஏற்பட்ட “இரத்த ஆறு ஓடிய பத்தாண்டுக்கால உபத்திவரங்கள்'' ஆகும். அக்காலத்தில் ரோமச் சக்கரவர்த்தியொருவன் இருந்தான். அவனது பெயரைக்கூட என்னால் சரியாக உச்சரிக்கக் கூடுமோ என்னவோ தெரியவில்லை. கி.பி.67-ல் இருந்த கொடுங்கோலன் நீரோ மன்னனுக்குப் பிறகு, வந்த மன்னர்களிலேயே மிகவும் இரத்தவெறி பிடித்த கொடுங்கோலனான இம்மன்னன் கி.பி.303 முதல் கி.பி.312 முடிய அரசாண்டான். அவன் பெயர் டயக்னீஷயன். 20தேவன், மரணபரியந்தம் அவரைப் போல உண்மையா யிருக்கும்படி சிமிர்னாவினருக்கு புத்தி சொல்லுகிறார். ''பிதா எனக்குத் தந்தது போல உனக்கு ஜீவ கிரீடத்தைத் தருவேன்'' என்று கூறினார். உபத்திவரங்களில், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு இரண்டாம் மரணத்தின் மேல் ஜெயங்கொள்வதற்கான வாக்குத் தத்தத்தை செய்துள்ளார். ''உங்கள் சரீரத்தை கொல்ல வல்லவர் களுக்குப் பயப்படாமல், சரீரத்தையும் ஆத்துமாவையும் கொல்ல வல்லவருக்கே பயப்படுங்கள்''. சிமிர்னாக்காரர்கள் முடிவு பரியந்தமும் நிலைத்திருக்க வேண்டியதாயிருந்தது. “மனிதனுக்குப் பயப்படாதே, ஜீவ கிரீடம் உனக்குக் கொடுக்கப்படும்'' என்று சொல்லப்பட்டது. சபைக் காலங்கள் தோறும், கிறிஸ்தவத்திற்கு வந்த உபத்திரவங்களுக்கு சிமிர்னா சபைக்காலம்தான் முன்னு தாரணமாகக் குறிப்பிடப்படுகிறது, இது மிகவும் முக்கியமானது. கர்த்தருக்கு சித்தமானால் அதைப் பற்றி இன்னும் சிறிது பார்ப்போம். உங்களில் சிலர், சிலவற்றைக் குறித்துக் கொள்ள விட்டுப் போயிருந்தால்... நீங்கள் எழுதக் கூடாத அளவுக்கு நான் வேகமாக எழுதினால், அக்குறிப்புகளை எங்களிடமிருந்து நிச்சயமாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம், அதை உங்களுக்குக் கொடுக்க நாங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறோம். (மன்னிக்கவும்). 21இன்றிரவு, வெளிப்படுத்தின விசேஷம் 2ம் அதிகாரம் 8ம் வசனத்திலிருந்து நாம் துவங்க இருக்கிறோம். நேற்றிரவில் எந்தக் கட்டத்தில் அவரை விட்டுவிட்டு சென்றோம்? அவர் நிச்சய மாகவே நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை வெறுக்கிறார் என்று பார்த்தோம் அது சரிதானே? இப்பொழுது, தேவன் என்ன செய்கிறார்? வாஸ்தவமாக நாம் முதலில் எதைப் பற்றி பார்த்தோம்? இயேசு கிறிஸ்து யார்? அவர் என்னவாக இருக்கிறார்? என்பதைப் பற்றிய வெளிப்பாட்டினைத்தான் நாம் பார்த்தோம். அதற்கு அடுத்ததாக, நாம் கண்டுகொண்ட மகத்தான காரியம் என்னவெனில், தேவனைத் தவிர, வேறு எதையும் தேவனுடைய சபையின் மேல் ஆளுகை செய்ய ஏற்படுத்துவதை தேவன் வெறுக்கிறார் என்று பார்த்தோம். அவர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறார். இங்கே நமக்கு நான்கே வசனங்கள் உள்ளன. ஒரு விஷயத் தைப் பற்றிக் குறிப்பிட நான் சற்று இங்கே நிறுத்துகிறேன். இஸ்ர வேல் ஜனங்கள் உலகத்து மக்களைப் போல் தாங்களும் நடந்து கொள்ள விரும்பியபோது, அங்கே நின்று கொண்டிருந்த அந்த நல்ல தீர்க்கதரிசியாகிய சாமுவேல், “நீங்கள் தவறு செய்கிறீர்கள்'' என்றான். உங்களில் எத்தனை பேர்களுக்கு அது நினைவில் இருக்கிறது? ஆனால் அவர்களோ, பெலிஸ்தியரைப் போலவும், ஏனையோரைப் போலவும் நடந்து கொள்ளவே விரும்பினார்கள். சரிதான், அதே காரியம் தான் இந்த முதலாவது சபைக் காலத்திலும் அப்படியே நடைபெற்றது. தேவன் தங்களை நடத்திச் செல்லுவதை ஜனங்கள் விரும்பாதது விசித்திரமான காரியம்தான். அவர்கள் ஒரு மனிதனைப் பின்பற்ற விரும்பினர். தேவனுடைய கிருபையானது, அவர்களுக்கு ஏற்கனவே ஒரு தலைவனாகிய தீர்க்கதரிசியையும், வானத்திலிருந்து உணவையும், பாவப் பரிகாரத்திற்காக அவர்களுக்கு ஒரு ஆட்டுக்குட்டியையும், மற்றும் இன்னும் எத்தனையோ நல்ல காரியங்களையும் அளித்திருந்த போதிலும், யாத்திராகமம் 19ம் அதிகாரத்தில் ஒரு பிரமாணத்தை அவர்கள் விரும்பினர். அவர்கள் தங்களுக்கு வேத பண்டிதர்களையும், சில மனிதர்களையும் வேண்டுமென்று விரும்பி, அதில் ஏதோ ஒன்றைப் புகுத்த விரும்பினர். 22மனிதன் எப்பொழுதும் தன்னை உண்டாக்கிய சிருஷ்டிகரை விட புத்திசாலித்தனத்தில் மிஞ்சிவிட வேண்டும் என்று முயலு கிறான், ஆனால் அவன் தன்னையே அழித்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் சாதித்துவிடுவதில்லை. சில ஞாயிற்றுக்கிழமை களுக்கு முன்பாக, நான் “கலப்பு மார்க்கம்'' என்ற தலைப்பில் பிரசங்கித்தேன். (உரைக்கப்பட்ட வார்த்தை வால்யூம் 2 எண்.13 -ஆசி). அதன்படியே தான் உள்ளது? எந்த ஒரு வித்துடனும் நீங்கள் வித்துக்கலப்பு செய்தால், அத்தோடு அது முடிந்து விடும். அதினால் மறுபடியும் தப்பிக்க முடியாது. ஒரு கோவேறுக் கழுதை மீண்டும் இன்னொரு கோவேறு கழுதையைப் பிறப்பிக்க முடியாது. அது வித்துக்கலப்படம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஜந்துவாகும். சன்னரக தானியத்தை வீரிய ஒட்டு சன்னரக தானியத்திலிருந்து பிறப்பிக்க முடியாது. அது நன்றாக வளரும், ஆனால் அது நல்லதல்ல. நீங்கள் அதைச் செய்ய முடியாது. இனக்கலப்பு செய்யப்பட்ட எந்த ஒன்றும் நல்லதல்ல. வித்துக்கலப்பு செய்யப்பட்ட மார்க்கம் நல்லதாக இருக் காது. தேவன் கூறியவைகளோடு நீங்கள் எதையாகிலும் கூட் டினாலோ, அல்லது தேவன் கூறியவைகளில் இருந்து நீங்கள் எதையாகிலும் கழித்துப் போட்டாலோ, அப்படிப்பட்ட செய்கையிலிருந்துதான் கலப்பட மார்க்கம் உண்டாகிறது. அது பார்வைக்கு அழகாக இருக்கலாம். வித்துக் கலப்பு மூலம் பிறப்பிக்கப்பட்ட வீரிய ஓட்டுரக தானியம், இயற்கையான தானியத்தை விட மினுமினுவென்று இருக்கும். இரண்டு குதிரைகள் செய்கிற வேலையைவிட கூடுதலாக கோவேறு கழுதை கிரியை செய்யும். கிரியைகளினால் நாம் இரட்சிக்கப்படாமல், கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம், சகோதரரே. ''கிரியைகளினால் இரட்சிக்கப்படாமல், கிருபையினால் இரட்சிக் கப்பட்டிருக்கிறோம்“ இப்படி குறிப்பிடுபவைகளைக் உணர் வோடு உட்கார்ந்திருக்கிறீர்களோ என்று கருதுகிறேன். ஏனெனில், பிரெஸ்பிடேரியன், மெதோடிஸ்டு மற்றும் பல்வேறு சபைகளைச் சேர்ந்தவர்கள் இங்கு இருக்கிறீர்கள். நாங்கள் அதை அறிவோம். நான் அவ்வாறு கருதுகிறேன். அவ்வப்பொழுது சற்று இறுக்க மான நிலையிலிருந்து உங்களை தளர்த்திக் கொள்ளுங்கள், அவ்வித நிலையிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். 23இப்பொழுது கவனியுங்கள். இனக்கலப்பு அல்லது வித்துக் கலப்பு செய்யப்பட்ட எதுவும் நல்லதல்ல. தேவன் உண்டாக்கிய விதமாகவே இருக்கிற மூல அசல் வித்தையே நீங்கள் எடுத்துக் கொள்ளும்போது, நிஜமானவற்றையே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். இஸ்ரவேல் என்ற சபையானது யாத்திரை செய்து கொண்டு போகையில், தேவன் அவர்களை போஷித்து, அவர்கள் நலனில் சிரத்தையெடுத்து, அவர்களுக்காக யாவற்றையும் செய்தார். கடைசியில், அவர்கள் சுற்றிலும் இருந்த பெலிஸ்தியரையும், அம்மோனியரையும் மற்றோரையும் பார்த்துவிட்டு, அவர்களுக்கு இருப்பது போல் எங்களுக்கு இல்லையே, எனவே எங்களுக்கும் ஒரு இராஜா வேண்டும்'' என்று கேட்டார்கள். அதே காரியத்தைத் தான் இன்றைக்கும் மக்கள் செய்கிறார் கள். நமது சகோதரிகள் தொலைக்காட்சியில், க்ளோரியா ஸ்வான்சன் மற்றும் இன்னும் யார் யாரையேவெல்லாம் நிகழ்ச்சி களில் பார்த்துவிட்டு, அவர்கள் உடுத்தியிருக்கும் ஒருவிதமான உடைகளை தாங்களும் அணிய வேண்டுமென்று விரும்பி, அதை வாங்குகிற வரைக்கிலும் அவர்களால் அமைதியாக இருக்க முடியாது என்ற அளவில் இருக்கிறார்கள். பாருங்கள்? கடைவீதியில் ஏதாவது ஒரு பெண்மணியைப் பார்த்துவிட்டு, அவள் உடுத்தியிருக்கிறதை நீங்கள் சுட்டிக்காட்டி, 'இது அழகாயில்லையா?'' என்று கேட்பீர்கள். அப்பெண்மணி என்ன உடுத்தவேண்டும் என்று விரும்புவதைக் குறித்து, உங்களுக்கு என்ன அக்கறை தேவை? ஜனங்கள் இன்றைக்கு அவ்வாறுதான் இருக்கிறார்கள். ஒருவரைப் பார்த்து இன்னொருவர் பாவனை செய்ய விரும்புகிறார், இக்காலம் ஒருவர் இன்னொன்றைப் போல பாவனை செய்ய விரும்புகிற காலம். எல்விஸ் பிரெஸ்லியை எடுத்துக் கொண்டால், இன்றைக்கும் அவரைப் போல் பாவனை செய்யும் அநேக எல்விஸ் பிரெஸ்லிகள் இருக்கிறார்கள். அவருடைய நிகழ்ச்சிகளுக்கு வருகிறவர்களை இரயில் வண்டிகளில் நன்கு திணித்தாலும் இடம் போதாது, அவ்வளவு பெருங்கூட்டம் அவருடைய நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள். ஏனெனில் அவர் மாம்சப்பிரகாரமான கூட்டத்தினர் நடுவில் மிகவும் பிரசித்தி பெற்றவராக ஆகிவிட்டார். 24ஒருவரைப் போல் இன்னொருவர் பாவனை செய்தல்! மார்க் கத்தில் நமக்கு இதே காரியம் உள்ளது. நான் அன்றொரு நாள் மார்ட்டின் லூத்தருடைய வரலாற்றை படித்துக் கொண்டிருந்தேன். அதில் கூறப்பட்டுள்ளதென்னவெனில், லூத்தர் கத்தோலிக்க சபையை எதிர்த்து நிற்பவராக நின்றதும், அசைக்க முடியாதபடி அவர் நிலை நின்றதும் ஒரு பெரிய இரகசியமல்ல, ஆனால் அவருடைய ஊழியத்தில் ஏற்பட்ட எழுப்புதலைத் தொடர்ந்து ஏற்பட்ட மதத்தீவிரவாதம், மூடபக்தி இவைகளின் நடுவில் அவர் தன் தலையை நிமிர்த்தி தேவ வார்த்தையோடு நிலை நின்றது தான் மிகப் பெரிய இரகசியம். இவ்வாறு வரலாற்றாளர்கள் கூறுகின் றனர். இங்குள்ள வரலாற்றாளர்களும் அதைப் பற்றி அறிவீர்கள். தேவன் இப்படிப்பட்ட சூழ்நிலையில் லூத்தரை தெளிவுற்ற வராகவும் உத்தமமாகவும் இருக்கும்படி காத்துக் கொண்டாரே, அது பெரிய அற்புதம் தான். 25இஸ்ரவேலர் இந்த சாமுவேல் தீர்க்கதரிசியினிடம் வருகிறார்கள். வந்து, ''எங்களுக்கு ஒரு வல்லரசை உண்டாக்கும்'' அதாவது, “ஒரு இராஜாவை ஏற்படுத்தும்'' என்று கேட்டார்கள். அப்போழுது கர்த்தர் சாமுவேலிடம், அந்த யோசனையை நிராகரிப்பதாகக் கூறினார். தேவன் இக்காலத்தில் ஸ்தாபனங்களைப் பற்றிய காரியத்தை எப்படி நிராகரிக்கிறாரோ, அதைப் போலவே அப்பொழுதுள்ள காரியமும் இருக்கிறது. சாமுவேலின் காலத்தில் தேவன் எப்படி அதை நிராகரித் தாரோ, அப்படியே ஸ்தாபனத்தையும் நிராகரிக்கிறார். அவர் ஜீவனையுடைய, இசைவாய் இயங்கிடும் உறுப்புக்களை நிராகரிப் பதில்லை. ஆனால் அவர் சபை ஸ்தாபனத்தை நிராகரிக்கிறார். நமக்கு ஆர்கனிசம் வேண்டும் (ஆர்கனிசம், ஜீவனோடு இயங்கும் அமைப்பாகும் - மொழிபெயர்ப்பாளர்), ஆனால் நமக்கு ஆர்கனி சேஷன் (ஜீவனற்ற ஸ்தாபன சபை - மொழிபெயர்ப்பாளர்) தேவையில்லை. ஏனெனில் அது நமக்கிடையில் பிரிவினை உண்டாக்குகிறது. ''நாங்கள் இன்னார், நாங்கள் இன்னார்'' என்கிறது. நீர் ஒரு கிறிஸ்தவரா என்று கேட்டால், 'நான் மெதோடிஸ்ட்'' என்று பதில் வருகிறது. “நீர் ஒரு கிறிஸ்தவரா?'' என்று கேட்டால் ”நான் பாப்டிஸ்டு'' என்கிறார்கள். இவை யெல்லாம் பன்றிக் கொட்டிலுள்ள பன்றிக் கொப்பானது என்பதைத் தவிர வேறு விசேஷமான அர்த்தம் கொண்டவை அல்ல. இவ்விதப் பெயர்களும் கிறிஸ்தவன் என்ற அழைப்புக்கும் சம்மந்தமே இல்லை. ஒரு கிறிஸ்தவன் என்பது தான் அர்த்தமுள்ளது! அன்றொரு இரவில், ஒரு பெண்ணிடம் மேடையிலிருந்து கேட்டேன்; “நீ கிறிஸ்தவளா?'' என்று. அதற்கு அவள், “ஏன், நான் உங்களிடம் கூற விரும்புவது என்னவெனில், நான் ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைக்கிறேன்'' என்றாள். கிறிஸ்தவத்திற்கும் இதற்கும் என்னவோ சம்மந்தம் உள்ளது போல். இன்னொரு மனிதன், “நான் நிச்சயமாக ஒரு அமெரிக்கன்'' என்று கூறினான். அது நல்லதுதான். ஆனால் கிறிஸ்தவத்திற்கும் அதற்கும் சம்மந்தமேயில்லை. நீங்கள் வேறொரு இராஜ்யத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால், நீங்கள் கிறிஸ்வதராக இருக் கிறீர்கள். அது சரிதான். நீங்கள் உன்னதத்தில் இருக்கும் இன்னொரு இராஜ்யத்தில் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். 26சாமுவேல் என்ன செய்தான்? இங்கே தேவன் என்ன செய்தாரோ அதே தான் சாமுவேல் செய்தான். சாமுவேல் இஸ்ர வேலரையெல்லாம் கூடிவரச் செய்து, “இப்பொழுது நான் சொல் வதைக் கேளுங்கள், நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன், எப்பொழுதாவது நான் உண்மையல்லாத எவற்றையாவது உங்க ளுக்கு கூறினதுண்டா? உங்கள் மத்தியில் முன்னுரைத்தவை ஏதாவது நிறைவேறாமல் போனதுண்டா ?'' என்று கேட்டான். அவன் மேலும் ”தேவன் உங்களைப் போஷித்து, உங்களை காப் பாற்றி, உங்களுக்கு இந்தக் காரியங்களையெல்லாம் செய்ய வில்லையா? மற்ற புறஜாதிகளைப் போல் நடந்துகொள்ள நீங்கள் முயலுவதனால், நீங்கள் பாவம் செய்கிறீர்கள்'' என்று கூறினான். அவர்கள், “ஓ...'' என்றார்கள். அவன், “இன்னொரு காரியத்தை நான் உங்களிடம் கேட்கப் போகிறேன். உங்களிடத்திலிருந்து நான் எப்பொழுதாவது ஏதாவது பணம் பறித்துக் கொண்டதுண்டா? எப்பொழுதாவது உங்களிடம் காணிக்கைக்காக கையேந்தினதுண்டா? அல்லது கர்த்தருடைய நாமத்தினால் உங்களிடம் உரைத்த எந்தக் காரியமும் நிறை வேறாமல் போனதுண்டா ?'' என்றான். அவர்கள், “இல்லை, நீர் ஒருபோதும் எங்களுடைய பணத்தை பறித்துக் கொண்டதில்லை என்பது உண்மைதான். நீர் கர்த்தருடைய நாமத்தினால் எங்களுக்கு உரைத்த எதுவும் நிறைவேறாமற் போனதில்லை'' என்றார்கள். 'அப்படியானால் எனக்குச் செவிகொடுங்கள்! ஏனைய ஜனங்களைப் போல் நடந்து கொள்ள விரும்புவதன் மூலம் நீங்கள் பாவம் செய்கிறீர்கள்'' என்று சாமுவேல் கூறினான். ஆனால் அவர்களோ, எப்படியாயினும் ஒரு ராஜா வேண்டுமென்று பிடி வாதமாக விரும்பினார்கள். அது சரியோ, தவறோ, அதைப் பற்றி யெல்லாம் பொருட்படுத்தாமல், பிடிவாதமாக தங்கள் யோசனையை செயல்படுத்த அவர்கள் விரும்பினர். அதேவிதமான காரியத்தைத்தான் எபேசுவிலும் மக்கள் விரும்பி, நிக்கொலாய் மதஸ்தரின் போதனையை ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் அதைச் செய்தபொழுது, அது அவர்களை, சடங்காச்சார ரீதியில் மதமாறிய அஞ்ஞானிகள் கூட்டமும் கிறிஸ்தவர்களின் கூட்டமும் சங்கமமாகிய ஒரு சமஷ்டிக்குள் தள்ளிப்போட்டது, அச்செயல், 1500 ஆண்டுக்கால இருண்ட காலங்கள் ஏற்பட காரணமாக அமைந்தது. லூத்தர் வந்தபோது, அவர்களை அதிலிருந்து வெளியே இழுத்துவிட்ட போதிலும், லூத்தரன்கள் இரண்டாவது சுற்றில், எபேசுவில் அவர்கள் செய்தது போலவே மீண்டும் வழுவிப் போனார்கள். 27இப்பொழுது நீங்கள் கவனித்துப் பார்த்தால், இந்த குத்து விளக்கு அவ்வாறு அமைந்திருக்கவில்லை. அவை இவ்வாறு தொடங்கி மேலே மேலே வருகின்றன. அவர் நின்று கொண் டிருக்கும் இடத்தில் உயரமாக இருக்கும் அகல் இங்கே உள்ளது. சிலுவையைப் போல் தோற்றமளிக்கும் இதில் அவர் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து அகன்ற பொழுது, கிறிஸ்தவ மானது மங்கிப் போயிற்று. இவ்விளக்கை சிலுவையைப் போல் பார்த்தால், அவருடைய வலது கரம் விளக்கின் முதல் அகலிலும், அவரது இடம் கரம் ஏழாவதாக கடைசி அகலிலும் அமைந் திருக்கிறது. 4ம் அதிகாரத்தில் அவரை இவ்வாறு நாம் பார்த்தோம். அவருடைய கரம் முதல் சபையின் மேலும் கடைசி சபையின் மேலும் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் அல்பாவும் ஓமெகாவு மாயிருக்கிறார். அல்பா மற்றும் ஓமெகாவாகிய இவ்விரு எழுத்துக்களுக்கிடையில் உள்ளதெல்லாம் மற்ற எழுத்துக்கள். ஆனால் அவர் “அல்பாவும் ஓமெகாவும்'' என்று சிறப்பித்துக் கூறியுள்ளார். அவரது சிரசின் மேல் அவருடைய உடன் படிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வானவில் உள்ளது. 28பெந்தெகொஸ்தேயில் ஏற்பட்ட ஒளியானது, அது துவங்கிய இடத்திலிருந்து நீங்கள் அதைக் கவனித்தால், அது படிப்படியாக மங்கிக்கொண்டே வந்துள்ளது என்பதைக் காணலாம், பாலிகார்ப் மற்றும் ஏனையோரும், தங்கள் சாட்சிகளை தங்களுடைய இரத்தத் தினால் முத்திரையிட்டார்கள். இக்காலத்தில் உண்டான உபத் திரவம் கிறிஸ்தவத்தை மிக இருண்ட நாட்களுக்குள் கொண்டு சென்றது. இப்பொழுது பாருங்கள், குத்துவிளக்கின் அந்தப் பெரிய வளைவில் முதல் சபையையும், மறுபக்கத்தில் இருந்த சபையையும், முதலில் சிறிது ஒளியும் பிறகு ஒளி அதிகரித்துக் கொண்டே யும் வந்துள்ளது. அந்த நாள் வரைக்கிலும் வந்து அது எவ்வாறு பிரகாசிக்கிறது என்பதைப் பாருங்கள். இப்பொழுது இந்த காலத்தில் முடிவில், ''லவோதிக்கேயா என்ற வெது வெதுப்பான'' காலத்திற்குள் அது வரும் என்று முன்னுரைக்கப் பட்டிருக்கிறது. ஆகவே, அவர்களை அந்த நிக்கொலாய் மதஸ்தரின் போதகமானது அந்தக் கேட்டுக்குள் கொண்டு போய் விட்டுவிட்டதென்றால், பெந்தெகொஸ்தேயில் இருக்கும் நமக்கு ஏன் அது வேண்டும்? “ஒரு மிருகம் இருக்கும்'' என்று வேதம் கூறியதை நீங்கள் அறிவீர்கள். அதுதானே ரோமாபுரியின் போப்பு மார்க்கமாகும் என்பதை நாம் அறிவோம். அது முற்றிலும் உண்மை . அப்பொழுது அவர்கள் அம்மிருகத்திற்கு ஒரு சொருபத்தை உண் டாக்குவார்கள். சொரூபம் என்பது என்ன? ஒன்றைப் பார்த்து அதைப் போலவே செய்தல். அதுதான் சபைகளின் மகா சம்மேளனம், அல்லது சமஷ்டி. பெந்தெகொஸ்தே ஸ்தாபனமும் அதில் உள்ளது. ஒருவேளை வருகிறது, அப்பொழுது நீங்கள் ஒன்று ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், அல்லது உங்களது கதவுகளை நீங்கள் திறந்து வைத்துக் கொண்டிருக்க முடியாது. அது உண்மையாயில்லையா என்பதைப் பாருங்கள். எனவே தான் அந்த காரியத்திற்கு நாம் மரண அடி கொடுக்கிறோம். ஆம், ஐயா. அவர்கள் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டு, அதில் நீங்கள் சேராவிட்டால், அதாவது அந்த ஸ்தாபன அடையாளத்தை உங்கள் மேல் போட்டுக் கொள்ளாவிடில், நீங்கள் விற்கவோ கொள்ளவோ இயலாது என்ற நிலைமை வரும். 29அந்நாட்களில் அவர்கள் சுட்டெரிக்கப்பட்டு அழிக்கப்பட் டார்களே, அதைப்போலவே அது இருக்கும். நான் அந்த அரங்க சாலைக்குள் நின்றேன். அங்கே அந்த க்ளேடியேட்டர்ஸ் நிற்கும் இடத்திலும் நின்றிருந்தேன். (அக்காலத்து ரோமாபுரியின் மிகப் பெரிய விளையாட்டரங்களில், கேளிக்கைக்காக அவ்வரங்கத் தினுள், சிங்கங்களுடன் கைதிகள், அடிமைகள், சன்மானம் பெற்றவர்கள் போரிடுவர். அவர்களைத் தான் க்ளேடியேட்டர்கள் என்று அழைப்பர். அப்படிப்பட்ட அரங்கத்தினுள் தான் கிறிஸ்துவை மறுதலிக்காத மெய்க்கிறிஸ்தவர்கள், அவிழ்த்து விடப்பட்ட பசித்திருக்கும் சிங்கங்களுக்கு முன்பாக நிறுத்தப்படு வார்கள் - மொழி பெயர்ப்பாளர்). நான் அங்கே ஒரு சிறு குழந்தையைப் போல் அழுதேன். அங்கே என்னுடைய கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் சிறு குழந்தைகள் அநேகர் சிங்கங் களினால் கிழித்து, கொன்று புசிக்கப் பட்டதைக் குறித்து நான் அறிந்தேன். அவர்கள் யாவரும் விசுவாசத்திற்காக அவ்வாறு கொல்லப்பட்டுப் போயிருந்தால், நான் இப்பொழுது அவர்களை கைவிட்டுவிடுவேனோ? இல்லை, ஐயா, இல்லை சகோதரனே பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத் தற்காக நான் தைரியமாக நிற்கட்டும். அதனால் எவ்வளவாய் புகழ்ச்சிக் குறைவாக எண் ணப்பட்டாலும் பரவாயில்லை. 30சிலர் என்னிடம் ஒரு விஷயத்தைப் பற்றி கூற விரும்பிய துண்டு. சமீபத்தில் ஒருவர் என்னிடம் அதைப் பற்றி கேட்டும் விட்டார். எத்தனையோ பெரிய ஊழியக்காரர்களில் அநேகர் என்னைக் கூப்பிட்டு, “சகோ.பிரன்ஹாமே, நீங்கள் அதைக் குறித்து பிரசங்கிப்பதை நிறுத்தாவிட்டால், எல்லா ஸ்தாபனங்களுமே உங்களுக்கெதிராக ஆகிவிடும்'' என்று கூறினார்கள். “என் ஒரேயொருவர் மட்டும், பரலோகத்தில் இருக்கிற அந்த ஒருவர் மட்டும், எனக்கெதிராக இருக்க மாட்டார், நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒருவர் அவரே'' என்றேன். பாருங்கள்? ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் உள்ள மக்களை நான் நேசிக்கிறேன். நிச்சயமாக. ஆனால் நிறைவேறாத எந்த வார்த்தை யையாவது நான் கர்த்தருடைய நாமத்தினால் உங்களுக்கு எப்பொழுதாவது உரைத்ததுண்டோ ? பாருங்கள்? உரைத்தவைகளெல்லாம் சரியாக நிறைவேறியதுண்டா ? உங்களிடம் எப்பொழுதாவது நான் பணத்திற்காக கெஞ்சியது உண்டா? அப்படியானால் ஸ்தாபனத்தை விட்டு வெளியே நில்லுங்கள். கிறிஸ்துவுக்குள் சுயாதீனராக நிலைத்திருங்கள். பரிசுத்த ஆவி யானவர் தாமே சபைக்கு உள்ளும் புறமும் அசைவாடட்டும். 31முக்கியமான ஒரேயொரு காரியம் என்னவெனில், உங்க ளுக்குள் நிலவும் சிறு சிறு வேறுபாடுகளையெல்லாம் களைந்து போடுங்கள். சிறு சிறு இஸம்கள் (அதாவது கொள்கைகள்), சகோதரர்களைப் பற்றி சிறிய விசித்திரமான எண்ணங்கள், மேலும் அதைப் போலுள்ள காரியங்கள் இவற்றை உதவி எறியுங்கள். உங்கள் ஆத்துமாவுக்குள் ஒருபோதும் கசப்பான வேர் முளைத் தெழும்பவிட வேண்டாம். அப்படி அனுமதித்தால், அது உங்களை அரித்துப்போடும். அது உண்மை . அன்பில் நிலைத்திருங்கள். அன்பில் நிலைத்திருங்கள். மக்கள் உங்களை எவ்வளவாய் வெறுத் தாலும், அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. நீங்கள் எப்படி யாயினும் அவர்களை நேசியுங்கள். அதை உங்களால் செய்ய முடிய வில்லையென்றால் இன்னும் உங்களிடத்தில் சந்து பொந்துகள் உள்ளன. நீங்கள் இன்னும் முத்திரையிடப்படவில்லை. எனவே திரும்பி வந்து கிறிஸ்துவின் இரத்தத்தினால் சரியாக முத்திரை யிடப்படுங்கள். அதுதானே உங்களை உங்களுடைய எல்லா கசப்பான வேரிலிருந்து கழுவிப்போடும். 32இப்பொழுது, பாருங்கள், நாம் அதை மறுபடியும் முயற் சித்துக் கொண்டிருக்கிறோம். பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதம் 1906ம் ஆண்டில் விழுந்தது. திபெத்து நாட்டிலிருந்து வந்திருக்கிற ஒரு மிஷனரி இன்றிரவில் அங்கே அமர்ந்திருக்கிறார். அவர் இங்கிருக்கிறபடியால் நான் இதைப் பற்றிச் சொல்லவில்லை. அவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று எண்ணுகிறேன். அவர் இன்னமும் இங்கே தான் இருக்கிறார் என்று எண்ணுகிறேன். நான் இறங்குவதற்கு முன்னால் அவர் நம்மிடையே பேசப் போகிறார். 1906ல் விழுந்த அந்த பெந்தெகொஸ்தே எழுப்புதலை அவர் நினைவில் வைத்துள்ளார். அப்பொழுது எந்தவொரு ஸ்தாபனமும் ஏற்படவில்லை. யாவரும் எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள். ஓ,தவறான அடியை, நடையை எடுப்பது அப்போது எவ்வளவு சுலபமானதாகவும், அறிவாளிகளுக்கு அது எவ்வளவு நல்லதாகவும் காணப்பட்டிருக்கும். 33இஸ்ரவேல் அந்நதிக்கரையில் நின்று ஆர்ப்பரித்த போது, அவர்களுக்கு என்ன தெரியவில்லை என்றால்... “இந்த விதமான மார்க்கம் ஏதோ புதிதாக இருக்கிறதே'' என்று நீங்கள் கூறுகிறீர்கள். இது மிகவும் பழமையான மார்க்கம். நிச்சயமாக. உலகமானது உண்டாவதற்கு முன்பே, அவர்கள் ஆர்ப்பரித்து, தேவனை ஸ்தோத் தரித்துக் கொண்டிருந்தார்கள். தேவன் அவ்வாறு கூறினார். அவர் யோபைப் பார்த்து, ”விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே அப்பொழுது நீ எங்கிருந்தாய்?'' என்று கேட்டார். உலகமானது உண்டாக்கப் படுவதற்கு முன்னரே அது நடந்தது. 34ஆனால் இப்பொழுது இஸ்ரவேலரைப் பாருங்கள். அவர்கள், அற்புதங்களைப் பார்த்திருக்கின்றனர். அது ஆதிகாலத்து பெந்தெகொஸ்தேயாக இருந்தது. இஸ்ரவேல் அந்நாளைய பெந்தெகொஸ்தேயாக திகழ்ந்தது. அவர்கள் எகிப்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர். தேவன் அவர்களை ஆசீர் வதித்து, அவர்களுக்கு எல்லாவிதமான அற்புதங்களையும், அடையாளங்களையும் அளித்து, அவர்களை விடுவித்தார். அவர்கள் அந்த செங்கடலின் கரையில் நின்றபோது, அவர்களுக்கு ஒரு பெந்தெகொஸ்தே கூட்டம் உண்டாயிருந்தது. இப்பொழுது கவனியுங்கள். மோசே ஆவியில் பாடினான், மிரியாமும் ஒரு தம்புருவை எடுத்துக் கொண்டு அதை அடித்து, கடற்கரை முழு வதும் ஓடியாடிப்பாடி, ஆவியில் நடனமானடினாள், இஸ்ர வேலின் குமாரத்திகளும் அவளைப் பின்பற்றி, ஆவியில் நடன மாடினார்கள். அது பெந்தெகொஸ்தே கூட்டம் இல்லை என்றால், நான் அவ்விதமான கூட்டத்தையே பார்த்திருக்கவில்லை என்று தான் அர்த்தம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமானது, இன்னும் நாற்பதாண்டுகள் யாத்திரை மேற்கொண்ட பிறகுதான் வரும் என்பது அவர்களுக்கு அப்போழுது ஒன்றுமே தெரியாது. ஆனால் அத்தேசம் சுமார் நாற்பது மைல்கள் தூரத்தில் தான் இருந்தது. ஆனால், அவர்கள் தவறான பாதையைத் தெரிந்து கொண்டபடியினால், நாற்பது மைல்கள் தூரத்தில் இருந்த அத்தேசத்தைப் போய் சேர்ந்திட நாற்பதாண்டுகள் பிடித்தது. பரிசுத்த ஆவி தங்களை நடத்தவிடுவதற்குப் பதிலாக, அக்கினி ஸ்தம்பம் அவர்களை அழைத்துக் கொண்டு போய் நடத்தட்டும் என்பதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு பிரமாணத்தையே பெற்றிருக்க விரும்பினர். தாங்கள் கிரியை செய்வதற்கு வசதியாக அவர்களுக்கு ஏதோ ஒன்று வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். தாங்கள் கிரியை செய்வதற்கு வசதியாக அவர்களுக்கு ஏதோ ஒன்று வேண்டு மென்று அவர்கள் விரும்பினர். அவர்கள் சில மத குருமார்கள் தங்களுக்கு இருக்க வேண்டுமென்றும், சில பிரசித்தி பெற்ற நபர்கள் இருக்க வேண்டுமென்றும், தாங்கள் ஜம்பம் அடித்துக் கொள்வதற்கு வசதியாக தங்களுக்கு ஒரு வேத சாஸ்திரம் இருக்க வேண்டுமென்றும் விரும்பினார்கள். பரிசுத்த ஆவியானவர் தங்களை நடத்துவதற்கு பதிலாக இவைகளையே அவர்கள் தெரிந்து கொண்டனர். அவர்கள் ஆவியில் பாடினர், தேவன் அவர்களுக்கு யாவற்றையும் அளித்திருந்தார், ஆனால் தாங்கள் அதற்குள் கிரியை செய்ய வசதியாக அவர்களுக்கு ஏதோ வேண்டு மென்று விரும்பினர். 35இனக்கலப்பு செய்தல் மீண்டும் ஏற்பட்டது. பசுவானது பசுவாகவே இருந்துவிட்டு போகட்டும், குதிரையானது குதிரை யாகவே இருந்து விட்டு போகட்டும், உணவையும் இனக் கலப்பு அதை விட்டுவிடுங்கள். 'ரீடர்ஸ் டைஜ்ஸ்ட்' என்ற பத்திரிகையில் ஒரு விஞ்ஞானக் கட்டுரையில், உணவுப் பொருளில் இனக்கலப்பு செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது, மக்களும் அவற்றை புசித்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.... கோழிகளை எடுத்துக் கொண்டால், அவைகளையும் இனக்கலப்பு மூலம் புதிய ரக இனங்களை அவர்கள் உற்பத்தி செய்து கொண்டே போகிறார்கள். இறுதியில் அவைகள் இறக்கைகளும், கால்களும் இல்லாத ஒரு வகை இனமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவைகள் மிகவும் மென்மையானவைகள், முட்டை போட முடியாதவை, அதன் ஆயுட்காலம் ஒரு வருடம்தான். அவைகளின் திசுக்கம் மிகமிக மென்மையானவை, எனவே நீங்கள் கடித்து மென்று தின்னவே வேண்டியதில்லை. அப்படியே கரைந்து விடும். அதை புசிக்கிற மக்களை, அது தாறுமாறான நிலையில் ஆக்கிவிடுகிறது. அது உண்மை. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சென்ற வருடத்தில், ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவோர் நாற்பது சதவிதமாக அதிகரித்திருக் கிறதாம், தற்காலத்தில் பெண்களின் தோள்கள் விரிவடைந்தும், அவர்கள் இடுப்பு குறுகிக் கொண்டும், ஆண்களின் தோள்கள் குறுகிக் கொண்டும், இடுப்பு விரிவடைந்து கொண்டும வருகிறதாக விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? காரணம் என்னவெனில், நீங்கள் புசிக்கும், விதை மற்றும் பொருட்கள் யாவும் இனக்கலப்பு மூலம் பிறப்பிக்கப் பட்ட வீரிய ஒட்டு இனமாக இருக்கின்றன. அவைகளெல்லாம் ஒழுங்கற்ற தாறுமாறான, புரட்டான உணவுகளாகும். இயற்கை யான அசலான பொருட்களை உண்டு வாழவே உங்கள் சரீரம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. இந்த புரட்டான உணவு என்ன செய் கிறது? ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் உள்ள இயற்கை யான தன்மையையே மாற்றிவிடுகிறது. அதனால், நமக்கு ஹாலி வுட், நமது அரசாங்கம் உள்பட அனைத்து விஷயங்களிலும் முழு வதும் கோணல்மாணலான தாறுமாறான ஆட்கள் நிரம்பியிருக் கிறார்கள். அவன் என்ன செய்கிறான்? அவர்கள் தங்களுடைய சொந்த மரமான அறிவடையச் செய்யும் மரத்தின் மூலம் இத்தீங்குகளையெல்லாம், தங்கள் மேல் வருவித்துக் கொண்டு, தங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். 36ஆதிக்கு திரும்பிச் செல்லுங்கள்! இயற்கையை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள்! தேவனுடைய வழியில் குறுக்கிடாதீர்கள். சபையானது பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக் கட்டும். தேவன் இந்த பிஷப்புகள் மற்றும் போப்புகளில் ஒருவர் அல்ல, அவர்களின் உபதேசம் என்னவாயிருந்தாலும் அதன்படி நடக்க. நாம் எங்கே துவங்கினோமோ, அதற்குத் திரும்பிச் செல் லுங்கள். திரும்பிச் செல்லுங்கள். இயேசு திரும்பி வரும்போது, அவர்கள், “நான் ஒரு மெதோடிஸ்ட்'' என்று சொன்னால், ''ஆதி முதலாய் அப்படியிருக்கவில்லை'' என்று அவர் கூறுவார். ''நான் பிரெஸ்பிடேரியன்'' என்று இன்னொருவர் கூறக் கூடும். 'ஆதி முதலாய் அப்படியிருக்கவில்லையே'' என்று பதிலளிப் பார். ஆதியில் என்ன இருந்தது? பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானத்தினால் உண்டான பெந்தெகொஸ்தே அனுபவம் தான் உண்டாயிருந்தது. அவ்வாறு தான் அது ஆரம்பித்தது. ஆனால் நாம் அதை தாறுமாறாக்கிப் போட்டோம் என் பதைப் பாருங்கள். ஓ, தாறுமாறாக்குதல் அதை அதிக அழகுள்ள தாகச் செய்கிறது, நிச்சயமாக. அந்த சிறிய சபை ஆவியில் நடனமாடி தெருக்களில் ஆர்ப்பரித்துக் கொண்டு சென்றனர். மக்கள் அவர்கள் மேல் கற்களை வீசியெறிந்தனர், அவர்களைக் குறித்து பரிகசித்தனர், இன்னும் அது போன்ற ஒவ்வொரு காரியத்தையும் அவர்களுக்குச் செய்தனர். ஆனால் எங்களுக்கு பெரிய டாக்ஸாலஜியும் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணமும் உண்டு , எங்களது மேய்ப்ப ர், டாக்டர், பி.எச்டி., எல்.எல்.டி, இரட்டை எல்.எல்.டி, ஆகிய பட்டங்களைப் பெற்றவர்'' என்று பெருமையடித்துக் கொள்கிறார்கள். (பெரிய டாக்ஸாலஜி என்றால், ''க்ளோரியா இன் எக்ஸல்சிஸ் டியோ (Gloria in Excelsis Deo) என்ற ஒருவகை பாடல் இது. இதை ஸ்தாபனங்களில் சடங் காச்சாரமாக பாடுவார்கள். ''உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையுண்டாவதாக' என்று இராகத்தோடு சொல்லுவார்கள்). இப்படியெல்லாம் செய்து 'ஆமென்'' என்பதற்குப் பதிலாக கிண்டலாக “ஆ மென்'' (அதாவது ”ஆ மனிதன்'') என்று கூறு கிறார்கள். பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட கன்றுக்குட்டியை போல் இருக்கிறது இது. 37நான் இவ்வாறு கூற வேண்டுமென நோக்கங் கொண்டிருக்க வில்லை. என்னை மன்னியுங்கள். நான் தவறான நோக்கங் கொண்டு இவ்வாறு செய்யவில்லை. அப்படிச் செய்வது தேவனுடைய ஊழியக்காரனுக்குரிய இலட்சணம் அல்ல. ஆனால் அப்படிப்பட்ட செயல்களைப் பாருங்கள்... அது என் நினைவுக்கு வந்தது, இப்படிப்பட்ட அபத்தமான காரியங்களை யெல்லாம் அவர்கள் கூறி, செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். “ஆ-மேன்' (ஆமென் என்றல்ல - ஆ-மேன் என்றால் ஆ- மனிதனே என்று பொருள் - மொழி பெயர்ப்பாளர்). ''ஆ மனிதனே'' என்று கூறாதீர்கள். நான் நல்ல, பழமையான ஒரு பெந்தெகொஸ்தே ஆராதனையையே விரும்புகிறேன், ஏனெனில் அங்கே, தேவனுடைய வல்லமையானது விழுந்து, சப்தமிட்டு, ஆர்ப்பரித்து, தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டு ஆராதிக்கிற ஒரு மகத்தான வேளை உண்டாயிருக்கிறது. ஆவியானவர் அவ்வாறு தான் மக்களை பற்றிக் கொள்ளுகிறார். ஆனால் இவர்கள் மத்தியிலோ ஒரு ஆமென்'' ஐக் கேட்க முடிவதில்லை. அவர்கள் கூறுவது, ”ஆ மனிதனே'' (“Ah-men”) என்பதுதான். ஸ்தாபனங்களில் இப்படிப் பட்ட காரியத்தைத்தான் பார்க்க முடியும். அவர்கள் அவ்விதமான தவறுகளை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். 38இதைப் பற்றி ஏதாவது தீர்க்கதரிசனம் உள்ளதா? கடந்த இரவில் நாம் பவுலின் தீர்க்கதரிசனத்தைப் பார்த்தோமே, நினை விருக்கிறதா? “நான் போன பின்பு, மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும், உங்களிலும் சிலர் எழும்பி, (அவர்கள் நடுவிலிருந்து தான் ரோமக் கத்தோலிக்க சபை ஏற்பட்டது) சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்வார்கள்''. பவுல் முன்னுரைத்த ஓநாய்கள் தான் நிக்கொலாய் மதஸ்தரின் போதகர் உண்டாகக் காரணமாயிருந்தன. தீர்க்கதரிசியிடம் ஆவியானவர் மறுபடியும் பேசுவதைக் கவனியுங்கள்; ''கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரு மென்று அறிவாயாக, எப்படியெனில் மனுஷர்கள் தற்பிரியராய் (நான் டாக்டர் பட்டம் பெற்ற இன்னார், வேதத்தை குறித்து நீ எனக்கு சொல்ல வேண்டியதில்லை, நான் ஒரு பிரெஸ்பிடேரியன் என்பதை உனக்கு கூற விரும்புகிறேன். அல்லேலூயா!'' அல்லது “நான் ஒரு பெந்தெகொஸ்தேகாரன்'' என்றெல்லாம் தற்பிரியராய் பேசுகிறார்கள்) நீங்கள் சுபாவ ரீதியாக பெந்தெகொஸ்தேகாரராக இல்லாவிடில், அதனால் என்ன வித்தியாசம்? பெந்தெகொஸ் தேயின் அனுபவம்தான் காரியம், பாருங்கள். ஆம் ஐயா! ”நான் அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையை சேர்ந்தவன்'' என்கிறார்கள். “நான் சர்ச் ஆஃப் காட் சபையை சேர்ந்தவன்'' என்கிறார்கள். தேவனுக்கு இந்தப் பெயர்கள் எல்லாம் எந்தவொரு வித்தி யாசத்தை ஏற்படுத்தி விடப்போகின்றது? ஆனால் நீங்களோ, உன்னதத்தின் இராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அது உண்மை . 39இந்த ஸ்தாபனக் கூட்டங்கௌல்லாம், களியாட்டுமிக்க கதம்பக் கூட்டாகும். வேதம் கூறுகிறது; ''அவர்கள் துணிகரமுள்ள வர்களாவும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவபிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும் இருப்பார்கள்''. தொலைக்காட்சியில் அவர்களுக்கு நல்லதாகப் படும் ஒரு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்துவிட்டால், சபைக்கு கூட செல்லமாட்டார்கள். ஓ, என்னே! எப்பொழுதும் அவர்கள். சபைகளில் கூட நடனக் குழுக்கள், சமுதாய இரவு விருந்துகள், கிரிக்கெட் பார்ட்டிகளும் இருக்கின்றன. 'தேவ பிரியராயிராமல் சுகபோகப் பிரியராவும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சை யடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் இருப்பார்கள்''. இவர்கள் அவர்களை ஒடுக்குகிறார்கள். இவர்கள் அவர்களைப் பகைக்கிறார்கள். நல்லோரைப் பகைக்கிறவர்களா யிருப்பார்கள். 40நீங்கள், மேற்சொன்ன வசனங்களில் கூறப்பட்டுள்ளவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கூறலாம். இல்லை, இல்வே இல்லை. 'துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல், சுகபோகப்பிரியராயும், இணங்காதவர் களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், நல்லோரைப் பகைக்கிற வர்களாயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து (அது தான் ஸ்தாபன அனுபவம் என்பதைப் பாருங்கள்) அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்''. இந்த நாளில் இது யாரைக் குறிக்கும்? “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து” ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமையில் போய் அங்கே மிகவும் பக்தியாக காண்பித்துக் கொண்டு, பிறகு, மத்தியானத்தில் குட்டையான உடையை அணிந்து கொண்டு, புல்வெளியில் புல்வெட்டி விட்டு, பிறகு ஓர்டெல்ஸ் 92 என்ற மதுவை உறிஞ்சுகிறார்கள். அவர்களுடைய மேய்ப்பர் வெளியே போய் ஒரு சிகரெட்டைப் புகைத்து விட்டு வருகிறார். தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொள்கிறார்கள். “நல்லது, மேய்ப்பரே, அங்கே ஒரு சபை இருக்கிறதாம், அங்கே ஒரு பெண்மணி சென்று புற்றுநோயிலிருந்து சுகமடைந் தாளாம்”. 'அபத்தம், அற்புதங்களின் நாட்கள் முடிவடைந்து விட்டன'' என்று மேய்ப்பர் கூறுகிறார். ''உங்களுக்குத் தெரியுமா? நான் அன்றிரவு அந்த சிறிய சபைக்குச் சென்றேன், அந்த மூலையில் இருக்கிற சபை அது, யாரோ ஒருவர் எழும்பி நின்று ஏதோ பிரசங்கித்தார்''. “ஓ, இனியவனே, இப்படிப்பட்டவைகளை நீ நெருங்கவே செய்யாதே, அவர்களெல்லாம் பைத்தியம் பிடித்த நாய்கள், அதனிடம் போய் நீ ஏமாறாதே, அவர்களெல்லாம் உருளும் பரிசுத்தர். நீ அங்கே ஒரு போதும் போகாதே''. 41“தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடு களில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக் கொள்கிறார்கள்''. அது முற்றிலும் உண்மை . ஸ்திரீகளுக்கான இந்த சங்கம், அந்த சங்கம், என்று பல்வேறு அமைப்புக்கள் ஸ்தாபனங் களில் இருந்து வருகிறது. சபைகளில் இவ்வாறாக பெண்களுக்காக பல அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு அவைகளிலேயே நேரத்தை செலவிடுவதால், சுவிசேஷத்தை இனிமேல் பிரசங் கிக்கவே இயலாதபடி நிலைமை ஆகிவிட்டது. போதகருக்கு 20 நிமிடங்கள் மேல் பிரசங்கிக்க அனுமதிகிடையாது. அந்த வேளை யில் அவர் வேறு எதையாவது தான் பிரசங்கித்தாக வேண்டும். பாருங்கள்? அவர் அதற்கு மேல் பிரசங்கித்தால், அவரை உதவிக்காரர்களின் (டீக்கன்) குழு போய் சந்திப்பார்கள். ஆம் ஐயா. 80. ஓ,சகோதரனே, இன்றைக்கு ஒரு நல்ல பாஸ்டர் என்பவர் என்ன செய்ய வேண்டும்? எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியுமோ அந்த அளவுக்கு செய்ய வேண்டும். தேவையற்ற வைகளை என்ன நேரிட்டாலும் வெட்டிவிட வேண்டும், விளைவுகள் என்னவாக இருந்தாலும் சரி, தேவையற்றைவைகளை அகற்றிவிட வேண்டும். அவ்வளவுதான். ஆம் ஐயா. அது தான் சரியானது. யாரை பாதிக்கிறதாயிருந்தாலும் சரி, அதைப் பற்றி கவலைப் படாமல், வார்த்தையை பிரசங்கித்து, வார்த்தையோடு நிலைத்து நிற்க வேண்டும். வார்த்தையை, ஆணியை சுத்தியினால் நன்றாக அடித்து இறுக்குவது போல் உரைக்க வேண்டும். அவர்கள் உங்களை சிறையில் தள்ளினாலும், சிறையிலும் பிரசங்கியுங்கள். அவர்கள் உங்களை வெளியே தள்ளினால், நீங்கள் எங்கு சென் றாலும் அங்கெல்லாம் பிரசங்கியுங்கள். பிரசங்கித்துக் கொண்டே யிருங்கள். அதுவே சரி. அவ்வாறுதான் சம்பவித்துள்ளது. அவர்கள் உங்களை செயல்பட முடியாதபடி செய்கிறார்கள். 42நாம் இப்பொழுது சிமிர்னா சபையின் காலத்திற்கு வருகிறோம். 8ம் வசனம். சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில்; முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவரு மானவர் சொல்லுகிறதாவது: வெளி.2:8 அவர் ஒவ்வொரு சபைக் காலத்திலும், முதலாவதாக, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அவ்விதமான ஒவ்வொரு அறிமுகத்திலும், அவர் தன்னுடைய தெய்வீகத்தைப் பற்றி ஏதாவது குறிப்பிடவே செய் கிறார். அவர் செய்யும் பிரதானமான காரியம் என்னவெனில், சபையானது அவரது தெய்வீகத்தைப் பற்றி அறிந்து, அதாவது அவர் தேவன் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். ஐரேனியஸின் காலத்தில் சர்ச்சைக்குரிய பிரச்சினை யாயிருந்து, அவர்கள் வாக்குவாதம் செய்த விஷயம் என்னவாக இருந்தது? அவர்கள் தேவன் மூன்று நபர்களில் இருக்கிறார் என் றனர். ஆனால் ஐரேனியஸோ, 'அப்படியொரு காரியம் இல்லை. அவைகள் ஒருவராய் இருக்கிறவருடைய மூன்று பட்டங்கள், அவரே சர்வல்லமையுள்ள தேவனாயிருக்கிறார்'' என்று கூறினார். அது தான் சரி. தேவன் துவக்கத்தில் தன்னுடைய தெய்வீகத் தன்மைகளில் ஒன்றைப் பற்றி சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறார். அவர் இங்கே தன்னைப் பற்றி அறிமுகப்படுத்து கையில், “இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ளவர்'' என்று கூறுகிறார். இங்கே சிமிர்னா சபையின் காலத்தை ஆரம்பிக்கிறார் இப்பொழுது; 43இப்பொழுது நாம் அவருக்கு செவிகொடுப்போம்: சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில்.... (அத்தூதன் ஐரேனியஸ் தான் என்று நாம் விசுவாசிக்கிறோம்)... முந்தினவரும் பிந்தினவரும், மரித் திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது... (“இந்தச் சபைக் காலத்தின் தேவன் நானே. இங்கே நான்கைந்து வெவ்வேறு தேவர்கள் இருப்பதை நான் விரும்புவதில்லை. நானே தேவன், பாருங்கள், அவ்வளவுதான்'' என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அதுதான் அறிமுகம் செய்தல். சிமிர்னா என்ற வார்த்தைக்கு “கசப்பு' என்று அர்த்தமாம். இது வெள்ளைப்போளம் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. முதலாம் சபையான எபேசு சபை தங்களின் ஆதி அன்பை இழந்துவிட்டார்கள். இந்த சபையோ, அதின் துவக்கத்தில் 'கசப்பான வேரை'' தங்களில் முளைத்தெழும் பத்தக்கதாக அவர்கள் நிலைமை இருந்தது. ஏனெனில் இந்த சபையானது, பிரதான சபையில் உள்ள பெரும்பான்மையோர், எப்பொழுதும் சபையை பரிசுத்த ஆவி ஆளுவதை விரும்பாமல், தங்களை தாங்களே ஆள வேண்டுமென விரும்பியவர்களாக இருந்தனர். அவர்கள் உருவழிந்துபோன ஆசாரிய முறைமையின் படியே, தங்களுக்கும் அப்படிப்பட்ட குருக்களாட்சி முறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினர். அவர்கள் தங்களுக்கு மதகுரு மார்கள் இருக்க வேண்டுமென விரும்பினர். அவர்கள் கிறிஸ்தவர் களாக ஆவதற்கு முன்பு, அஞ்ஞானிகளாக இருக்கையில், அவர்களுடைய அஞ்ஞான தேவர்களாகிய ஜூபிட்டருக்கும், வீனஸுக்கும் மதகுருமார்கள் இருக்கப் பெற்றிருந்தனர். அதே முறையை மதம் மாறிய பிறகும், இங்கும் கொண்டுவந்துவிட விரும்பினர். பாருங்கள், ஆரம்பமே அஞ்ஞான முறைமையின் படியாக அமைந்தது. பொய்யான அஞ்ஞானிகள் தங்களுக்கு மதகுருமார்களை உடையவர்களாக இருந்தனர். ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கோ இந்தக் காரியங்களெல்லாம் அந்நிய காரியமாயிருந்தன. கிறிஸ்துவே நமது மகாபிரதான ஆசாரியராக இருக்கிறார். நமக்கு ஒரு பிரதான ஆசாரியன் உண்டு. நாம் புசிக் கத்தக்கதான பீடமும் நமக்கு உண்டு. 44இப்பொழுது இந்த சபையானது ''கசப்பான வேர்'' தன்னகத்தே கொண்டதாக ஆரம்பித்தது. பரிசுத்த ஆவியின் ஆளுகையை தொடர்ந்து கொண்டிருக்க விரும்பியவர்கள் கசப்புடன் எதிர்க்கப்பட்டனர். அன்பானது மங்கிப் போய் விட்டது, அன்புக்கு பதிலீடாக, மாற்றாக, மதக்கோட்பாடுகளுக்கும், ஸ்தாபன முறைமைகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து, பரிசுத்த ஆவியானவரின் தலைமையைவிட்ட அகன்று போய்க் கொண்டிருந்தனர். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! எனவே தான் அவர்களுக்குள் கசப்பானது காணப்பட்டது. சரி. முதலாவது சபையிலேயே கசப்பானது மெல்ல ஊடுருவ ஆரம்பித்தது. இரண்டாவது சபையில் இன்னும் கூடுதலாக அது அதிகரித்தது. இறுதியாக அது நன்றாக உள்ளே ஊடுருவி முழுவதும் வியாபித்து நின்றது, ஏனெனில், அவர்கள் இன்னும் சிறந்த சபையை உருவாக்கிவிட்டோம்'' என்று நினைத்தார்கள். அவர்களுக்குள் மிகுந்த மதிப்புக்குரிய காரியங்கள் இருந்தன, உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் ரோமானியர்கள் எல்லாம் இப்பொழுது சபைக்குள் வர அவர்களுக்கு பிரவேசம் கிடைத்து விட்டது. ஏன்? அவர்களுக்கு ஒரு போப் உண்டு, பெரிய மனி தர்கள் மற்றும் கார்டினல்கள், எல்லாம் அவர்களுக்கு உண்டு, அவர்கள் உயர் ஸ்திதிக்கு ஏற்ப உடுத்தியிருந்தார்கள். மிகுந்த ஆர்ப்பரிப்போடும் சப்தத்தோடும் ஆராதிக்கிற கூட்டங்களை விட்டு தூர வந்துவிட்டார்கள். இப்பொழுது அமைதியாக இருக்கிறது. அவர்கள் மரித்துக் கொண்டிருக்கிறதையே அது காட்டியது. அவர்கள் மரித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் கனம் பொருந்தியதொரு நிலையை அடைந்துவிட்டார்கள், அவர்களுக்கு இன்னும் மேன்மையுள்ள ஒரு அமைப்பை கண்டுவிட்டார்கள். முதலாவதாக, அவர்கள் ரோமன் கத்தோலிக்க சபையை, குருக் களாட்சியில் நடத்தப்படுகிற ஒரு பெரிய ஸ்தாபனமாக, இருண்ட காலத்தில் ஏற்படுத்தினார்கள். இப்பொழுது அவர்களுக்குள் மேட்டுக்குடியினரும், கனவான்களும் இருந்தார்கள். 45பவுல் எபிரெயர் நிருபம் 11ம் அதிகாரத்தில், ''செம்மறி யாட்டுத் தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக் கொண்டு அலைந்து திரிந்து, வாளால் அறுப்புண்டு, பரிகசிக் கப்பட்டு, கேலி செய்யப்பட்டு, விசுவாசிகள் இருந்தார்கள்'' என்று கூறியுள்ளானே, அதைப் போல் சபையானது இப்பொழுது இருக்க வேண்டிய சிரமமே இல்லை. அது முன்போல், தெருக்களில் நிற்க வேண்டியதில்லை. அந்த சிரமம் எல்லாம் இப்பொழுது இல்லை, சபையானது இப்பொழுது மிகவும் கனம் பொருந்திய நிலையில் ஆகிவிட்டது. சபையானது, உயர்வான நிலையில், பெரியதாக இருக்கிறது. அருமையான அங்கிகளும், உள்ளாடைகளும் அணிந்து மற்றும் ஏனைய உயர்தரமான காரியங்களும் உடையவர்களாக இருக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் கனம்பொருந்தியவர்களாக காட்சி யளித்தார்கள். ''சங்கைக்குரிய டாக்டர் ஃபாதர் இன்னார் இன்னார்'' என்று போட்டுக் கொள்கிறார்கள். அவர்களால் சரியானபடி, ''டாக்'' (டாக்டர் என்பதற்கு சுருக்கமாக - மொழிப் பெயர்ப்பாளர்) என்று போட்டுக் கொள்ள முடிகிறது. அதாவது, அது ''டாக்'' (நாய்) என்று தான் உண்மையிலேயே இருக்கிறது. ஆனால் அது ஒரு இனக்கலப்பு முறையில் பிறப்பிக்கப்பட்ட ஒன்றுதான். பாருங்கள், அது தன்னுள் ஜீவனைப் பெற்றிருக்க வில்லை. அவர்களால் ஆதிக்கு திரும்பிப் போக முடியவில்லை. எனவேதான் அவர்கள் திரும்ப எழும்ப முடியவில்லை. லூத்தரன் எழுப்புதல் திரும்ப எழும்ப முடியவில்லை. அதே போல் வெஸ்லி காலத்து எழுப்புதலும், மீண்டும் உயிர்ப்பிக்கப்பட முடியவில்லை. நசரீன்கள் எழுப்புதலும் மீண்டும் உயிர்பெறவில்லை. அதேபோல் பெந்தெகொஸ்தே எழுப்புதலும் திரும்ப உயிர்ப்பிக்கப்பட்டு எழும்பப் போவதில்லை. ஏன்? ஏனெனில், அவர்கள் அதைக் கொன்றுவிட்டார்கள். உண்டான எழுப்புதலை, உலகத்தோடும், நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தோடும், இனக்கலப்பு செய்தும், பரிசுத்த ஆவியானவர் தன் விருப்பம் போல் கிரியை செய்ய அனுமதிக்காமலும் செய்து விட்டார்கள். அது உண்மை. சபையை இனக்கலப்பு செய்துவிட்டபடியால், அதனால் இன விருத்தி செய்து கொள்ள முடியாமற் போய்விட்டது. அசல் வித்தைப் பிறப்பிக்க முடியாமல் அதற்குப் பதிலாக, மெதோடிஸ்ட் தன்னிலிருந்து மெதோடிஸ்ட்டையே பிறப்பிக் கிறது, பாப்டிஸ்ட் விதை இன்னும் அதிகமாக பாப்டிஸ்டுகளையே பிறப்பிக்கின்றது. கத்தோலிக்கம், மீண்டும் கத்தோலிக்கத்தையே இன்னும் கூடுதலாக பிறப்பிக்கிறது. தானியத்தை அதன்மேல் தோட்டைவிட்டு பிரிக்கையில் அதேவிதமான விதைதான் கிடைக்கும். ஆனால் நான் ஒன்று உங்களுக்குச் சொல்லட்டும், பரிசுத்த ஆவி திரும்பி வருகையில், அது புதிய பிறப்பையும் புதிய ஜீவனையும் கொண்டு வருகிறது. ஆவியின் ஞானஸ்நானம் சபையை மீண்டும் அதன் ஆதி ஸ்தானத்திற்கே கொண்டு வந்து, அதற்குள் மீண்டும் ஜீவனை வைக்கிறது. 46இனக்கலப்பு செய்யப்பட்ட தானிய விதை தன்னில் ஜீவனை கொண்டதாய் இருப்பதில்லை. அதில் என்னதான் ஜீவன் உள்ளது? உள்ளதெல்லாம் சாரமற்றுப்போயிற்றே. இருண்ட காலத்தில் அதைப் பற்றி நாம் பார்ப்போம். 'உனக்குள்ளதை நான் வரும் வரை பற்றிக்கொள்'' என்று கூறினார். ஆனால் உள்ளதையெல்லாம் பிழிந்து வெளியே எறிந்து விட்டார்கள். ஆனால் இப்பொழுது அதினால் தன்னை மீண்டும் பிறப்பித்துக் கொள்ள முடியாதபடி மரித்துப் போன நிலையில் உள்ளது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் சரீரமானது ஒரு ஸ்தாபன சபை அல்ல. இயேசு கிறிஸ்துவின் சரீரமான சபை, ஒரு புத்திக்கெட்டாத மறைபொருளானதொரு சரீரமான சபையாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து தாமே பூமியில் ஏற்படுத்தி வைத்துள்ள ஒரு ஆவிக்குரிய இராஜ்யமாக அது இருக்கிறது. இந்த இராஜ்யத்திற்கு இயேசு கிறிஸ்துவே இராஜாவாக இருக்கிறார். இந்த இராஜ்யத்தில் பரதேசியாய் திரிகிறவர்களுக்கு, பலி செலுத்துவதற்காக பிரதான ஆசாரியனாக அவரே இருக்கிறார். அவரே வார்த்தையாகிய தீர்க்கதரிசியாக இருந்து, இந்த இராஜ்யத்தில் சத்தியத்தை பிரசங்கித்து, தேவனுடைய ஒளியைக் கொண்டு வருகிறவரா யிருக்கிறார். இந்த இராஜ்யத்தில் அவரே தீர்க்கதரிசியாகவும், ஆசாரியனாகவும், இராஜாவாகவும் இருக்கிறார். எவ்வாறு இந்த இராஜ்யத்தில் நாம் பிரவேசிக்கிறோம்? ஸ்தாபனத்தினாலா? கடிதத்தினாலா? கைகுலுக்கிக் கொள்வதினாலா? இல்லை, “அந்த ஒரு ஆவியினாலே நாம் யாவரும் அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்''. அச்சரீரம் காணக் கூடாத இயேசு கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறது. நாம் அந்த ஒரே சரீரத்திற்குள், தண்ணீரினால் அல்ல, தெளித்தலினால் அல்ல, தலையில் நீரை ஊற்றுவதினால் அல்ல, எந்தவிதமான தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்தினாலும் அல்ல, அந்த ஒரே ஆவியாகிய பரிசுத்த ஆவியினாலேயே, நாம் யாவரும் அந்த ஒரு சரீரத்திற் குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். 1 கொரிந்தியர் 12ம் அதிகாரம் 13ம் வசனம்; ஆம், நாம் அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக அந்த ஒரே ஆவியினாலே, பரிசுத்த ஆவியினாலே, ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். அப்பொழுது நாம் கிறிஸ்துவைத் தவிர வேறு எதனிடத்திலும் ஓடமாட்டோம். நீங்கள் கிறிஸ்துவினுடை யவர்களாக இருக்கிறீர்கள். அது இரகசியமான புத்திக்கெட்டாத தேவனுடைய இராஜ்யமாயிருக்கிறது. அதனுள் நாம் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் உள்ளே பிரவேசிக்கிறோம். நான் அதை நேசிக்கிறேன். பெந்தெகொஸ்தில் விழுந்த அக்கினியால், சுத்திகரிக்கப்பட்டு, சுத்தமான மக்கள் எங்கும் உள்ளனர் அவர்தம் இதயங்கள் அவ்வக்கினியால் ஜூவாலிக்கிறது ஓ, இப்பொழுது அது என் இதயத்தில் கொழுந்து விட்டெரிகிறது. ஓ அவர் நாமத்திற்கே மகிமையுண்டாகட்டும். நானும் அவர்களில் ஒருவன் என கூறிட முடியும் அதனால் நான் மகிழ்கிறேன் நானும் அவர்களின் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் என கூறிட முடிந்ததால் நான் மகிழ்கிறேன். இம்மக்கள் கல்லாதோர் ஆயினும் (டி.டி.டி. பிஎச்.டி. பட்டங்கள் இல்லையென்றாலும்) உலக கீர்த்தியடைந்தோம் என்று பெருமைப்பட ஏதுவில்லை ஆயினும், அவர்கள் யாவரும் தங்கள் பெந்தெகொஸ்தை பெற்றவர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் இவர்கள் அவரது வல்லமை மாறாதது என்று எங்குமுள்ள யாவர்க்கும் முழங்குகிறார்கள் இவர்களில் நானும் ஒருவன் என்று கூற இயன்றதால் நான் மகிழ்கிறேன் 47நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? ஆம் ஐயா, அவர்களில் ஒருவராக இருங்கள். அதுவே எல்லாம். மெம்ஃபிஸ் பட்டணத்தின் வழியாக நான் நடந்து சென்ற போது அந்த வயதான நீக்ரோ பெண்மணியைச் சந்தித்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த அம்மாள் தன் தலையை சாய்த்து வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து, 'காலை வணக்கம், போதகரே'' என்றாள். “நான் ஒரு போதகர் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று நான் கேட்டேன். 48அவள், 'கர்த்தர் என்னிடம், 'தெருவழியாக போதகர் வருகிறார், தலையில் அவர் பழுப்பு நிற தொப்பியை அணிந்து, ஒரு சூட்கேஸை கையில் வைத்துக் கொண்டு வருவார்' என்று கூறி யிருந்தார். நீங்கள் வருவதை நான் கண்டபோது, நீங்கள்தான் கர்த்தர் சொன்ன அந்த போதகர் என்று அறிந்து கொண்டேன்'' என்றாள். பாருங்கள்? அவளும் அப்படிப்பட்ட ஜனங்களுள் ஒருவள். ஓ தேவன் எவ்வளவாய் நல்லவராயிருக்கிறார். இப்பொழுது நான் ஒன்றை விசுவாசிக்கிறேன்... (சகோ. பிரன்ஹாம் அவரிடம் கொடுக்கப்பட்ட ஒரு குறிப்பை வாசிக்கிறார், ''பெட்ஃபோர்ட் என்று இடத்திலிருந்து வந்திருந்த அச்சிறு பெண்ணுக்கு நீங்கள் ஞாயிறு இரவு ஜெபித்தீர்கள். அவள் சற்று முன்பு இறந்துவிட்டதாக கருதப்படுகிறது. இவ்வாறு இருக்க முடியாது... தயவு செய்து ஜெபிக்கவும் - ஆசி) பெட்ஃபோர்ட்டில் இருந்து இங்கு வந்த ஒரு சிறு பெண்ணுக்கு கடந்த ஞாயிறு இரவு ஜெபித்தோமே, அவள் சற்று முன்பு மரித்து விட்டாள் என்று அவர்கள் கூறுகிறார்கள். நாம் ஜெபிப்போம். 49கர்த்தராகிய இயேசுவே, எப்படியாவது அந்த பிள்ளைக்காக நாங்கள் ஏறெடுக்கும் ஜெபம் ஏற்றுக் கொள்ளப்படட்டும். பிதாவாகிய தேவனே, உம்மிடத்தில் அச்சிறுமியை ஒப்படைக் கிறோம். அச்சிறு பெண்ணுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டு, இங்கிருந்து ஜெபித்துக் கொண்டு இருந்த அந்த மனிதர்களை நாங்கள் எண்ணிப்பார்க்கிறோம். பிதாவாகிய தேவனே, நாங்கள் கேள்விப்படுகிற இச்செய்தியின்படியே இருக்க வேண்டாம். பிதாவே, எங்களுக்கு தெரியாது, ஆனால் நீர் இரக்கமும், பெலனும் அளித்து, அதினால் அச்சிறுமி உயிரோ டெழுந்து தேவனுடைய மகிமைக்காக ஜீவிக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நாங்கள் கேட்கிறோம். ஆமென். கர்த்தராகிய இயேசு தாமே தன்னுடைய ஆசீர்வாதங்களை கூட்டித் தருவாராக. ஒவ்வொரு சபையின் பெயர், அதனுடைய சுபாவ குணாதிசயத்தோடு சம்பந்தமுள்ளதாகவே இருக்கிறது. சிமிர்னா என்றால் “கசப்பு” என்ற அர்த்தத்தை கவனித்தீர்களா? ஒவ்வொரு சபைக்கும் இருக்கும் பெயரானது, அந்தந்த சபைக்கு உள்ள சுபாவத்தையும் குணாதிசயத்தையும் பற்றிய அர்த்தத்தோடு இருக்கிறது. நான் ஒன்றை இங்கே கூற முடியும். ஆனால் நீங்கள் என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதபடி நான் அதைச் சொல்லாமலிருந்தால் நல்லது. பாருங்கள்? 50உங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர்கள் கூட அவ்வாறே உள்ளது? நீங்கள் அதைப் பற்றி அறியாமலிருக்கலாம். ஆனால் அது அப்படித்தான். “அது எண்கணித அடிப்படையில் ஆனது'' என்று நீங்கள் கூறலாம். இல்லை, அப்படியல்ல. யாக்கோபு பிறக்கையில், ”ஏமாற்றுகிறவன்'' என்று அர்த்தமுள்ள யாக்கோபு என்ற பெயர் அவனுக்கு வைக்கப்பட்டது. ஆனால் அவன் தேவனுடைய தூதனானவரோடு போராடுகையில், தேவன் அவன் பெயரை “இஸ்ரவேல்'' என்று மாற்றினார். ''அதிபதி'' என்பது அதன் அர்த்தம். அது சரிதானே? சவுல் 'தர்சு பட்டணத்து சவுல்'' என்றழைக்கப்பட்டான். அவன் ஒரு அற்பமானவன். ஆனால் அவன் இயேசுவிடம் வந்தபொழுது, ”பவுல்'' என்றழைக் கப்பட்டான். சீமோனின் பெயர் ''சீமோன்'' என்றிருக்கையில், அவன் இயேசுவிடம் வந்தபோது, ''ஒரு சிறிய கல்'' என்று அர்த்தம் உள்ள ''பேதுரு'' என்று பெயரிடப்பட்டான். நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அவற்றோடு உங்கள் பெயருக்கும் சம்பந்தமுண்டு. உங்களுடைய குணாதிசயத்தின் பிரதிபலிப்பாக அது இருக்கிறது. 51இந்த சபைக்காலமானது சிமிர்னா என்றழைக்கப்பட்டது. ஏனெனில் அது மரித்துக் கொண்டிருந்தது. சிமிர்னா என்றால், “கசப்பு'' என்று அர்த்தமாம். அதாவது, ஒரு கசப்பான வேர் முளைத்தெழும்பி, அதை எழும்பவிடாமல் அமுக்கி கொண் டிருந்தது. அது தானே வெள்ளைப் போளத்தைப் போல் உள்ள நிலைமைக்கு நேராக போய்க் கொண்டிருந்தது. வெள்ளைப் போளத்தைக் கொண்டு மரித்த சரீரங்களை சுகந்தவர்க்கமிட்டு, அபிஷேகிப்பார்கள். மரித்தவர்களை, பரிமளதைலம் தயாரித்து அவர்களை சுகந்தவர்க்கமிட, வெள்ளைப்போளம் உபயோகிக்கப் படுகிறது. ஆகவே வெள்ளைப்போளம் என்றால் மரணத்தோடு சம்மந்தமுள்ளது என்று அறிந்து கொள்ள வேண்டும். சபையானது மரித்துக் கொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஜீவனோடிருந்த அந்த பெந்தெகொஸ்தே அசைவானது இப்பொழுது மரித்துப் போய், அதற்கு வெள்ளைப் போளத்தால் சுகந்த வர்க்கமிடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதை உங்களால் இன்று காண முடிய வில்லையா, நண்பர்களே? பாருங்கள்? மரணத்திற்கு அடையாள மாயிருக்கும் அதே பரிமளதைலம் இங்கே இந்த சபையிலும் இருந்தது, அது தொடர்ந்து அடுத்து வந்த சபைக்கும் உண்டா யிருந்தது. அவர்கள் பரிசுத்தவான்களுக்குரிய வெண்வஸ்திரத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் குருக்களாட்சியின் அழுக்கான கந்தையை போர்த்துக் கொண்டதினால், மரணத்திற்கு அடையாள மாயிருக்கிற வெள்ளைப் போளத்தால் அவர்கள் பூசப்பட்டுள்ளனர். மெய்யான பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்து, அந்நிய பாஷைகளில் பேசி, அக்காலத்தில் வாழ்ந்த அந்த சிறு மந்தையோவெனில், தங்கள் ஜீவியங்களில் தேவனை பிரத்தியட்ச மாக்கிக் காண்பித்தனர். அவர்கள் மிகவும் உத்தமாயிருந்தார்கள். அவர்கள் முழுக்க முழுக்க உண்மையாகவே, எங்கும் நம்பக்தகுந்தவர்களாய் இருந்தார்கள். ஆனால் இன்றோ , எதை நம்புவது, யாரை நம்புவது என்பது உங்களுக்கு தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறீர்கள். பாருங்கள்? அந்த அளவுக்கு ஏதோ நடந்து விட்டது. அது என்ன? அவர்களுக்கு கசப்பான வெள்ளைப் போளம் பூசப்பட்டுள்ளது. ஒரு காரியம் எழும்பி வருகிறது... 52அதற்கு என்ன காரணம்? நாம் வாழும் இக்காலத்தில் ஒரு பிரிவார் எழும்பி, முதலில் சபையை ஜெனரல் கவுன்சில் என்று அழைத்தார்கள். பின்னால் அதையே அசெம்பிளீஸ் ஆஃப் காட் (தேவ சங்கம்) என்று அழைத்தார்கள். அந்த அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபையிலிருந்து தான் தேவசபை என்னப்பட்ட சர்ச் ஆஃப் காட் ஸ்தாபனம் பிறந்தது. சர்ச் ஆஃப் காட் சபையிலிருந்து கொண்டே வெளியே பார்த்து, 'நீங்கள் அசெம்ப்ளீஸ் ஆஃப் காட்'' என்று மட்டமாகப் பேசினார்கள். இவர்கள் அவர்களைப் பார்த்து, ''நீங்கள் சர்ச் ஆஃப் காட்'' என்றார்கள். அதிலிருந்து ''யுனைடெட் பெந்தெகொஸ்தே சர்ச் ஆஃப்காட்'' என்ற பெயர்கொண்ட சபை யானது, ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சனையின் பேரில் வெளியேறி ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு, முதலாவதாக நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில், அவர்கள் வெளிச்சத்தை ஏற்றுக்கொண்டு, அதில் நடப்பதற்குப் பதிலாக, ஒளியை முற்றிலும் புறக்கணிக்கக்கூடிய அளவுக்கு தங்களை ஸ்தாபனமாக ஆக்கிக் கொண்டுவிட்டார்கள். “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ் நானம்'' பெறுவது சரியல்ல, அதற்குப் பதிலாக ”கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே'' ஞானஸ்நானம் பெறுவது தான் சத்தியம் என்று அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபைக்கு சத்திய மானது உரைக்கப்பட்டபோது, அவர்கள் ஏற்கனவே தங்களை பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஞானஸ்நான உபதேசத்தில் நங்கூரமிட்டுக் கொண்டுவிட்டபடியினாலே, அதை மாற்றிக் கொள்ள அவர்களால் இயலவில்லை. அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பது தான் சத்தியமென்று நன்கு தெரியும். வேதத்தின்படி அது சரியல்ல என்பதை அவர்கள் எவராவது காண்பிக்கட்டும் என்று நான் அவர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். அதுவோ முழுவதுமாக சத்தியமாய் இருக்கிறது. ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், அதை ஏற்றுக்கொண்டால், அவர்களுடைய மதக்கோட்பாட்டை அவர்கள் தகர்த்தெறிந்துவிட வேண்டியது வந்துவிடும். ஆகவே அவர்களால் இயலாது. 53பின்பு, ஒருத்துவக் கொள்கைக்காரர் என்ன செய்தார்கள்? சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, முன்னேறிச் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் ரொம்பவும் வெளியாசாரமுள்ளவர்களாக ஆகி, “தேவன் என்றென்றும் துதிக்கப்படுவாராக! எங்களிடம் வெளிச்சம் உள்ளது. உங்களிடம் வெளிச்சம் இல்லை. நாங்கள் தான்...'' என்று கூறினார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டார்கள். தேவனை நீங்கள் ஸ்தாபனமாக ஆக்க முடியாது. தேவனுக்கு உருவ அமைப்பு கிடையாது என்று வேதம் கூறுகிறது. தேவனைக் குறித்த ஒரு புறம்பான அமைப்பு ஒன்றும் இல்லை . பின்பு, அசெம்ப்ளீ ஸ் ஆஃப் காட் சபையார், தேவனை ஸ்தாபனமாக ஆக்க முயன்று, தங்களையே எல்லாவற்றுக்குள்ளும் சிறந்த சபையென்று பறைசாற்றிக் கொள்ள முயன்றனர். அதன் பிறகு, ஒருத்துவக் கொள்கைக்காரர் ஸ்தாபனம் உண்டாக்க முயன்று, “தங்களுக்கு கூடுதல் வெளிச்சம் உள்ளது'' என்று கூறினர். இப்படியாக அவர்கள் என்ன செய்துவிட்டார்கள்? அவர்கள் தங்களுடைய சொந்த சுயநலமான, கசப்பான வழியில் சென்று, தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டனர். சாரமேற்றிட உப்பையும், மகிழ்விக்க இனிப்பையும் வழங்குவதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் விரோதங்கொண்டு, ஐக்கியத்தை குலைத்துக் கொண்டனர். அதுதான் நடந்தது. இவ்விதமான காரியம் வேகமாக நடந்தது. அதன்பிறகு இன்னொரு குழுவினர் பிரிந்து வெளியே வந்து, அவர்கள் இன்னொரு சபையை ஸ்தாபிதம் செய்தனர். ஒரு பிரிவார், ''அவர் வெள்ளைக் குதிரையின் மேல் வருகிறார்'' என்றார்கள். இன்னொரு பிரிவினர், 'அவர் வெண் மேகத்தின் மேல்தான் திரும்ப வருகிறார். தேவனுக்கு ஸ்தோத்திரம். நான் இந்த உபதேசத்தின் மேல் ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பிப்பேன்'' என்றார்கள். எந்தவிதமாக அவர்கள் செயல்பட்டார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் கசப்பை பரவச் செய்தனர். சகோதர சிநேகத்திற்கு கதவை அடைத்துக் கொள்ளுதல் நடைபெற்றது. 54இன்றிரவில், அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபையைச் சேர்ந்த வர்களில் அநேக ஆண்களும், பெண்களும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள முன் வர விரும் புவர். ஏனெனில் அதுவே தேவனுடைய சத்தியம் என்று அவர்கள் அறிவர். ஆனால் அப்படி செய்தால், தங்கள் சபையைவிட்டு அவர்கள் வெளியே தள்ளப்படுவார்கள். அநேக ஒருத்துவக்காரர்கள் ... நான் ஒருத்துவக் காரன் அல்ல. ஒருத்துவக்காரர் கூறுகிற விதமான “இயேசு'' வில் நான் விசுவாசம் கொள்ளவில்லை, ஏனெனில் ”இயேசு'' என்னப் பட்டவர்கள் அநேகர் இருந்தார்கள். நானோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டுள்ளேன். அதுதான் சரி. அவர்கள் விசுவாசிக்கிற வண்ணமாக நான் விசுவாசிக்கிறதில்லை. அதிலிருந்து மாறுபட்டது எனது விசுவாசம். அவர்கள் மறு பிறப்பையடைவதற்காக இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். “ஞானஸ்நானம் பெறுவதால் அது மறுபிறப்பை உங்களுக்குள் கொண்டு வந்து, உங்கள் தண்ணீர் ஞானஸ்நானத் தினால், கிறிஸ்துவை உள்ளே கொண்டு வருகிறது'' என்று அவர்கள் நம்புகிறார்கள். நான் அவ்வாறு விசுவாசிக்கவில்லை. மறுபிறப்பானது, பரிசுத்த ஆவியினாலே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் கொண்டு, கிடைக்கிறது. அது தான் சரி. தண்ணீர் ஞானஸ்நானமானது, ஏற்கனவே உள்ளே நடைபெற்றுள்ள மறு பிறப்புக்கான கிரியைப்பற்றி புறம்பே நிகழ்த்தப்படுகிற ஒரு செயல் தான். ஆகவே, நான் அதை ஒத்துக் கொள்கிறதில்லை. இதெல்லாம் இப்படி இருந்தாலும், அவர்களும் என்னுடைய சகோதரர்கள் தான். 55நான் முதலில் பாப்டிஸ்ட் ஊழியக்காரனாக ஊழியத்தைத் துவங்கிய போது, இரு சாராருமே என்னிடம் வந்து, ''சகோ. பிரன்ஹாம் அவர்களே, எங்களிடம் வாருங்கள். எங்களிடம் அந்த அனுபவம் உள்ளது, நாங்கள் தான் இதைத் தொடர்ந்து கொண்டு வந்தோம்“ என்றார்கள். 'நான் உங்களிருவரில் எவரையும் சேர்ந்தவனல்ல. உங்கள் இருவருக்கும் நடுவில் நான் இருக்கிறேன். நாம் சகோதரர்கள். எந்த ஒரு மனிதனாவது என்னுடன் முரண்பட்டால் அதைப் பற்றி நான் அக்கறைப்படவில்லை. அது எந்தவித ஒரு சிறு துளி வேறு பாட்டையும் உண்டாக்கிவிடாது. தொடர்ந்து அவர் என்னுடைய சகோதரனாகவே இருப்பார்'' என்று நான் அவர்களுக்கு கூறினேன். ஆப்பிளும் இறைச்சியும் சேர்த்து ரொட்டி அடுப்பில் சமைக்கப்பட்ட ''ஆப்பிள் பை'' சாப்பிட விரும்பும் ஒரு சகோதரன் இருந்தால் அவர் தன் விருப்பப்படியே அதை சாப் பிடட்டும். எனக்கு 'செர்ரி பை' (செர்ரி பழமும், இறைச்சியும் சேர்த்து ரொட்டி அடுப்பில் சமைக்கப்பட்ட ஒரு வகை உணவு - மொழி பெயர்ப்பாளர்) நன்கு பிடிக்கும். எனவே நான் அதையே சாப்பிடுவேன். இதற்காக என் சகோதரனுடன் உள்ள ஐக்கியத்தை நான் குலைக்கப் போவதில்லை. நான் செர்ரி பை-யின் மேல் நன்கு அடிக்கப்பட்ட ஒரு வகை க்ரீமை தடவிக் கொள்ள விரும்புவேன். நான் அதைச் சாப்பிடுவதற்கு இப்போழுது எனக்கு வயதில்லை. ஆனால் எனக்கு அது விருப்பமானது. என் சகோதரனுக்கு அது விருப்பமில்லையெனில், அவர் அதை சாப்பிட வேண்டியதில்லை. நான் எனக்கு விருப்பமானதைச் சாப்பிட்டுக் கொள்வேன். ஆனால் அவர் இன்னும் என் சகோதரன் தான். 56ஆகவே, அதைப்போல, நான் ஐக்கியத்தை விரும்புகிறேன். ஆனால் நமக்கிடையே பிரிவினைகளை உண்டாக்கிக் கொண்டு, “இல்லை, இது எங்களுடைய ஸ்தாபனம்” என்று கூறிக்கொண்டு, அடுத்த மனிதனிடம் கையை நீட்டி அவரோடு கைகுலுக்கிக் கொண்டு, ''தேவனுக்கு ஸ்தோத்திரம், சகோதரனே'' என்று சொல்லாவிட்டால், சிமிர்னாக்காரர்கள் அன்றைக்குக் கொண்டிருந் தைப் போல் கசப்பான வெள்ளைப் போளத்தையுடையவர்களாக ஆகிவிடுவார்கள். ஆனால் ஐக்கியத்தைக் கொண்டிருக்க வேண்டும். சிமிர்னா சபையாருக்கு கசப்பு என்று பெயர் கொடுக் கப்பட்டிருந்தது. அதே போல் இன்றைக்கும் இருக்கிறது. 57நிக்கொலாய் மதஸ்தர், இருண்ட காலம் வரையிலும் அவர்களை எழும்பவிடாமல் அழுத்திக் கொண்டே இருந்தனர். லூத்தரின் காலத்தில், கிருபை என்ற முதல் அடியைக் கொண்டு அதை விட்டு வெளியே வந்தார்கள். அப்பொழுது ஒரு சிறு அளவுக்கு ஒளியானது பிரகாசிக்கத் தொடங்கியது. அதன்பிறகு, ஜான் வெஸ்லி பரிசுத்தமாகுதல் என்ற அடுத்த அடியை வெளியே எடுத்து வைக்க வந்தார். அப்பொழுது ஒளியானது இன்னும் கூடுதலாக பிரகாசித்தது. அதன்பிறகு, பெந்தெகொஸ்தேயின் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் வந்தது. அதனால், பிதாக் களுடைய விசுவாசம் திரும்பக் கொண்டு வருவதற்கு வழி கோலியது. ஆனால் அவர்களால், அதை அதேவிதமாக நீடித்து வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. இவர்களும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, மீண்டும் நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்வார்கள் என்று வேதம் கூறியதற்கேற்ப சரியாக அவ்வாறே நடந்தது. அதிக நேரம் இது வரையிலும் ஆகிவிட்டது. நாம் இப் பொழுது வசனத்திற்குப் போவோம். இதில் உபத்திரவத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது. உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரிய முள்ளவனாயிருந்தும், உனக்கிருக்கிற தரித்திரத்தையும்... (இங்கே அவர் நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை வெறுக்கும் உண்மையான சபையிடம் பேசுகிறார், மற்ற கூட்டத்திடம் அல்ல)... தங்களை யூதரென்று சொல்லியும் யூதரா யிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன். வெளி.2:9. 58அவர்கள் முறையிட்டார்கள். அவர்கள் வறுமையில் வாடினர். அவர்களுக்கு இருந்தவைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன. அவர்கள் இது போன்ற ஒரு சிறிய சபையைக் கட்டி எழுப்பியிருந்தனர். அவர்கள் சிறு கூட்டமாக இருந்தபடியால், பெருங்கூட்டமாக இருந்த மற்ற சபை அவர்களை வெளியே தள்ளி, அவர்களை ஒடுக்கியது. “நீங்கள் அந்த மூலையிலும், ஒதுங்கிய தெருக்களிலும், மற்றும் உங்களுக்கு கிடைத்த இடங்களிலும் ஆராதிக்க கூடிவரு கிறீர்கள் என்பதை நான் அறிவேன்'' என்று தேவன் கூறினார். நான் 'காட்டகோம்' எனப்படும் இடத்திற்கு சென்றிருக்கிறேன். (Catacomb என்றால், பூமிக்கடியில் இருக்கும் அடக்க ஸ்தல மாகும். இது ரோமாபுரியில் அப்பியு சாலை என்ற நெடுஞ் சாலையில் 2 மற்றும் 3ஆவது மைல்கற்களுக்கு நடுவில் அமைந்துள்ளது - மொழி பெயர்ப்பாளர்). அங்குள்ள பூமிக்கடியிலான கல்லறைத் தோட்டத்திற்குள் போய் தான் அவர்கள் கூடி ஆராதித்தனர். வேறு இடம் அவர்களுக்கு இல்லை. ”உனக்கு இருக்கிற உபத்திரவத்தையும், உனக்கு உண்டாயிருக்கிற தொல்லைகளையும் அறிந்திருக்கிறேன். ஆனால் உனக்கு ஏற்பட்டுள்ள உபத்திரவங்களே உன்னை ஐசுவரியவானாக்கியிருக்கிறது'' என்று தேவன் கூறுகிறார். ஓ, என்னே ! சபையின்மேல் உபத்திரவமானது வரும்போது, அது சபையை பெலப்படுத்துகிறது. உபத்தி வரங்களில் அகப்படும் சபையானது அதினால் அப்பொழுதும் பெலப்படவே செய்கிறது. ''உனக்கிருக்கிற உபத்திரவத்தை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் நீ ஐசுவரியவானாயிருக்கிறாய்'' என்கிறார். ஏனெனில், 'நீ விடாமல் என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறாய், நீ ஐசுவரியவானாயிருக்கிறாய், உபத்திரவங்கள் உன்னை ஒன்றிலும் சேதப்படுத்தவில்லை'' என்று கூறுகிறார். 59இங்கே பார்க்கையில், நிக்கொலாய் மதத்தினருக்கு இப்பொழுது ஒரு ஜெப ஆலயம் கிடைத்திருக்கிறது. வேதம் அவ்வாறு கூறுகிறது. அதை நீங்கள் 9ம் வசனத்தில் பார்த்தீர்களா? “இராமல், சாத்தானுடைய கூட்டமாயிருக்கிற...'' (இவ்வசனம் தமிழ் வேதாகமத்தில், 'சாத்தானுடைய கூட்டம்' என்று குறிப் பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில வேதாகமத்தில் 'சாத்தானு டைய ஜெப ஆலயம்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்) 60உ, ஊ, உண்மையான சபையானது புறம்பாக்கப்பட்டது. நிக்கொலாய் மதஸ்தர் இப்பொழுது சபையை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு விட்டனர். பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்த அந்த மக்களை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டனர். அவர்கள் இவர்களுக்கு உபயோகமில்லாதவர்களாக ஆகிவிட்டது. ஆசிய மைனரிலுள்ள சிமிர்னாவானது, இரத்த சாட்சிகளுக்கு உரிய ஜீவ கிரீடமானது தங்களுக்கென காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அறிந்திருந்தால், அது அவர்களை அசைத்திருக்கும். பாருங்கள்? அதாவது, இந்த தீர்க்கதரிசனமானது எழுதப்பட்டு, இந்த சபைக்கு அனுப்பப்பட்டு, இந்த சபை அதைப் பற்றிக் கொண்டு, இத்தீர்க்கதரிசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, இரத்த சாட்சிகள் அணியும் கிரீடம் பெறப்போவது தாங்கள் தான் என்று அறிந்தபோது, அது அவர்களை மரணத்திற்கேதுவாக அச்சுறுத் தினது. அவர்கள் அதை எந்த வேளையிலும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது அவர்களுடைய காலத்தில் வரவில்லை. அவர்களில் யாராவது சிலர், “அந்த தீர்க்கதரிசியாகிய யோவான் தவறாக இருந்திருக்கிறான், ஏனெனில் அவன் உரைத் தவைகள் ஒன்றும், நமக்கு சிமிர்னாவில் நிறைவேறவேயில்லை'' என்று கூறியிருக்கக்கூடும். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்துத்தான் அது நிறைவேற வேண்டும். பாருங்கள்? தேவன் உரைத்தவை எவையும் நிறைவேறியே தீரும். 61நாம் நம்முடைய விசுவாசத்தை தேவனுடைய வார்த் தையின் பேரில் தான் அஸ்திபாரமிடுகிறோம். தேவன் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் தவறாமல் நிறைவேற்றுகிறார். என்ன வானாலும் சரி... ஒரு குறிப்பிட்ட வாக்குத்தத்தம் நிறைவேற வேண்டிய வேளை இதுவே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது சம்பவிப்பதற்குரிய தேவனுடைய வேளை அதுவாக இல்லா மலிருக்கக் கூடும். 'அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்''. தேவன் எப்பொழுதும் தன்னுடைய வசனத்தை கனம் பண்ணி, அதற்குரிய வேளையில் அது பலனளித்தக்கதாக செய்வார். இரத்த சாட்சிகளாக மரிக்க வேண்டியவர்கள் என்று சொல் லப்பட்டவர்கள் இந்த சபையினர் தான். அவர்கள் காலத்துக் குரிய சுபாவம் அல்லது இயல்பு சிமிர்னா சபையின் காலத்தில் வெளிப்பட்டது. அவர்கள் இரத்த சாட்சிகளுக்குரிய கிரீடத்தை அணிய வேண்டியவர்கள். எனவே அவர்களில் அநேகர் கொல் லப்பட்டனர். 10ம் வசனத்தை இப்பொழுது எடுத்துக் கொள்வோம். “நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; (சாத்தானின் கூட்டம்) இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட் டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்' வெளி.2:10) 62ஓ, என்னே! தங்களுடைய நம்பிக்கைக்காக அவர்கள் மரிக்க வேண்டியிருந்த பொழுது, அவர்கள் அஞ்ச வேண்டாம் என்று அவர்களுக்கு கூறப்பட்டது. இப்பொழுது சகோதரி உட் அவர்களே, நீங்கள் எங்கிருந்தாலும், நான் இப்பொழுது கூறுவது உங்களுக்கு உதவியாயிருக்கும் என்று நம்புகிறேன். அன்றொரு நாளில், சகோதரி உட் அவர்கள், சிலர் மட்டும் விடுவிக்கப்பட் டிருக்க, ஏன் வேறு சிலர் மட்டும் விடுவிக்கப்படாமல், ஒப்புக் கொடுக்கப்பட்டனர், என்பது புரியாத புதிராக தனக்கு இருக் கிறதாக கூறினார்கள். சில வேளைகளில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்... இந்த மக்களிடம் தேவன், “நீங்கள் அஞ்ச வேண் டாம், சாத்தான் உங்களை அதற்குள் தள்ளிவிடுவான், ஏனெனில் இந்த நிக்கொலாய் மதஸ்தர் அனைத்து ஆயத்தங்களுடன், முஸ் தீபுகளுடன் வந்திருக்கிறதால், உங்களை உபத்திரவத்திறகுள் தள்ளி விடுவார்கள், என்னுடைய காரியமாக நீங்கள் மரிக்க நான் உங்களை விட்டு விடுவேன். ஆனால் நான் உங்களுக்கு ஜீவ கிரீடத்தை தருவேன்'' என்று கூறினார். வெளி.2:10ம் வசனத்தை நான் மீண்டும் வாசிக்கிறேன். நீங்கள் அதைக் கவனியுங்கள். “நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரண பரியந்தம்... (மரணம் வருகிற வேளை வரைக்கிலும் என்று அல்ல, மரணம் முடிய என்பதை பார்த்தீர்களா?)... உண்மையாயிரு. (அவர்கள் அவ்வாறே அது முடிய உண்மையாயிருந்தார்கள்.) அவர் யாரை 'சாத்தானுடைய ஜெப ஆலயத்துக்காரர்கள்'' என்று அழைத்தார்? (தமிழ் வேதாகமத்தில் இந்த வசனம் “சாத்தானுடைய கூட்டம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில வேதாகமத்தில் சாத்தானுடைய ஜெப ஆலயத்தைச் சேர்ந்தவர்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது - மொழி பெயர்ப் பாளர்). நிக்கொலாய் மதஸ்தினரைத் தான் தேவன் அவ்வாறு அழைக்கிறார். அதை நாம் அறிவோம். அது அப்படித்தானே உள்ளது? இந்த நிக்கொலாய் மதஸ்தர், அங்கே ஒரு ஸ்தாபனமாக இருந்தார்கள். அதில் குருக்களாட்சி ஏற்பட்டு அது எழும்பி, இந்த மக்களை துன்புறுத்தவும் செய்தபொழுது, இவர்கள் மரணம் ஏற்படுகிற வரைக்கிலும் சுவிசேஷத்திற்கு உண்மையாயிருக்க வேண்டுமென்று கூறப்பட்டனர். திருமண விழாவில் மணமக்களை வாக்குக் கேட்கையில், ”மரணத்திற்கு முன்னால் வரையிலும்'' என்று கேட்பதில்லை, ''மரணத்தில் நாம் பிரிகிறவரையிலும்'' என்று தான் கேட்கப்படுகிறது. ''மரணம் நேரிடுகிறதற்கு முன்னால் வரையிலும், என்பதற்கும், 'மரணத்திலும்'' என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. மரணத்திலும் அவர்கள் கிறிஸ்துவுக்கு உண்மையாயிருக்க வேண்டியதாயிருந்தது. “அதனுடன் நீங்கள் மரணத்திற்குள் செல்லுங்கள். அஞ்ச வேண்டாம். ஏனெனில் நான் உங்களுக்கு ஜீவ கிரீடத்தைத் தருவேன்'' என்று வாக் குரைத்திருக்கிறார். 63இப்பொழுது, இங்கே “பத்து நாட்களைப்' பற்றி கூறப் படுகிறது, வேதத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடத்தைக் குறிக்கும். பத்து நாட்கள்'' என்று வேதம் கூறியது, ”பத்து ஆண்டுகள்'' ஆகும். அதாவது ரோமச் சக்கரவர்த்தியாகிய “டயக்ளீஷன்'' என்பவனின் முடியாட்சிக் காலத்தின் இறுதிப் பத்தாண்டுக்கால ஆட்சியாகும். சிமிர்னா சபைக் காலத்தின் இறுதிக் கட்டத்தில், பெரிய சக்கரவர்த்தியாக இம்மன்னன் அரசாண்டான். எபேசு சபைக்காலம் முதல் சிமிர்னா சபைக்காலம் முடிய உள்ள காலங்களில் பல மன்னர்கள் அரசாண்டார்கள். அவர்களில் நீரோ என்பவன் ஒருவன் என்று நினைக்கிறேன். இந்த டயக்னீஷயன் என்பவன் சபையின் உத்திரவ காலத்தின் இறுதிக் கட்டத்தில் அரசாண்ட கடைசி மன்னன் ஆவான். இவனது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பத்தாண்டுக்கால ஆட்சியின்போது தான், இவன் எல்லோரையும் மிஞ்சுகிற அளவுக்கு பயங்கரமான, இரத்த வெறிபிடித்த உபத்திரவம் கொடுத்தவனாக இருந்து வந்தான். அவன் இந்த நிக்கொலாய் மதஸ்தர் குழுவினரின் சார்பில் இருந்தான். அவர்கள் கிறிஸ்தவர்களைக் கொன்றனர், எரித்துப் போட்டனர்; மற்றும் இன்னும் எத்தனையோ கொடுமைகளும், இரத்த ஆறு ஓடுமளவுக்கு 10 ஆண்டுக்கால உபத்திரவமும் உண்டாயிருந்தது. அவனது இந்த கொடுமைவாய்ந்த அரசாட்சி கி.பி.301 முதல் 312 முடிய நீடித்தது. அத்தோடு சிமிர்னா சபைக் காலமும் முடிவுக்கு வந்தது. கி.பி.312ல் கான்ஸ்ட ன்டைனின் ஆட்சி மலர்ந்தது. கான்ஸ்ட ன்டைன் கி.பி.312ல் ஆட்சிக்கு வந்தான். ஆக கி.பி.302 முதல் கி.பி.312 முடிய உள்ள அந்தப் பத்தாண்டுக்கால உத்திரவம்தான், ”பத்து நாட்கள் உபத்திரவப் படுவீர்கள்'' என்று சொல்லப்பட்டதன் பொருளாகும். நீரோ மன்னன் கி.பி.64ல் ஆட்சிக்கட்டில் ஏறிய பொழுது கிறிஸ்தவ சபைக்கு உபத்திரவமம் ஆரம்பித்தது, கி.பி.312ல் டயக்ளிஷயனின் ஆட்சி முடிவடைந்ததோடு, உபத்திரவம் முடிவடைந்தது. 11ம் வசனம் ஒரு வாக்குத்தத்தத்தைக் கொண்டதாக இருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு நாம் முடிப்போம். “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத் தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.” வெளி.2:11 64இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டியனாக இருக்கிறேன். நான் இருதயத்தில் சரியென்று காண்கிறதை உங்களிடம் சொல்லாமல் மறைத்தால் நான் ஒரு மாய்மாலக் காரனாக இருப்பேன். பாருங்கள்? இந்த வேத வாக்கியத்தில் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அது என்ன என்று நான் கண்டுகொள்ளுகிற வரையிலும், வெகு காலமாக அது எனக்கு புரியாத மிகப் பெரிய புதிர்களில் ஒன்றாக இருந்தது. இப்பொழுது நாம் இந்த வசனத்தை மிகவும் கவனமாக வாசிப்போம். “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.... (காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றால், ஆவியானவர் சொல்வதைக் கேட்க காதுகள் திறந்திருக்க வேண்டும். ஒவ்வொரு சபையிலும் காணப்பட்ட அதே காரியங்கள், உபத்திரவங்கள் யாவும், மற்றும் ஒவ்வொரு காரியமும், அனைத்து சபைகளிலுமே காணப்பட்டது. எனவே தான் ஒவ்வொரு சபைக்கு என்று சொல்லப்பட் டிருப்பதிலும் சபைகளுக்கு என்றும் சொல்லப்பட்டிருக்கிற படியால், அது எபேசுவுக்கு சொல்லப்பட்டது. எபேசுவுக்கு மட்டும் உரியதல்ல, சிமிர்னாவுக்கு சொல்லப்பட்டவை, சிமிர்னாவுக்கு மட்டும் உரியதல்ல, ஒவ்வொரு சபைக்கும் சொல்லப்பட்டது அனைத்து சபைக்காலங்களுக்குமே பொருந்தும் என்பதைக் கவனியுங்கள்)... ஜெயங்கொள்ளு கிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என் றெழுது. (எந்த சபைக்காலத்தில் ஜெயங்கொள்கிறவன்? எபேசுவின் காலத்தில் ஜெயங்கொள்கிறவனுக்கா? அல்லது சிமிர்னாவின் காலத்தில் ஜெயங்கொள்கிறவனுக்கு மட்டு மா? எல்லா சபைக் காலங்களிலுமே ஜெயங்கொள்ளு கிறவனை இரண்டாம் மரணம் சேதப்படுத்துவதில்லை. 65லவோதிக்கேயா சபையின் காலத்தில் ஜெயங்கொள்ள வேண்டியவன் எதன் மேல் ஜெயங்கொள்ள வேண்டும்? நிக்கொலாய் மதஸ்தரையும், உலகத்தின் காரியங்களையும், இந்த ஸ்தாபனங்களையும், இந்த குருக்களாட்சி முறைகளையும், அகற்றி விட்டு, அதன்மேல் ஜெயங்கொண்டு கிறிஸ்துவை நேசிக்க வேண்டும். அப்படிச் செய்தால், இரண்டாம் மரணம் உங்களைச் சேதப்படுத்துவதில்லை. ஏன்? அவரிடம் நித்திய ஜீவன் இருக்கிறது. நித்திய ஜீவன் மரிக்க முடியாது. “எனக்கு செவி கொடுப்பவன் மரியாமல் நித்திய ஜீவனை உடையவனாயிருப்பான்; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்''. 66இப்பொழுது நான் ஒன்றைச் சொல்லப் போகிறேன். நீங்கள் நான் சொல்லப் போகிற விஷயத்தை ஒத்துக் கொள்வதில்லை. ஆனால் அதின் பேரில் உங்கள் இறுதியான தீர்மானத்திற்கு நீங்கள் வரும் முன்னர், அதைப்பற்றி நீங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டுமென விரும்புகிறேன். நரகம் நித்தியமானது என்பதை நான் விசுவாசிக்கவில்லை. நித்தியமானதொரு நரகம் இருக்கவே முடியாது. ஏனெனில், நித்தியமான நரகம் என்று இருக்குமானால், அப்பொழுது, அந்நரகமானது முடிவே இல்லாதபடி நித்தியமாக இருக்கும் என்று ஆகிவிடும். எப்படியெனில், ஒரெயொரு வகையான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு. அதை அடையவே நாம் பாடு படுகிறோம். நீங்கள் நித்திய காலமாக நரகத்தில் எரிந்து கொண்டிருப்பீர்களானால், அப்பொழுது நித்திய ஜீவனோடு அக்கினியில் வேகுதல் உங்களுக்கு உண்டாயிருக்கும். அப்படி யாயின் தேவன் நித்தியரானபடியினால், ஒரேயொரு வகை நித்திய ஜீவன்தான் உண்டு என்பதாலும், தேவனும் நித்தியமாக வெந்து கொண்டிருப்பார் என்று ஆகிவிடுமே. எனவே, நித்தியமான நரகம் என்று ஒன்று இருக்க முடியாது. எப்படியெனில், “பாதாளம் உண்டாக்கப்பட்டது'' என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி 'சிருஷ்டிக்கப்பட்டது' என்றால், அப்பொழுது அது நித்தியமானது அல்ல. நித்தியமானது எதுவும் சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றல்ல. அது எப்பொழுதுமே இருந்து வருகிறது. அது நித்திய மானதாக இருக்கிறது. ”பிசாசுக்கும் அவனுடைய தூதர்களுக் காகவும் நரகம் உண்டாக்கப்பட்டது'' என்று வேதம் உரைக்கிறது. நரகபாதாள மானது உண்டாக்கப்பட்ட ஒன்று. எனவே அது நித்தியமானதல்ல. ஒரு மனிதன் நித்தியமாக ஆக்கினைக்குட் படுத்தப்படுவான் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. 67''ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை'' என்று இங்கே வேதமானது தெளிவாகக் கூறுகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். ''மரணம்'' என்ற வார்த்தை “பிரிவு'' என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. நாம் பாவத்தினால் தேவனை விட்டு பிரிக்கப்படும் பொழுது, நாம் ஏற்கனவே மரித்தவர்களாயிருக்கிறோம். வேதம் அவ்வாறு கூறுகிறது. நாம் தேவனைவிட்டு பிரிக்கப்படுகிறோம், நாம் அறுப்புண்டு போகிறோம்; நாம் பாவத்திலும், அக்கிரமங்களிலும் மரித்தவர்களாயிருக்கிறோம். அதினால் தேவனுக்கும் அவருடைய காணி யாட்சிக்கும் அந்நியராகிவிடுகிறோம். நாம் தேவனை ஏற்றுக் கொள்ளும் பொழுது நித்திய ஜீவனைப்பெற்று, அவருடைய பிள்ளைகளாகவும், அவருடைய பாகமாகவும் ஆகிறோம். என்னுடைய இளைய மகன் ஜோசப், என்ன செய்திட்ட போதிலும், அவன் என்னில் ஒரு பாகமாக இருக்கிறான். நான் ஒரு பெரிய ஐசுவரியவானாயிருந்து, ஏராளம் ஆஸ்தி இருக்கிறது என்று இருக்குமானால், அவன் அவைகளை சுதந்தரித்துக் கொள்ளாது போய்விட்டாலும், அவன் என்னில் ஒரு பாகமாக இருக்கிறான். அவன் என்னுடைய மகனாகவே இருந்து வருகிறான். நிச்சயமாக அவன் என்னுடைய பாகமாக இருக்கிறான். நான் என்னையே எப்படி மறுதலிக்க முடியாதோ, அதே அளவுக்கு அவனையும் நான் மறுதலிக்க முடியாது. ஏனெனில் அவன் என்னுடைய பாகமா யிருக்கிறான். அவனில் நடத்தப்படும் இரத்தப் பரிசோதனை அவன் என் மைந்தன் தான் என்பதைக் காட்டிவிடும். 68அந்த இரத்தப் பரிசோதனை, நீங்கள் தேவனுடையவர்களா இல்லையா என்பதையும் காண்பித்துவிடும். நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறீர்கள், எனவே உங்களுக்குள் நித்திய ஜீவன் இருக்கிறது. ஆனால் பாவஞ்செய்கிற ஆத்துமாவோ தேவனை விட்டு பிரிந்து போய்விடும். அது சரிதானே? அதன்பிறகு இனி மேல் அது இருக்காது. இப்பொழுது பாருங்கள். சிருஷ்டிக்கப்படும் எந்தவொன்றும் தன்னில் ஒரு துவக்கத்தைக் கொண்டதாக இருக்கிறது. அவ்வாறு துவக்கத்தையுடைய எந்தவொன்றும் நிச்சயம் முடிவையும் உடையதாகவே இருக்கிறது. ஆனால் தேவன் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல. அவர் எப்பொழுதும் தேவனாகவே இருக்கிறார். அவர் சிருஷ்டிக்கப்பட்டார் என்பதற்கு இடமே யில்லை. நித்திய ஜீவன் நாம் பெற்றுக் கொள்வதற்காக உள்ள ஒரேயொரு வழி என்னவெனில், அந்த சிருஷ்டிப்பின் ஒரு பாகமாக நீங்கள் இருக்க வேண்டும். மகிமை! ஓ, நாம் இதை கண்டு கொள்ள முடிந்தால்! பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு என்ன செய்கிறார்? பரிசுத்த ஆவியானவர் என்பவர் பிதாவாகிய தேவனாகிய சிருஷ்டிகர் தானேயாவார். அவரே ஆவியின் ரூபத்தில் இருந்து, “பரிசுத்த ஆவி'' என்றழைக்கப்பட்டார். ஏனெனில், அவருடைய குமாரனாகிய இயேசு என்று அழைக்கப்பட்ட சரீரத்திற்குள் அவர் இருந்தார். அவர் அந்த சரீரமாகிய இயேசுவை சிருஷ்டித்தார், அக்காரணத்தினால் தான் அச்சரீரம் மரிக்க வேண்டியதாயிருந்தது. தேவன் அந்த மாம்ச சரீரத்தில் வாசம் செய்தார். அதிலுள்ள ஜீவனும் இரத்த ஜீவ அணுக்களும் மனிதர் மேல் திரும்பி வந்தது. 69எனவேதான், பழைய ஏற்பாட்டின் காலத்தில் இருந்த தேவனைத் தொழுது கொள்ளுகிறவர்கள் மிருகத்தை பலி செலுத்திய பிறகும் கூட, அவன் பிராயசித்தத்திற்காக பலி செலுத்துவதற்கு முன்னால் அவன் உள்ளத்தில் தன்னில் பாவம் உண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி இருந்ததே, அதே உணர்வுடன் தான் பலி செலுத்திய பிறகும் புறப்பட்டுப் போகிறான். ஆனால் புதிய ஏற்பாட்டிலோ, எபிரெயரில் கூறப்பட்டுள்ளபடி, ''ஒருதரம் சுத்தமாக்கப்பட்ட பின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால்'' என்ற நிலைமை இருக்கிறது. 70பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆராதனை செய்கிறவன், ஒரு ஆட்டுக்குட்டியை கொண்டு வந்து அதன் மேல் தன் கைகளை வைக்கிறான், ஆசாரியன் அப்பலிமிருகத்தின் தொண்டையில் அறுக்கிறான், இரத்தத்தை கீழே வடியவிடுகிறான், அவ்வாட்டுக் குட்டியின் கதறல் சப்தத்தை ஆராதனை செய்கிறவன் கேட்கிறான். பின்பு அது மரித்து விடுகிறது. அது விறைத்துப் போன பொழுது அது மரித்ததை அவன் உணருகிறான். தான் அடைய வேண்டிய அம்மரணத்தை அவ்வாட்டுக்குட்டி எடுத்துக்கொண்டு விட்டது என்பதை உணருகிறான். அப்பொழுது ஆசாரியன் இரத்தத்தை பலிபீடத்தின் மேல் தெளிக்கிறான், பலிமிருகம் தகனிக்கப்படும் போது, அதிலிருந்து எழும்பும் புகையானது, ஆராதனை செய்கிற வனுக்காக ஏறெடுக்கப்படும் பாவமன்னிப்புக்கான ஜெபமாக இருக்கிறது. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி). பலியான அம் மிருகத்தின் ஜீவனானது, மீண்டும் மனிதனுக்குள் வந்து, மனி தனின் ஆவியோடு சங்கமிக்க முடியாது. ஏனெனில் அது மிருகத் தின் ஆவியாயிருக்கிறது. மிருகத்தின் ஆவியும், மனிதனின் ஆவி யும் இணைய முடியாது. ஆகவே தான், மிருகத்தைப் பலி செலுத்தி யவர்கள், பலி செலுத்திய பிறகும்கூட பாவத்தின் மேல் உள்ள அதே இச்சையோடு வெளியே செல்லுகிறார்கள். விபச்சார பாவத்தைப் பற்றி குற்ற உணர்வுள்ளவன், அதிலிருந்து மன்னிப்புக் கோரி பலி செலுத்த உள்ளே வருகிறான், செலுத்தி முடித்த பிறகும், அதே உணர்வுடன் தான் வெளியேறுகிறான். 71ஓ! தேவனுடைய சபையே, நான் கூறப் போவதை பெற்றுக் கொள்ளத் தவற வேண்டாம்! ஆனால் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இப்பொழுதோ, ஆராதனை செய்கிற ஒருவன், தேவனுடைய குமாரனிடத்தில் உண்மையாக நடந்து வந்து, விசுவாசத்தினால் அவர் மேல் தன் கைகளை வைக்கிறபோது, முகத்தில் துப்பப்பட் டவராக தொங்கிக் கொண்டிருக்கிறதையும், அவருடைய முகத்தில் இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறதையும் வலியின் வேதனையில், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?'' என்று கதறுகிற அவரது முகத்தைப் பாருங்கள். ஓ சகோதரனே, அவர் மரித்ததினால் என்னே ஒரு மகத்தான கிரயத்தை அவர் உனக்காகக் கொடுத்து மரித்தார் என்பதைப் பாருங்கள். அவர் யார், அவர் தான் உன்னுடைய ஸ்தானத்தில், உனக்குப் பதிலாக, மரிக்கிற இம்மானுவேல் என்ற தேவன். அப்பொழுது என்ன நடந்தது? தேவனுடைய குமாரனில் இருந்த இரத்த அணுக்கள் பிளந்தபோது... அந்த இரத்த அணுக்களை உண்டாக்கியது எது? நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் தந்தை யிலிருந்து ஒரு மிகச்சிறிய ஜீவ அணுவாகத்தான் புறப்பட்டு வந்திருக்கிறீர்கள். அவ்விதமான ஒரு அணு பெண்ணிடம் கிடையாது அவள் சினைமுட்டையை மாத்திரமே உடையவளா யிருக்கிறாள். ஆணிடமிருந்து வரும் ஜீவ அணுவை கருத்தரிக்கச் செய்து, தன்னகத்தே, அதை குழந்தையாகப் பிறப்பிப்பதை மாத்திரமே செய்கிறாள். ஆனால் இரத்தமானது தந்தையிடமிருந்து தான் வருகிறது. எனவே தான், பிறக்கும் குழந்தை தந்தையின் பெயரையே எடுத்துக் கொள்கிறது. ஒரு மனிதனை விவாகம் செய்து கொள்ளும் பெண்ணானவள், அவனுக்கு தான் பெற்றெடுக்கும் குழந்தைகளினிமித்தம், அவனது பெயரையும் தனக்கு சூட்டிக் கொள்கிறாள். அவள் தானே அவனுக்குப் பெற்றுக் கொடுக்கப் போகும் குழந்தைகளுக்காக அவயங்காக்கிறவளாக ஆகிறாள். ஆனால் நான் கூறியபடி, ஒரு பெட்டைக்கோழி ஒரு சேவலுடன் சேராமலேயே முட்டையிடலாம், ஆனால் சேவலோடு சேராமல் போடப்பட்ட முட்டையோ, அடையில் வைத்து குஞ்சு பொறிக் கப்பட முடியாத முட்டையாக இருக்கும். 72அதைப்போலவே, நான் ஏற்கனவே கூறியபடி, இன்றைக்கு நமக்கு அநேக ஜீவனற்ற, புறம்பான ஆசாரங்களையுடைய, குளிர்ந்து போன நிலையிலுள்ள, கிழடுதட்டிப்போன ஏராளம் சபைகள் உள்ளன. அவர்கள் இந்த நிக்கொலாய் மதஸ்தரின் போதனைகளை கைக்கொண்டு, அதினால் அவர்களுடைய கூடுகள் முழுவதும் அழுகிப்போன முட்டைகளால் நிறைந்ததாய் இருக் கின்றன; அவைகள் ஒருபோதும் குஞ்சு பொறிக்க முடியாதவை யாகும். நீங்கள் என்னென்ன பிரயத்தனங்கள் மேற்கொண்டாலும் ஒன்றும் நடக்காது. அவர்களை பிஷப்புகள், டீக்கன்கள் என்றெல் லாம் நீங்கள் அழைத்தாலும் பயனில்லை. விசுவாசிகளை தொடரக் கூடிய அடையாளங்களை அவர்கள் ஒருபோதும் விசுவாசிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவோடு இணைந்திருக்கவில்லை. அந்த மணவாளனால் தேவனுடைய வல்லமையைக் கொண்டு அவர்கள் சினைப்பட்டிருந் தால்... அந்த இரத்த ஜீவ அணுக்கள் கல்வாரி சிலுவையில் பிளக்கப்பட்டபோது, அந்த சிறிய யேகோவாவில் இருந்த அந்த ஜீவன்... ஓ! இவ்விஷயம் உங்களை அசைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்! ஒவ்வொருவரும் ஒரு அடையாளத்திற்காகப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறில்லையா? “ஒரு அடையாளத் தைக் காண்பியும்'' என்று ஒவ்வொருவரும் கேட்கிறார்கள். யூதன் கூறினான், ”எனக்கொரு அடையாளத்தைக் காண்பியும்'' என்று. 73நான் ஒரு அடையாளத்தை உங்களுக்கு கொடுக்கட்டும். தேவன் ஒரு சமயம் ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அவர்கள் அவரிடம் ஒரு அடையாளத்தைக் கேட்டார்கள். இஸ்ரவேல் ஒரு அடையாளத்தைக் கேட்டது. அவர் தீர்க்கதரிசியிடம், “நான் உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கேட்டது. அவர் தீர்க்கதரிசி யிடம், ”நான் உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பேன். இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் (ஆமென்), அவருக்கு இம்மானுவேல் என்று பேயரிடுவாள்'' என்று கூறினார். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக் கிறார் என்று அர்த்தமாம். கொடுக்கப்பட்ட அடையாளங்களி யெல்லாம் மிகப்பெரிய அடையாளம் இதுவே. வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்த தேவன், இந்த சூரியக் குடும்பத்தையும் உண்டாக்கினார். பலோமர் என்ற அந்த மலையின்மேல் நின்று கொண்டு தொலை நோக்கியின் மூலம் தூரத்தில் பார்த்தால், அங்கிருந்து 120 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது பத்து இலட்சம் - மொழி பெயர்ப்பாளர்) ஒளி ஆண்டுகள் தூரத்தில் (ஒரு ஒளி ஆண்டு என்றால் 6,000,000,000,000 (6000 பில்லியன்) மைல்களுக்குச் சமம்) விண்வெளியில் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதை மைல்கணக்கில் கொண்டு வந்து பாருங்கள். அதற்கு அப்பாலும், நிலவுகளும், நட்சத்திரங்களும், உலகங்களும் இன்னும் ஏராளம் உண்டு. அவரே அவையாவையும் உண்டாக்கினார். அவைகள் யாவும் அவருடைய கரத்திலிருந்து வெடித்துப் புறப்பட்டன. 74அத்தனை மகத்துவமான சிருஷ்டிகர் என்னுடைய இரட்சக ரானார். அந்த மகத்துவமுள்ளவர் ஓர் சிறிய இரத்த ஜீவ அணுவினுள் பிரவேசித்து, அவ்வணாவானது, ஒரு மனிதன் மூலமாக அல்ல, கறைப்படாமல் பரிசுத்தமான முறையில், ஒரு ஸ்திரீயினுள் வைக்கப்பட்டு, அவர் தனக்கென ஒரு சிறிய வாசஸ்தலத்தை உரு வாக்கிக் கொண்டு அதனுள் அவர் ஜீவித்தார். ஒரு அது அசைக் கக்கூடியதாக இருக்கிறது. யேகோவா! யேகோவா வைக்கோல் நிறைந்த முன்னணையில் தொழுவத்தின் சாணம் குவிக்கப்பட்டுள்ள இடத்தில், குழந்தையாக அழுது கொண்டு இருக்கிறார். இதுவே இந்த சிலு பெருந்தலைகளான மக்களுக்குக் கொடுக்கப் பட்ட நித்திய அடையாளமாயிருக்கிறது. யேகோவாவாகிய தேவன் நாற்றமெடுக்கும் முன்னணையில் குழந்தையாக கிடத்தப் பட்டிருக்கிறார். (அல்லேலூயா!) அப்படியிருக்க, நாம் பெரியவர் கள் என்று நம்மை நினைத்துக் கொண்டு ஆணவத்தால் தலை நிமிர்ந்து நடக்கிறோம். அடை மழை பெய்தால், அது உங்களை மூழ்கடித்து விடும். ஆனால் நீங்களோ உங்களைப் பெரியவர்கள் என்று நினைத்துக் கொள்கிறீர்கள். யேகோவா! சாணக்குவியலின் மேல் ஒரு முன்னணையில் அழுது கொண்டிருக்கும் குழந்தையாக கிடத்தப் பட்டிருக்கிறார். அது எவரையும் அசைக்கக் கூடியதாக இருக்கிறது. அதுவே அடையாளம். “நான் உங்களுக்கு நித்திய அடையாளத் தைக் கொடுப்பேன்'' என்று தேவன் கூறினார். அதுவே மெய்யான அடையாளமாயிருக்கிறது. விளையாடிக் கொண்டு இருக்கிற ஒரு சிறுவனாக யேகோவா இருந்தார். யேகோவா ஒரு பணிமனையில் மரத்தை அறுத்து பணி செய்யும் ஒரு தச்சராக இருந்தார். அல்லேலூயா! என்னே, ஓ, என்னே! மீன்பிடிக்கிறவர்களின் கால்களை யேகோவா கழுவினார். ”ஒரு அடையாளத்தை நான் தருவேன்'' என்றாரே, அது இதுதான். 75ஆனால் தேவன் இந்த மகத்தான அடையாளத்தைக் கொடுத் திருக்கையில், மனிதருக்கோ கழுத்துப்பட்டையணிந்த, அங்கி தரித்த குருக்கள் வேண்டும் என்கிறார்கள். பாருங்கள்? ஓ! “நான் உங்களுக்கு அடையாளத்தைத் தருவேன்'' என்றார். யேகோவா அரண்மனை முற்றத்தில் முகத்தில் காரிதுப்பப்பட்ட நிலையில் நின்று கொண்டிருக்கிறார். யேகோவா நிர்வாணமாக, வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கிக் கொண்டிருந்தார். சிலுவையின் அவமானத்தை அவர் துச்சமாக எண்ணினார். நாம் அவருக்கு ஒரு சிறு துணியை இடுப்பில் சுற்றிய நிலையில் சிலை செய்து வைத்துள்ளோம். ஒரு சிற்பி அவ்வாறு செதுக்கினான். ஆனால் அவர்கள் அவரை நிர்வாணமாக்கி அவரை இக்கட்டான சூழ்நிலையில் வைத்தனர். ஒரு கூட்டம் மாய்மாலக்காரர்கள், நேரம் வந்தபோது, கிரியை செய்தார்கள். இது மனிதனின் நாளாக இருக்கிறது. கர்த்தரின் நாள் வந்து கொண்டிருக்கிறது. யேகோவா மரித்துக் கொண்டிருந்தார், ஆம், ஒன்றும் நடைபெறவில்லை, யேகோவா ஜெபித்துக் கொண்டிருந்தார். ஒன்றும் சம்பவிக்க வில்லை. அது உண்மை. அது உங்களை அசைக்க வேண்டும். அது நித்திய அடையாளமாயிருக்கிறது. எல்லா மனிதரும் அறிய வேண்டிய அடையாளம் அதுவே. அப்பொழுது அவர் மரித்தார். அப்பொழுது பூமி அசைக்கப்பட ஆரம்பித்த? ஓ, என்னே! 76மரித்தோரிலிருந்து அவர் உயிரோடெழும்பி, உன்னதத்திற்கு ஏறினார். தன் ஜனங்களாகிய தன் சபையில் வாசம் பண்ணும்படி, யேகோவா பரிசுத்த ஆவியாக திரும்பி வந்தார். மகிமை! யேகோவா அவர்களுடைய சபை வழியாக நடந்து சென்று, அவர்களது இருதயத்தின் சிந்தைகளை பகுத்தறிந்தார். யேகோவா பிணியாளிகளை குணமாக்கினார். யேகோவா மனிதனின் உதடுகளை உபயோகித்து பேசினார், அப்பொழுது அவ்வுதடுகளை தேவன் பேச ஒப்புக் கொடுத்ததால், மனிதனின் கட்டுப்பாட்டில் அவன் உதடு இல்லை. அதே யேகோவா, தான் இன்னொரு மனிதனின் மூலம் பேசியவைகளை இங்கே, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வியாக்கியானிக்கிறார். ஒரு அடையாளம் தேவையா? ஆமென்! அதே யேகோவா ஒரு வேசியினிடத்தில் இறங்கி வந்து அவளை எழுப்புகிறார். அவளை நாய்கள் கூட ஏறிட்டுப் பார்க்கக்கூடாத அளவுக்கு மிகவும் கீழ்த்தரமான நிலையிலிருந்தபோது, அவர் அந்தவிதமான நிலையிலிருந்து அவளை தூக்கியெடுத்து, அவளை கழுவி, உறைந்த வெண்பனியிலும் வெண்மையாக ஆக்கி, லீலி புஷ்பத்தைப் போன்ற சுத்தமான இருதயத்தை அவளுக்குக் கொடுக்கிறார். ஒதுக்கமான சந்துகளில் குடித்து வெறித்து, ஈக்கள் வாயைச் சுற்றிலும் மொய்க்கும் அளவுக்கு மயங்கி கிடக்கிறதான குடிகாரனை யேகோவா தூக்கியெடுத்து, சுத்தமாக்கி, அவனை சுவிசேஷத்தைப் பிரசங்சிக்கும்படி செய்கிறார். 77அவர் பூமியில், இருந்தபொழுது, உலகிலேயே மிகவும் தாழ்வான நகரத்திற்கு, மிகவும் தாழ்வான மக்களிடத்திற்குச் சென்றார். அவருக்கு அவர்கள் மிகவும் கீழ்த்தரமான பெயரை சூட்டினர். அவர்கள் அவரை மிகவும் கேவலமாக நடத்தி, அவரை “பெயல்செபூல்'', பிசாசுகளின் தலைவன்'' என்ற மிகமிக மட்ட மான நாமத்தை சூட்டி அழைத்தனர். மனிதன் அவரை மிகவும் கீழ்த்தரமான நாமத்தினால் அழைத்தான். அவனால் தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, மிகவும் உன்னதமான சிங்காசனத்தை அவருக்குக் கொடுத்தார். அவர் மிக உன்னத நிலைக்கு உயர்த்தப்பட்டதால், மிக மிக உயரத்தில் இருக்கும் வானமே அவரால் குனிந்து பார்க்க வேண்டிய அளவில் இருக்கிறது. வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லா நாமங்களுக்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தரு ளினார். அந்த நாமத்தினால் தான் பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள முழுக் குடும்பத்திற்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மனிதன் அவரைக் குறித்து இவ்வாறு தாழ்வாகத்தான் சிந்தித்தான். அவரைக் குறித்து இவ்வாறு தாழ்வாகத்தான் சிந்தித்தான். அவரைக் குறித்து தேவன் மிகவும் உயர்வாக சிந்தித்தார். ஓ தேவனே, என் சிந்தனைகள் யாவும் உம்முடைய சிந்தனைகளைப் போல் இருக்கட்டும், பிதாவே. ஆம் ஐயா, ஓ, விலையேறப் பெற்ற நாமம்! 78“என்னை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனா யிருக்கிறான்''. ஒரேயொருவிதமான நித்திய ஜீவன் தான் உண்டு என்றால், அதையே பெற்றுக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் மூலமாக அந்த ஜீவனை அடைய நாம் நாடிக் கொண்டிருக்கிறோம். அது தேவனுடைய ஜீவனாயிருக்கிறது. தேவனுடைய குமாரனில் இருந்த ஜீவ அணுக்கள் பிளக்கப்பட்டபோது, இயேசு என்ற இந்த மனிதனில் அந்த சிறு யேகோவா அடங்கியிருந்தார் (அவரில் தேவத்துவத்தில் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக வாசமா யிருந்தது) இப்பொழுது அந்த இரத்தத்தை நாம் நம்முடைய பாவ நிவர்த்திக்காக விசுவாசிப்போமெனில். அந்த ஆவி, அது மனிதனில் இருந்த ஆவியல்ல, தேவனில் இருந்த அந்த ஆவி, நம்மேல் வருகிறது. மகிமை! அது ”தேவனுடைய இரத்தம்'' என்று வேதம் கூறுகிறது. யூதர்களை பற்றி நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டாம், அவர் ஒரு யூதன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்'' என்று ஒருவர் கூறினார். இயேசு ஒரு யூதனல்ல. அவர் யூதனுமல்ல, புறஜாதி யானுமல்ல. அவர் தேவன். அதுதான் சரி. அவர் ஒரு சிருஷ் டிக்கப்பட்ட இரத்தம். தேவன் விசேஷித்த விதமாக அதை உண் டாக்கினார். அந்த இரத்தம் அவரது சொந்த இரத்தமாகும். சிருஷ் டிக்கப்பட்ட அந்த இரத்தத்தின் மூலமாக நாம் அதை நம்முடைய பாவ மன்னிப்புக்காக ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில் நமக்காக அவர் அந்தவிதமான மரணத்தில் மரித்தார். அந்த இரத்த ஜீவ அணுவானது பிளக்கப்பட்டு, அதிலிருந்து பரிசுத்த ஆவி திரும்ப நம் மேல் வந்து, ஆவியினால் உண்டாகும் புதிய பிறப்பின் மூலமாக நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளு மானோம். இப்பொழுது ஆதியும் அந்தமுமில்லாத தேவனுடைய ஜீவனானது, இயேசு கிறிஸ்து மூலமாய் உண்டான தேவனுடைய கிருபையினாலே, எனக்கும் உங்களுக்கும் உரிய தாய் இருக்கிறது. 79இப்பொழுது மீண்டும் “நரகம்'' என்ற வார்த்தைக்கு சிறிது நேரம் திரும்பிப் போவோம். எரிகிற நரகம் உண்டென்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா! வேதம் அக்கினிக் கடலைப் பற்றி கூறியுள்ளது. ஆனால் அது ஒருக்காலும் நித்தியமானதாக இருக்க முடியாது. வேதம் அவ்வாறு கூறவில்லை. 'சதாகாலங்களுக்கு இருக்கும் நரகம்'' என்று கூறுகிறது - மொழி பெயர்ப்பாளர்). நரகம் பிசாசுக்காகவும், அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டதொன் றாகும். அது சதாகாலங்களுக்கும் இருக்கும், ஆனால் நித்தியமான தாக இருக்காது. நான் அறிந்த வரையில், ஆத்துமாவானது அதன் செய்கைக்கா, ஒருவேளை, பத்து மில்லியன் ஆண்டுகள் நரகத்தில் வாதிக்கப்படக் கூடும். தேவனுடைய பார்வையில் சதாகாலம் என்பது எப்படியிருக்கக் கூடும் என்பது எனக்குத் தெரியாது. அது ஒரு வேளை ஐந்து நிமிடங்களாக இருக்கலாம். அல்லது ஒருவேளை ஒரு மில்லியன் ஆண்டுகள் என்றிருக்கலாம். அது ஒருவேளை 10 மில்லின் ஆண்டுகளுக்குக் கூட இருக்கலாம். ஆனால், எப்படியும் அந்த ஆத்துமா இல்லாமல் போகிற ஒரு வேளை வரும். வேதம் இங்கே இவ்வாறு கூறுகிறது. '... ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப் படுவதில்லை “ 80முதல் மரணமானது நமக்குப் பிரியமானவர்களிடமிருந்து நம்மை பிரிக்கக் கூடியதாக இருக்கிறது. நாம் மரித்தாலும், தேவ னுடைய சமூகத்திற்குள் செல்லுவோம். அவருடைய பிரசன் னத்தை விட்டு அகலமாட்டோம். இரண்டாம் மரணம் என்ற ஒன்று இருக்குமானால், அது நிச்சயமாக ஆத்துமாவின் மரணமாகத்தான் இருக்க வேண்டும். உலகத்தை ஜெயங்கொள்ளுகிறவன் அல்லது உலகத்துக்குரிய காரியங்களை ஜெயிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருப்பான்; இரண்டாம் மரணமானது அவனைத் தொடுவதில்லை. நித்திய ஜீவன் என்பது அதுதான். “சுகபோகமாக வாழ்கிற ஸ்திரீ உயிரோடு செத்தவள்'' என்று வேதம் கூறுகிறது. அது சரிதானே? ''பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்'' சாவதென்றால் என்ன? ”முழுவதுமாக பிரிக்கப்படுதல்''. “இனி இல்லாதிருத்தல்'', பாருங்கள்? ''முழுவதும் அறுப்புண்டு போகுதல்''. இனிமேல் இல்லை என்றுள்ள கட்டம் எப்பொழுது ஏற்படும்? அது எவ்வாறு இங்கு ஏற்பட்டதோ, அதே நடை முறையில் தான் அது, இனி ஒன்றுமே இல்லை என்கிற நேரம் வரைக்கிலும் போகும். அது எதிலிருந்து உண்டாக்கப்பட்டதோ அங்கே அது திரும்பிச் செல்லுகிறது. 81அந்த ஜீவ அணுவை எடுத்துக் கொண்டால், அதைப் பிளந்து பார்த்தால், அதை ஆராய்ந்து கொண்டே போனால், இறுதியில் முதல் ஜீவ அணுவுக்கு வருகிறோம். அந்த ஜீவ அணுவை நீங்கள் பிளந்தால், அப்பொழுது, இரத்தத்தின் பல்வேறு வேதிப் பொருட் களுக்குள் வருகிறீர்கள். கடைசியாக அந்த ஜீவ அணுவின் மிகவும் நுண்ணியமானதொரு பாகத்துக்கு வருகிறீர்கள். அதுதான் ஜீவன் ஆகும். விஞ்ஞானிகள் அதைக் கண்ணுற முடியாது. அதைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அந்த ஜீவனானது, ஒன்றுமே இல்லை என்று கருதுகிற அளவுக்கு உள்ள கட்டத்திற்கு வருகிறது. அந்த ஜீவனின் வேதியியல் பண்பு என்ன? அதற்கு எந்த வேதிப்பொருளும் உள்ளது என்பதை நான் விசுவாசிக்கவில்லை. அது ஆவிக்குரியதாக இருக்கிறது. அதன் பிறகு, அக்கட்டத்தில், இறுதியாக அது முழுவதும் பிரிக்கப்பட்ட, இனிமேல் இல்லாமல் இருக்கிற ஒரு கட்டத்தை அடைந்து விடுகிறது. ''பாவஞ் செய்கிற ஆத்துமா சாகவே சாகும்'' என்று வேதம் கூறுகிறது. ''இந்த சபைக் காலங்களில் ஜெயங் கொள்ளுகிறவர்கள் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவ தில்லை''. சரீரம் முதலில் மரித்துவிடுகிறது, அடுத்து ஆத்துமா மரிக்கிறது, அதன்பிறகு அது இனி இல்லாமற்போய் விடுகிறது. பாருங்கள்? இவ்வாறு வேதம் கூறியிருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்: நரகம் நித்திய மானது என்று இருக்குமானால், அப்பொழுது வேதம் தவறான தாகப் போய்விடும். ஏனெனில், வேதத்தில் 'நரகம் சிருஷ்டிக் கப்பட்டது'' என்று கூறப்பட்டுள்ளது. ஒரு மனிதன் நரகத்தில் நித்தியமாக எரிந்து கொண்டிருப்பான் என்றால், அவன் உயிரோடு எரிய அவனுக்குள் நித்திய ஜீவன் இருக்க வேண்டும். அது சரி தானே? நல்லது, எத்தனைவிதமான நித்திய ஜீவன்கள் உண்டு? ஒரேயொரு நித்திய ஜீவன்தான் உண்டு. அது உண்மை. ஒரேயொரு நித்திய ஜீவன் மட்டுமே. 82இப்பொழுது நீங்கள் புறப்பட்டுப் போய், ''சகோ. பிரன்ஹாம் நரகம் உண்டென்று விசுவாசிக்கவில்லை'' என்று சொல்லிவிடாதீர்கள். சகோ.பிரன்ஹாம் நரகம் உண்டென்று தான் விசுவாசிக்கிறார். நரகம் ஒன்று உண்டென்று வேதம் போதிக்கிறது. இளைப்பாறுதலுக்கென ஒரு வாஸ்தலம் உண்டு என்பது எவ்வளவு நிச்சயமானதோ, அதே அளவு, தண்டனைக்கு ஒரு ஸ்தலம் உண்டு என்பதும் நிச்சயம். தனக்கெதிராக பாவம் செய்கிற ஆத்துமாவை தேவன் நிச்சயமாக தண்டனைக்குட்படுத்துவார். இயேசு கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிப்பதினிமித்தம், நீ நிச்சயமாக தண்டிக்கப்படுவாய். ஆனால் நீ முற்றிலுமாக இனிமேல் இல்லாமற் போகும் வேளை வரப்போகிறது. ஆனால் அதற்கு எத்தனை மில்லியன் ஆண்டுகள் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு காலவரையரை உண்டு, நித்தியமாக அல்ல. நீங்கள் மறுபடியும் பிறக்கிற வரையிலும், நேரம், காலத் திற்கு கட்டுப்பட்ட வரையறைக்குப்பட்ட பிறவிகளாக இருப் பீர்கள். மறுபிறப்படைந்ததும் நீங்கள் முடிவில்லாத நித்திய பிறவி களாக இருப்பீர்கள். நித்திய ஜீவனையுடையவர்களாக இருப்பதற்கு உங்களுக்கு இருக்கிற ஒரே வழி என்னவெனில், நீங்கள் உங்களில் தேவனின் பாகத்தையுடையவர்களாக இருத்தல் வேண்டும். அதை உங்களால் காண முடிகிறதா? நிச்சயமாக. “....ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள் அவரை நேசிக்க வில்லையா? நித்திய ஜீவனை அடைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அது என்னை இனிமேல் வருத்தப்படுத்து வது இல்லை, ஏனெனில் இப்பொழுது நமக்கு நித்திய ஜீவன் உண்டாயிருக்கிறது. நான் அதை அறிந்திருக்கிறேன். நாம் யாவரும் அதைப் பெற்றிருப்போம் என்று நான் நம்புகிறேன். 83நான் இங்கே ஐரேனியஸைப் பற்றி ஒரு குறிப்பு எழுதி வைத்துள்ளேன். அது சம்மந்தமாக இந்த வரலாற்றுக் குறிப்பை வாசிக்கவும்'' என்று எழுதி வைத்துள்ளேன். ஐரேனியஸ் தன் ஊழியத்தில் அந்த பெந்தெகொஸ்தே சபைக்குரிய அடையாளங் களையெல்லாம் பெற்றிருந்தார். சபையானது பெந்தெகொஸ்தேவில் துவங்கியது என்பதை எத்தனை பேர்கள் விசுவாசிக்கிறீர்கள்? சரி. எத்தனை பேர், பெந்தெகொஸ்தேவில் ஏற்பட்ட சபையை தேவன் அங்கீகரித்து உறுதிப்படுத்தினார் என்பதை விசுவாசிக்கிறீர்கள்? சரி, ஐயா. அது தேவனுடைய முதல் சபை என்றிருந்ததென்றால், ''சபை“ என்று அதை தான் அவர் அழைத்தார். இப்பொழுது அவர் திராட்சைச் செடியாக இருக்கிறார். நாம் அதன் கொடிகள். அந்தத் திராட்சைச் செடி இன்னொரு கொடியை படரவிட்டால், அது எப்படி யிருக்கும்? அதுவும் பெந்தெகொஸ்தேவாக இருக்கும். ஆம்! பெந்தெகொஸ்தே என்று பெயர் போட்டுக் கொள்வதினால் அப்படியாக முடியாது. இப்பொழுது நம்மிடையே பெந்தெ கொஸ்தே என்று பெயர் போட்டுக் கொண்டுள்ளவைகள் உண்டு, அதுவும் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, ப்ரெஸ்பிடேரியன் ஆகிய வைகளைப் போலுள்ளவைகள் தான். அது வெறும் பெயர் தான். அதினால் ஒரு பயனும் இல்லை. அதில் எந்த அர்த்தமும் இல்லை, பாருங்கள். ஆனால் பெந்தெகொஸ்தே அனுபவத்தை உங்கள் இருதயத்திலும், உங்கள் ஆத்துமாவிலும் பெற்றிருந்தால், நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாக இருப்பீர்கள், அப்பொழுது தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தமாக, ”இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை'' என்று உரைத்திருக்கிறார். ஏனெனில் நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள். அதினால், இரண்டாம் மரணம் உங்களை தொட முடியாது. பாருங்கள்? உங்களுக்கு... நீங்கள்.... 84“தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங் கள்''. அதை நீங்கள் துக்கப்படுத்தாதிருங்கள் (தவறான காரியங்கள் செய்வதின் மூலம்). நீங்கள் அப்படிச் செய்தால், அதற்கு உரிய தண்டனையை அடைந்திட வேண்டியது வரும். ஏனெனில் வேதம் கூறுகிறது: ”நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்'' அது சரிதானே? “பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்'' எதிர் வரும் காலங்களில் உள்ள ஒரு காலையில், அந்த நாளானது அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. உயிர்த் தெழுதல் அகில உலகத்திலும் ஒரே நேரத்திலேயே நடை பெறும் என்பதைக் காண்பிக்கும் முகமாக, “இரண்டு பேர் வயலி லிருப்பார்கள், ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு பேர் படுக்கையிலிருப்பார்கள். அதில் நான் ஒருவரை எடுத்துக் கொள்வேன்'' என்று கூறியுள்ளார். பாருங்கள், பூமியில் ஒரு இடத்தில் பகலாயிருக்கையில், இன்னொரு தேசத்தில் அப்பொழுது இரவாயிருக்கும்; ஆகவே உயிர்த்தெழுதலும், எடுத்துக் கொள்ளப்படுதலும் உலக முழுவதி லும் ஒரே நேரத்தில் நடைபெற்றுவிடும். தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது இந்த ஏழு சபைக்காலங்களிலும் இருந்த அந்த சிறுமந்தையான ஒவ்வொரு சபையும், இருண்ட காலங்களுக்குள் சென்ற அந்த மிகச்சிறிய சபையும், அதைவிட்டு வெளியே வந்த சபையும், அதற்கடுத்த சபையும் அதற்கடுத்த சபையும், உயிரோடெழுந்திருப்பார்கள். ஏழாவது சாமத்தில் காணப்பட்ட அந்த பத்து கன்னியரும் கர்த்தரை சந்திக்க எதிர்கொண்டு போனார்கள். அவர்களில் ஐந்து கன்னியர் புத்தியுள்ளவர்கள். ஐந்து பேர்களோ புத்தியில்லாத வர்கள். அது சரிதானே? அங்கே ஏழு சாமங்கள் உண்டாயிருந்தன, ஏழாவது சாமத்தின் இறுதியில் (சிலர் 'இந்த' சாமத்தில் உறங்கச் சென்றார்கள். சிலர் 'இந்த' சாமம், சிலர் அந்த சாமம்) ஏழாவது சாமத்தில் “இதோ மணவாளன் வருகிறார், அவரை எதிர் கொள்ளப் புறப்பட்டுப் போங்கள்'' என்ற சத்தம் உண்டாயிற்று. அவர்கள் எழுந்து தங்கள் தீவட்டிகளைக் கொளுத்தினார்கள். மற்றவர்கள் யாவரும் இங்கிருந்து எழும்பினார்கள். ஓ, ஒரு அற்புதமான வேளையாக அது இருக்குமல்லவா? 85நான் ஒரு சிறு பாடலை பாடுவதுண்டு. அது உனக்கும் ஒரு அற்புதமான வேளையாயிருக்கும் அது எனக்கும் ஓர் அற்புதமான வேளையாயிருக்கும் நம் இராஜனாம் இயேசுவை சந்திக்க நாம் ஆயத்தமானால் என்னே ஓர் அற்புதவேளையது. நாம் இதைப் பாடுவோம். உமக்கு ஓர் அற்புத வேளையது எனக்கும் ஓர் அற்புத வேளையது நாமெல்லாரும் நம் இராஜனாம் இயேசுவை சந்திக்க ஆயத்தமானால் என்னே ஓர் அற்புத வேளையாய் இது இருக்கும். (அது அற்புதமாயிருக்குமல்லவா?) அங்கே அது அற்புதமாயிருக்கமல்லவா, சுமக்கவோ பாரம் ஏதுமில்லையங்கே இதயத்து மணியோசை அனைத்தும் ஒலிக்க மகிழ்வுடன் பாடுவோம் ஓ அது அற்புதமாயிருக்கமல்லவோ அங்கே? அந்த பரமவீட்டை அடைவோம் என்று உங்களில் எத்தனை பேர்கள் அறிந்துள்ளீர்கள்? அவ்வாசலைவிட்டு புறம்பே போய் விடுவீர்கள் என்று எத்தனை பேர்கள் அறிவீர்கள்? உங்களுக்குத் தெரியாது. உங்களில் எத்தனை பேர்கள், வெளியே போய்விட் டால் திரும்பி வந்துவிடுவோம் என்பதை அறிந்துள்ளீர்கள்? உங்களால் சொல்ல முடியாது. ஆகவே, இந்த இராத்திரியைத் தவறவிட வேண்டாம். இந்த இராத்திரியில் தேவனை விட்டு விடாதீர்கள். ஏனெனில் இந்த இராத்திரி ஒருவேளை உங்களுக்கு தருணம் அல்லது சமயம் கிடைக்கும் கடைசி இராத்திரியாக இருக்கக்கூடும். நீங்கள் யார்? நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? எங்கே போகப் போகிறீர்கள்? அதைப்பற்றி உங்களுக்குச் சொல்ல முடிந்த, உலகில் உள்ள ஒரேயொரு புத்தகம் இந்த ஆசீர்வதிக் கப்பட்ட பழமையான வேதாகமம் மட்டுமே. அந்த வேதத்தைத் தான் நாம் விசுவாசிக்கிறோம். அந்தத் தேவனைத் தான் நாம் விசுவாசிக்கிறோம். 86நீங்கள் அந்த மணவாட்டியில் இல்லாவிட்டால், சிறு பான்மையான அந்தச் சிறு குழுவினுள் நீங்கள் இல்லாவிடில், ஸ்தாபனக் கோட்பாடுகளினாலும், ஸ்தாபனங்களினாலும் கசக்கிப் பிழியப்பட்டு புறம்பாக்கப்பட்ட அந்த சிறு மந்தையில் நீங்கள் இல்லாவிடில், அந்த சிலாக்கியத்தைப் பெறுவதற்காக நீங்கள் இந்த கூடாரத்தைச் சேர்ந்து கொள்ள வேண்டியதில்லை. அந்த இராஜ்யத்தினுள் நீங்கள் பிறக்க வேண்டும். மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரெஸ்பிடேரியன் ஆகியவற்றில் நீங்கள் ஐக்கியங் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அது உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்தது. நீங்கள் விரும்புகிற எவரோடும் உங்கள் ஐக்கியத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் மறுபடி யும் பிறந்து விட்டால், அப்பொழுது, “ஒரேவிதமான சிறகுள்ள பறவைகள்'' என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னே! 87ஒருவர் என்னிடம் ஓர் சமயம் கேட்டார்; ''சகோ. பிரன்ஹாமே, ஜனங்களை மெதோடிஸ்டு சபைக்கு திரும்பிச் செல்லுங்கள் என்று கூறுகிறீர்களே?'' என்றார். நான் கூறினேன்; “நிச்சயமாக. அவர்கள் இவர்களை தூக்கியெறிட்டும், அப்பொழுது அவர்களுக்கு போவதற்கு வேறு இடமே இருக்காது. அப்பொழுது நீங்கள் பாருங்கள்'' என்றேன். அதெல்லாம் சரிதான். திரும்பிச் செல்லட்டும், நீண்ட காலம் அங்கு இருக்கப் போவதில்லை. பாருங்கள், அங்கு நீடித்து இருக்க முடியாது, மீண்டும் வருவார்கள். பெரிய ஜலப்பிரளயத்திற்கு பிறகு, பாதுகாப்பான இடமாகிய நோவாவின் பேழையிலே, நோவா ஓர் சமயம், பேழையை விட்டு காகத்தை வெளியே அனுப்பினான். காகம் கரைந்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுச் சென்றது. அது அழுகின மாம்சத்தைத் தின்னும் பறவையானதால், அது மிகவும் திருப்தியோடு இருந்தது. அது ஒரு மரித்துப்போன உடலைவிட்டு இன்னொன்றுக்கு பறந்து சென்று, செத்துக்கிடக்கும் கோவேறு கழுதையின் அழுகிப்போன மாம்சத்தை வயிறு புடைக்க உண்டு விட்டு, அங்கிருந்து பறந்து, செத்து அழுகிக்கிடக்கும் ஆட்டின் மாம்சத்தை வயிறு புடைக்க உண்டுவிட்டு, பிறகு அங்கிருந்து இன்னொன்றின் மாம்சத்தை தின்னப் போயிற்று. பல வகையான அழுகிப்போன உடல்கள் அதற்கு கிடைத்துவிட்டது. எனவே இந்தக் காகம் இவ்வாறு அந்த அழுகிய உடல்கள் மேல் உட்கார்ந்து தின்று கரைந்து கொண்டேயிருந்தது. ''ஓ எனக்குள்ளே குதூகலம் கரை புரண்டு ஓடுகிறது'' என்று காகம் கரைந்து கொண்டே சென்றது. ஆனால் அவர்கள் இந்த சிறிய புறாவை வெளியே திறந்து விட்டபொழுது, அது வித்தியாசமான சுபாவத்தையுடையதாயி ருந்தது. அழுகிய மாம்சத்தின் நாற்றம் அதினால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. ஏன்? புறாவுக்கு பித்தம் கிடையாது. பித்தம் இல்லாத ஒரே பறவை புறா தான். அவற்றையெல்லாம் அதினால் ஜீரணிக்க முடியாது. ஆகவே எங்கும் நாற்றம் எடுத்துக் கிடந்தபடியினால், அதைத் தாங்க முடியாத புறா, நேரே பேழைக்கு திரும்பிப்போய் கதவை தட்டுவது தான் அதற்கிருந்த ஒரே மார்க்கமாக இருந்தது. நீங்கள் போக விரும்பும் இடமெங்கும் செல்லுங்கள். நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், இராஜ்யத்திற்குள் வாருங்கள். அப்பொழுது நீங்கள் எங்கே போவீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களால் இனிமேல் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது, சகோதரனே! நான் வேறு பிரிக்கும் கோட்டை கடந்து விட்டேன். உலகம் என் பின்னால் போய்விட்டது'' என்பீர்கள். ஆம், ஐயா, நிச்சயமாக அது தான். அவர்கள் மேல்வீட்டறையில் கூடி வந்து யாவரும் அவர் நாமத்தினால் ஜெபித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர் ஆராதனைக்கான வல்லமை வந்தது அந்நாளில் அவர்களுக்கு அவர் என்ன செய்தாரோ அதையே உங்களுக்கும் அவர் செய்வார் நானும் அவர்கள் ஒருவன் என்று நான் கூறமுடிந்ததால் மகிழ்ச்சியுறுகிறேன். (நீங்கள் மகிழவில்லையா?) அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் அவர்களில் நானும் ஒருவன் என கூறிட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாயுள்ளேன் அல்லேலூயா அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் அவர்களில் நானும் ஒருவன் எனக்கூறிய முடிந்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாயுள்ளேன். 88அதைக் குறித்து எத்தனை பேர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறீர்கள்? வாரும் என் சகோதரனே, இவ்வாசீர் நாடிடுவீர் அது உன் இருதயத்தை பாவத்திலிருந்து சுத்திகரிக்கும் அது ஆனந்த மணியோசை உன்னில் ஒலித்திடச் செய்யும் ஓ அது என் இருதயத்தினுள் கொழுந்து விட்டெரிகிறது ஓ அவர் நாமத்திற்கே மகிமை நானும் அவர்களுள் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்கிறேன். நானும் அவர்களுள் ஒருவன், நானும் அவர்களுள் ஒருவன் நானும் அவர்களுள் ஒருவன் என நான் கூறிட முடிந்ததால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன், அல்லேலூயா அவர்களுள் ஒருவன், நானும் அவர்களுள் ஒருவன் அவர்களுள் நானும் ஒருவன் எனக் கூறிட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். பாடலின் அடுத்த அடிகளை பாடுகையில், பின்னால் உங்களை கைகளை நீட்டி, மெதோடிஸ்ட்டுகள், பாப்டிஸ்ட்டுகள், ப்ரெஸ் பிடேரியன்கள் ஆகியவர்களுடன் உங்கள் கைகளை குலுக்குங்கள், ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒருவர் மெல்லும் பசையை (Chewing gum) இன்னொருவர் வாங்கி சுவைத்துக் கொள்ளுகிற அளவுக்கு சிநேக பாவத்தைக் காட் டுங்கள். நாம் பாடுகையில், ஒருவருக்கொருவர் உண்மையான சிநேகத்தை காட்டுங்கள். அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் எனக் கூறிட முடிந்ததால் நான் மகிழ்கிறேன். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் எனக் கூறிட முடிந்தால் நான் மகிழ்கிறேன். இந்த ஜனங்கள் கல்லாதவராயினும் உலகக் கீர்த்தியில்லாதவராயினும் அவர்கள் யாவரும் தங்கள் பெந்தெகொஸ்தேயை பெற்றுவிட்டனர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றனர் அவர்கள் இப்போது அறிவிக்கின்றனர் அவரது வல்லமை மாறாமல் உள்ளதென்று நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் நான் மகிழ்கிறேன். இப்பொழுது நாம் கருத்துடன் பாடுவோம் : அவர்களில் ஒருவன் அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் எனக் கூறிட முடிந்ததால் நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் அல்லேலூயா அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் எனக் கூறிட முடிந்ததால் நான் மிக்க மகிழ்ச்சி கொள்ளுகிறேன். அவருக்காக அடிக்கப்பட்டு இரத்த சாட்சியாக ஆகிட நீங்கள் விரும்புவீர்களா? மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற கட்டம் வந்தால், அதை எதிர்கொள்ளுவீர்களா? கிருபையினாலே; ஆம், ஐயா, ஓ தேவனே, அது எனக்கு இன்பமாயிருக்கும். ஆம், அந்த விதமாகத்தான் இந்த பிரசங்க பீடத்திலிருந்தே, நான் போக விரும்புகிறேன். சமீபத்தில் ஜெர்மனி தேசத்தில் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டிருந் தேன். என்னைக் கொல்லவிருந்தவர்கள். இரவிலும் இலக்கு தவறாது சுட வசதியுள்ள தொலை நோக்கிப் பொருத்திய துப்பாக்கி யால் சுட்டுவிட இருந்தனர். ஜெர்மன் இராணுவம் என்னைச் சுற்றிலும் காவலிருந்து என்னைக் காத்தனர். ''இங்கே இந்த ஊழியக் களத்திலேயே என்னுடைய ஆண்டவருக்காக நான் மரிப்பது எத்தனை அற்புதமான காரியமாயிருக்கும்'' என்று நான் எண்ணி னேன். ஓ அது எவ்வளவு அற்புதமான காரியமாயிருக்கிறது. 89நான் ஒரு சிறிய பாடலை பாடட்டும். நான் பாடலாமா? ஒரு சிறிய பாடலுக்கு உங்களுக்கு நேரம் இருக்கிறதா? நான் பாடலை பாடுவதில்லை, அதை நான் பேசுவது போலத் தான் பாடுகிறேன். ஓ, நான் எப்பொழுதும் பாட விரும்புகிறேன். வரும் நாட்களிலொன்றில், நீங்கள் பரதிசீலுள்ள உங்களுடைய இனிமை யான அந்த பெரிய வீட்டிற்குப் போகும் போது, அந்த காடுகளுக் குள்ளாக நானும் ரஸ்ஸல் க்ரீச்சும் இந்த வேட்டைக்காக போவோம், அங்கே தானே ஒரு சிறிய மர வீடு மூலையில் அமைந்திருக்கும். அதைப் பற்றி சகோ.நெவில் பாடுவதுண்டு. 'மகிமை வாழும் தேசத்தில், அம்மூலையில் எனக்கு ஒரு மர வீட்டை கட்டுமே' என்ற பாடலை அவர் பாடுவார். (அவர் என்னுடைய இடத்தைப் பற்றித்தான் பேசுகிறார் என்று நான் நினைக்கிறேன்)... வரும் நாட்களில் ஒன்றின் காலைப்பொழுதில், நீங்கள் அந்த மகத்தான முகப்பு மண்டபத்தினுள் நடந்து செல்லுகையில், சுற்றும் முற்றும் பார்க்கையில், அங்குள்ள மூலையில் ஒருவர் இவ்வாறு பாடுவதை நீங்கள் கேட்பீர்கள். ஆச்சரியமான கிருபை, எத்தனை இனிமை அதன் தொனி, அதுவே ஈனனான என்னை இரட்சித்தது! 90“நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம், ''ஓ, சகோ.பிரன்ஹாம் இதைப் பாடினார். அதோ அவர் அங்கே இருக்கிறார். அங்கே அவர் இப்பொழுது நின்றுகொண்டு ''ஆச்சரியமான கிருபை'' என்று பாடுகிறதை நான் கேட்க முடிகிறது'' என்று கூறுவீர்கள். என்னை அங்கே கொண்டு போய்ச் சேர்ப்பது அந்த ஆச்சரியமான கிருபைதான். ஆனால் இது இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது, ஆம் (அதனால்தான் நான் அதை பிரசங்கித்தேன்) அது இரத்தம் சொட்டிக்கொண்டு இருக்கிறது பரிசுத்த ஆவி சுவிசேஷம் இரத்தத்தால் சொட்டிக்கொண்டு இருக்கிறது சத்தியத்திற்காய் மரித்த சீஷர்களின் தொடர்ந்து இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது இந்த பரிசுத்த ஆவியின் திட்டத்திற்காக உயிர் நீத்த முதலாமவர் யோவான் ஸ்நானன்தான். ஆனால் அவர் ஒரு மனிதனைப்போல் மரித்தார் பின்பு கர்த்தராகிய இயேசு வந்தார், அவரை சிலுவையிலறைந்தனர் ஆவியானவர் மனிதனை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்று அவர் போதித்தார் அங்கே பேதுருவும், பவுலும், திவ்விய வாசகனாகிய யோவானும் இருந்தனர் இந்த சுவிசேஷம் பிரகாசிக்கப்பதற்காக அவர் தம் உயிரை துறந்தனர் பண்டைய தீர்க்கர்களின் இரத்தத்தோடு தங்கள் இரத்தத்தையும் இவர்கள் கலந்தனர். அதினால் உண்மையான தேவனுடைய வார்த்தையை உத்தமமான உரைக்க முடிந்தது. பலிபீடத்திற்குக் கீழேயுள்ள ஆத்துமாக்கள் (இந்த இரத்த சாட்சிகள்) எது வரைக்கிலும்? என்று கதறினர் தீங்கிழைத்தவர்களை கர்த்தர் தண்டிப்பதற்கான காலம் இன்னும் எவ்வாறு காலம்? (கவனியுங்கள்! விரைவாக!) இன்னும் அநேகர் தங்கள் ஜீவனின் இரத்தத்தைக் கொடுக்க விருக்கின்றனர் இந்தபரிசுத்த சுவிசேஷத்திற்காகவும் அதின் ஜீவநதிக்காகவும் அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, ஆம் அதில் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவி சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம் அது இந்த பரிசுத்த ஆவி சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது ஒரு சகோதரி அந்நிய பாஷைகளில் பேசுகிறார், ஒரு சகோதரன் அதற்கு வியாக்கியானம் அளிக்கிறார். ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார். ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறார். ஒரு சகோதரன் ஒரு வியாக்கியானத்தைத் தருகிறார் - ஆசி) ஆமென். 91'.... ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்''. நான் அவரை நேசிக்கிறேன்... (அவரை தொழுது கொள்ளுங்கள், அவர் என்ன செய்வார் என்று பாருங்கள்.) (நீங்கள் இதற்கு முன்னால் ஒரு போதும் அவரை நேசித் திருக்காவிடில், இப்பொழுது நீங்கள் அவரை நேசிக்க விரும்பு கிறீர்களா? அப்படியாயின், நீங்கள் எழும்பி நின்று அவரை அடையாளம் கண்டு கொண்டு, உங்கள் இரட்சகராக அவரை ஏற்றுக் கொள்வீர்களா?)... (தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே). என் இரட்சிப்பை கிரயத்திற்கு வாங்கினார் (யாராவது எழும்பி நின்று, “இப்பொழுதே அவர் எனக்குத் தேவை, நான் அவரை நேசிக்க விரும்புகிறேன்'' என்று கூற விரும்புவீர்களா?) கல்வாரி சிலுவையிலே... (தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே, தேவன் பின்னால் இருக்கிற அந்த வாலிபமான பெண்மணியை ஆசீர்வதிப்பாராக) நான் அவரை நேசிக்கிறேன்... (ஆவியானவர் சபைக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்க டவன்) அவர் என்னை முந்தி நேசித்தார் என் இரட்சிப்பை கல்வாரி சிலுவையில் கிரயத்திற்கு வாங்கினார் 92எங்கள் பரம பிதாவே, இங்கே நின்று கொண்டிருக்கிற இம்மூவரையும் நீர் பார்க்கிறீர். ஓ தேவனே, நித்தியமானவரே, நீர் இரக்கமாயிருக்கும் என்று ஜெபிக்கிறேன். அவர்களுடைய ஒவ்வொரு பாவத்திற்கும் மன்னிப்பையருளி, இரட்சிப்பையும், அவர்கள் ஜீவியத்தில் பரிசுத்த ஆவியையும் அருளும், இதினால் அவர்களை இரண்டாம் மரணம் தொடாமலிருக்குமே. இன்றிரவில், அவர்கள் இங்கே நின்று கொண்டிருக்கையில், ஏதோ ஒன்று சமீப மாயிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார். தேவனுடைய ஆவியானவர் மக்களுக்குள் இறங்கி, வேதவாக்கியங்களின்படியே அது கிரியை செய்து, மூன்று செய்திகள் இங்கு நின்றிருக்கும் மூவருக்கும் தலா ஒவ்வொன்றாக, உரைக்கப்பட்டு முடிந்தது, ஓ தேவனே. பிதாவே, நீர் இரக்கமாயிருக்க வேண்டுமென ஜெபிக் கிறோம். அந்த விலையேறப் பெற்ற ஆவியானவர் எங்கள் மத்தியில் நிலைத்திருக்கட்டும். அதை நாங்கள் பயபக்தியோடு கனம் பண்ணட்டும். தேவனே அதை அளித்தருளும். இந்த ஆத்து மாக்களை உம்முடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும், பிதாவே. இந்த இராத்திரியில் கொடுக்கப்பட்ட செய்தியின் கனிகள் இவர்கள்; எங்கள் மத்தியில் பேசப்பட்ட, பரிசுத்த ஆவியினிடத்திலிருந்து வந்த செய்தியின் கனிகள் இவர்கள். பிதாவாகிய தேவனே, நீர் அவர்கள் ஜீவிய காலம் முழுவதிலும் அவர்களோடு கூட இருக்க வேண்டும் என்று கேட்கிறோம். நாங்கள், கிறிஸ்துவின் இரத்தத்தாலும், கிருபையாலும் இரட்சிக் கப்பட்ட அவர்களை அந்த முடிவில்லாத உலகில்'' சந்திக்க உதவி செய்யும். நாங்கள் அவர்களை உம்மிடம் கொடுக்கிறோம், பிதாவே, அவர்களை உமது பரிசுத்த ஆவியினாலே நிரப்பும். இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரர்களே. அவர்களுக்கு அருகாமையில் நின்று கொண்டிருக்கிற கிறிஸ்த வர்களே, அவர்கள் அமருகையில் அவர்களோடு கைகுலுக்கி, அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற வாழ்த்துங்கள். பரிசுத்த ஆவி எவ்வளவாய் ஒழுங்குள்ளதாய் இருக்கிறது பாருங்கள். சரியானபடி, ஆராதனையின் முடிவில், கிரியை செய் கிறது. ''யாராவது அந்நிய பாஷையில் பேசுகிறதுண்டானால் அது இரண்டு பேர் மட்டில் அல்லது மிஞ்சினால் மூன்று பேர் மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய் பேசவும்'' என்று வேதம் கூறுகிறது. நான் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கும் போது அல்ல, அது முடிந்த பிறகே பேச வேண்டும். அவ்விதமாகத்தான் அக்காரியம் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் உண்மையான பயபக்தியோடு ஆவியானவர் என்ன சொல்லுகிறாரோ அதற்கு செவி கொடுக்க வேண்டும். அப்பொழுது என்ன நடக்கிறது? பாவிகள் உணர்த்துவிக்கப்பட்டு, மனந்திரும்ப எழும்புகிறார்கள். எண்ணிப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் கூட, வார்த்தை வெளிப்பட்டுக் கொண்டிருக்கையில், அடங்கியே இருக்கிறோர். உரிய நேரத்தில் வந்து, பிரத்தியட்சமாகிறார். 93அந்நிய பாஷைகளில் பேசுகிற இங்கிருக்கிற சிலரை நான் நன்கு அறிவேன். இன்று அந்நிய பாஷைகளில் பேசிய மூவரையுமே நான் அறிவேன். பாஷைகளுக்கு வியாக்கியானம் கொடுத்தவர்களையும் நான் அறிவேன். அவர்கள் வாழ்க்கை தேவனுக்கு முன்பாக பாவமற்று இருக்கிறதை நான் அறிவேன். சகோதரன் நெவில் அவர்கள், அவர் நம்முடைய மேய்ப்பன், மெதோடிஸ்டு சபை ஊழியக்காரராயிருந்தார். மெதோடிஸ்டு சபை ஊழியக்காரராயிருந்த சகோதரர் ஜூனியர் ஜாக்சன் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார் இங்கே. இவர்களுக்கு அந்நிய பாஷைகளில் பேசுதலும், பாஷைகளின் வியாக்கியானித்தலும் உண்டு . அவர்கள் எவ்வாறு தங்கள் சபைகளை பயபக்தியோடு, தேவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருக்குமாறு பெற் றிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர் எவ்வாறு வேதத் தின்படியே பேசுகிறார் என்பதை பாருங்கள். செய்தியானது சரியாக மக்களை போய் எட்டவில்லையென்றால், அவர் மீண்டும் பேசுகிறார். ஆனால் மூன்று தடவைகள் பேசுவதில்லை. இது வேதவாக் கியங்களின்படி உள்ளதாகும். அவர் அந்த செய்தியைக் கொடுப் பார். ஆனால் பிரசங்கத்தினூடே குழப்பிவிடுவதாக அது இருக் காது. “ஏனெனில், தீர்க்கதரிசிகளின் ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே'', ''ஒவ்வொருவரும் அமைதியாக கேட் கவும்...'' 94அந்த விதமாகத் தான் சபையானது ஒழுங்குக்குள் இருக்க வேண்டும். வெளியில் இருந்து இங்கு வந்திருக்கிற ஜனங்களே, நான் உங்களிடம் கூறுவது என்னவெனில், இதைப் பற்றி நான் கூறுவதை கேட்டிருக்கிறீர்கள், அந்த விதமாகத்தான் காரியமானது இருக்க வேண்டும். பாருங்கள், செய்தியானது புறப்பட்டுப் போகிறது. அதற்குரிய பலன் அப்பொழுதே நடக்கிறது. பகுத் தறிதல், அல்லது வேறு ஏதாவது ஆவி அதைப் போலவே ஏதா வது சம்பவிக்கிறது. அவர் அற்புதமானவராக இல்லையா? ஓ, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பரிசுத்த பவுலினால் ஏற்படுத்தப்பட்ட அதே காரியம் இன்னும் ஒழிந்து போகவில்லை. அது அப்படியே இங்கேயும் தொடருகிறது. மாறாமல் அப்படியே இருக்கிறது. நான் அவர்களில் ஒருவன் என்று கூறிக் கொள்ள முடிந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் அவ் வாறில்லையா? நாளை இரவு 7 மணிக்கு நாம் லவோதிக்கேயாவின் காலத்தை எடுத்துக் கொள்ளப்போகிறோம். அது விவாகம் நடந்த காலம். உங்களுக்கு இயலுமானால் வரப்பாருங்கள். இன்றிரவில் நான் சற்று தாமதமாக வந்தேன். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் பேசுவதினால். ஆனால் இன்றிரவில் முந்தியே முடிந்துவிட்டது. 9.20 மணிக்கெல்லாம் முடிந்துவிட்டது. வழக்கமாக நான் பத்து அல்லது பதினொரு மணி வரைக்கிலும் இங்கிருப்பதுண்டு. ஆகவே இன்றிரவு சற்று முன்கூட்டியே முடித்துள்ளோம். கர்த்தருடைய செய்தியை நீங்கள் அனுபவித்தீர்களா? உண்மை யாகவே அனுபவித்தீர்களா? அது உங்கள் ஆத்துமாவைப் போஷிக் கிறதாயிருக்கிறது. 95என் பிள்ளைகளே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். சில வேளை களில் ஆவியானவர் என்னை பற்றிக் கொள்ளும் போது, இரு பக்கங்களிலுமே அது வெட்டுகிறது. அவ்விதமாகத்தான் வார்த் தையானது இருக்கிறது. அது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாய் இருக்கிறது. அது உள்ளும் புற மும் வென்று வெட்டுகிறது. அவ்விதமாகத்தான் வார்த்தையானது இருக்கிறது. அது இருபுறம் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாய் இருக்கிறது. அது உள்ளும் புறமும் சென்று வெட்டு கிறது. எல்லாத் திசைகளிலும் வெட்டுகிறது. ஆனால் அதுவே நம்மை விருத்தசேதனம் செய்கிறது. விருத்தசேதனம் செய்தல், தேவையற்ற உபரி மாம்சத்தை, நாம் பெற்றிருக்கக் கூடாத வைகளை, அகற்றிப் போடுகிறதாயிருக்கிறது. நீங்கள் இன்று பாஷைகளின் வியாக்கியானத்தில் ஆவியானவர் கூறியதை கேட்டீர்களா? அதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதில், 'அந்த மதி யீனத்தை நிறுத்துங்கள்'' என்று கூறப்பட்டது. அது நம்மை விருத்தசேதனம் செய்கிறது. உண்மையாயிருங்கள்! நாம் யாவரும் பாதையைவிட்டு தவறிப் போய்விட்டோம். ஆனால் தேவன் எவ்வாறு நம்மை சரியான பாதையில் கொண்டுவர வேண்டு மென்பதை அறிந்திருக்கிறார். அவ்வாறே நிச்சயம் அவர் செய் கிறார். அதற்கான நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நீங்கள் நன்றியோடு இருக்கிறீர்களா? 96நீங்கள் தான் பியானோ வாசிக்கிறவரா? டெடி இருக்கிறாரா, அவரை நான் எங்கும் பார்க்க முடியவில்லை. நீங்கள் விரும்பினால் வாசியுங்கள், சகோதரி சகோ.டால்ட்டன் அவர்களே, அது உங்க ளுடைய மருமகளா? பெலம்வாய்ந்த அருமையான இளம்பெண் மணி. நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்காக நான் மகிழ்ச்சி யடைகிறேன். நம்முடைய ஆராதனைக்கு முடிவாக நாம் பாடும் அழகான நல்ல அந்தப் பாடல் என்ன? முடிக்கும் முன்னர் ஒரு பாடலை பாட முயற்சிப்போம். பாடும் முன்னர் ஒரு நிமிடம் பொறுங்கள், சகோதரி. 'இயேசு என்னும் நாமத்தை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்' என்ற பாடல். “குடும்ப ஜெபத்தை மறக்கவேண்டாம்' என்ற அந்தப் பாடலை எத்தனை பேர் அறிவீர்கள்? எத்தனை பேர்கள் குடும்பமாக ஜெபிக்கிறீர்கள்? ஓ, அது நல்லது. பழங்காலத்தில் பாடப்படும் பாட முயற்சிப்போம். குடும்ப ஜெபத்தை மறக்க வேண்டாம் இயேசு அங்கே உங்களை சந்திக்க விரும்புகிறார் அவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார், எனவே குடும்ப ஜெபத்தை மறக்கவேண்டாம். நீங்கள் அதை விரும்புகிறீர்களா? மீண்டும் அதை முயற் சிப்போம். குடும்ப ஜெபத்தை மறக்க வேண்டாம் இயேசு உங்களை அங்கே சந்திக்க விரும்புகிறார் (அவரை சந்தித்து அளவளாவ ஒரு நேரம் உங்களுக்கு கிடைத்துவிட்டது). உங்கள் கவலைகளையெல்லாம் அவர் தீர்ப்பார் ஓ குடும்ப ஜெபத்தை மறக்கவேண்டாம். 97(ஒரு சகோதரி, 'சகோ.பிரன்ஹாமே, நான் ஒன்றைக் கூறலாமா?'' என்று கேட்கிறார் - ஆசி). நிச்சயம் கூறலாம், சகோதரி. (அச்சகோதரி பேசுகிறார். ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) சகோதரி நாஷ், அது மிகவும் அருமையானது. நாம் சந்தேகமின்றி நம்புவோமானால், அவர் நிச்சயம் விடுவிப்பார் உங்கள் பாரத்தை கர்த்தரிடம் கொண்டு சென்று அங்கே விட்டுவிடுங்கள். அங்கே விட்டுவிடுங்கள், நாம் சந்தேகமின்றி நம்புவோமானால் அவர் நிச்சயம் விடுவிப்பார் எனவே உங்கள் பாரத்தையெல்லாம் கர்த்தரிடம் எடுத்துச் சென்று அவைகளை அங்கே விட்டுவிடுங்கள், நாம் சந்தேகமின்றி நம்புவோமானால் அவர் நிச்சயம் விடுவிப்பார் எனவே உங்கள் பாரத்தையெல்லாம் கர்த்தரிடம் எடுத்துச் சென்று அவரிடம் விட்டுவிடுங்கள். 98நீங்கள் இந்த பழங்காலத்து ஞானப்பாட்டுகளை விரும்ப வில்லையா? அப்பாடல்களை பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு தங்கள் பேனாக்களை எடுத்து எழுதியுள்ளார்கள் என்பதை அவை களைப் படித்துப் பார்க்கையில் தெரிகிறது. 198. பேஃனி க்ராஸ்பி என்ற அந்த குருடான பெண் கவிஞரை, அந்நாட்களில் இருந்த உலகப் பிரகாரமான மக்கள் அணுகி, அவளை லௌகீகமான பாடல்களை தங்களுக்கு எழுதும்படி செய்ய முயன்றனர். “நீ ஒரு ஒரு ஐசுவரியமான பெண்ணாகலாம்'' என்று கூறினார்கள். அந்த பெண்மணி, “நான் என் வாழ்க்கையை கிறிஸ்துவுக் கென அர்ப்பணித்துள்ளேன். என்னுடைய தாலந்துகளையும் அவருக்கே நான் உபயோகிப்பேன்'' என்றாள். அப்பெண்மணி குருடாயிருந்தாள். ”என்னுடைய ஜீவியம், மற்றும் என்னுடைய தெல்லாம் கிறிஸ்துவுக்கே சொந்தம்'' என்றாள். 99அந்த உலகப்பிரகாரமான மக்கள் அவளுக்கு அளித்த அந்த வாய்ப்பினை அவள் தள்ளிவிட்டபடியினால், அவளிடம் கடுகடுப் பாகப் பேசினர். அவள் தன்னுடைய சேஷ்டபுத்திர பாகத்தை, திரு.ப்ரெஸ்லி அவர்களைப்போல் விற்றுப் போடவில்லை. ஆனால் அவன் தன் உத்தமத்தைக் காத்துக் கொண்டாள். அவர்கள் அவளிடம், 'நீ பரலோகத்திற்குப் போகும்போது, இங்கு இருக்கிறது போலவே இருக்கும்படியான ஒரு இடமாக அது இருந்தால், அப்பொழுது நீ இங்கிருப்பது போலவே குருடாகவே இருப்பாய், அப்படியிருக்கும் நிலையில் அங்கே உன்னால் இவ்வாறு இயேசுவைக் காண முடியும்?'' என்று கேட்டனர். ''அவரை நான் அறிவேன், அவரை நான் அறிவேன்'' என்றாள். “நீ அங்கும் குருடாகவே இருந்துவிட்டால், நீ அங்கும் குருடாகவே இருந்து விட்டால்?'' என்று கேட்டனர். அதற்கு அவள், “அவருடைய கரத்திலுள்ள ஆணி கடாவப் பட்டதின் காயத் தழும்புகளை தடவிப் பார்த்து அறிந்து கொள் வேன்'' என்றாள். இவ்வாறு கூறிவிட்டு, அவர்களை விட்டகன்று, இதைப் பாடினாள். அவரை நான் அறிந்திடுவேன், அவரை நான் அறிந்திடுவேன், மீட்கப்பட்டு அவர் பக்கத்தில் நான் நிற்பேன், அவரை நான் அறிவேன், அவரை நான் அறிவேன், ஆணிகடாவப்பட்ட கைகளில் உள்ள காயத் தழும்புகளினால் ஓ என்னுடைய இயேசுவே, அந்த ஐந்து விலையேறப் பெற்ற இரத்தம் கசிந்து கொண்டிருக்கிற காயங்களைப் பார்க்கையில், நான் எவ்வாறு விலையேறப் பெற்ற அவரை மறுதலிக்க முடியும்? நான் மரிக்கட்டும், நான் அங்கே எனக்காக மரித்து இரத்தம் கசிந்த நிலையில் இருக்கும் விலையேறப்பெற்ற அவரை மறுதலிப்பது எனக்கு வேண்டாம். ஆம். 100நீங்கள் இங்கிருந்து கிளம்பிச் செல்லுகையில், இயேசுவின் நாமத்தை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள். அதை வாசியுங்கள் சகோதரி. சபையோரே நாம் எழுந்து நிற்போமா! இயேசுவின் நாமத்தை உம்மோடு எடுத்துச் செல்வீர் வருத்தமும், துக்கமும் அனுபவிக்கும் பிள்ளையே அது உனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும் செல்கின்ற இடமெங்கணும் அதை எடுத்துச் செல்வீர் விலையேறப்பெற்ற நாமம் அது (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எத்தனை இனிமை (ஓ எத்தனை இனிமை) பூமியின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியும் அவர் விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எத்துனை இனிமை (ஒ எத்தனை இனிமை) பூமியின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியும் அவர் விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எத்துணை இனிமையானது அது பூமியின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியும் அவரே. நாம் தலைகளை வணங்கி மெதுவாக இப்பாடலை பாடுவோம்: இயேசுவின் நாமத்தில் பணிந்து, அவரது பாதத்தில் முகங்குப்புற விழுந்து வணங்கி, பரலோகில் இராஜாதி இராஜாவாக அவருக்கு முடிசூடுவோம் நம் யாத்திரை முடிவடையும்போது விலையேறப் பெற்ற நாமம் அது ஓ அது எத்தனை இனிமை! பூமியின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சிமாவார் விலையேறப்பெற்ற நாமம் அது, எத்தனை இனிமை பூமியின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியும் அவரே (சகோ.நெவில் ஆராதனையை முடித்து வைக்கிறார் - ஆசி)